புலத்தேர்வி சிதறல் காரணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கதிர்மருத்துவத்திற்கான கருவிகளில், கோபால்ட்-60, கிளினாக் லினாக்- போன்றவற்றில் கதிர்கள் வெளிப்படும் போது, புல அளவுகளைக் கூட்டும் போது, வளியில் அளவீடுகளைச் செய்யும் போது அளவுகள் சற்று கூடுதலாகக் காணப்படும். இதற்கு முக்கிய காரணம் காலிமேட்டர் என்கிற புலத்தேர்வியில் தோன்றும் சிதறல்களேயாகும். ஒருகுறிப்பிட்ட புலத்தில் பெறப்பட்ட அளவிற்கும் திட்டமாகக் கொள்ளப்பட்டப் புலத்தின் அளவீட்டிற்கும் உள்ள விகிதம் புலத் தேர்விக் காரணி (Collimator scatter factor) எனப்படும். இது வெளிப்படு காரணி (Output factor) என்றும் கூறப்படும்.