புலத்தேர்வி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புலத்தேர்வி (Collimator) என்பது எக்சு-கதிர் குழாயில், புறக்கூண்டில் பொருத்தப்பட்டுள்ள ஓர் அமைப்பாகும். பெட்டிபோன்ற இவ் அமைப்பில் 45°யில் சாய்வான ஒரு மெல்லிய எக்சு கதிர்களை அதிகம் ஏற்காத மிகவும் நேர்த்தியான ஒரு கண்ணாடி உள்ளது. பக்கவாட்டில் ஒரு நல்ல ஒளியினைக் கொடுக்கும் மின் விளக்கும் உள்ளது. எக்சு-கதிர்களைத் தடுத்து நிறுத்தப் போதுமான கனமுடைய இரு இணை காரீயத் தகடுகள், கண்ணாடிக்குக் கீழ் உள்ளன. X அச்சில் ஓரிணையும் Y அச்சில் ஓரிணையும் தனித்தனியாக இயக்கி ஒளிப்புலத்தினை தேர்வு செய்ய முடியும். கவனமாக ஒளிப்புலமும் எக்சு கதிர் புலமும் ஒன்றாக இணைந்து இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பெட்டிபோன்ற அமைப்பிற்கு மேல் பகுதியில் அலுமினிய வடிகட்டியினைச் சொருக, சாளரத்திற்குக் கீழ் பாந்து (Slot) போன்ற அமைப்புள்ளது.

தேவையானப் புல அளவுடன் கதிர் பாய்ச்சப்பட வேண்டும். தேவைக்கதிகமான புல அளவு நோயாளிக்கு தேவையற்ற கதிர் வீச்சினைக் கொடுப்பதுடன் சிதறிய கதிர்களால் படத்தின் தெளிவும் குறைக்கப்படுகிறது.


ஆதாரம்[தொகு]

  • Massey and Meridith -Fundamentals of radiological physics
"https://ta.wikipedia.org/w/index.php?title=புலத்தேர்வி&oldid=3712590" இலிருந்து மீள்விக்கப்பட்டது