புற்றுநோய் வகைப்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புற்றுநோய் வகைப்பாடு (Classification of cancer ) ;கதிர்உணர்திறனைப் பொறுத்து புற்றுநோய் மூன்று வகையாகப் பிரித்து ஆராயப்படுகின்றன.

அதிக உணர்திறனுடையன( High radio sensitivity): இந்தவகை புற்றுதிசுக்களின் குணப்படும் விகிதம் (therapeutic ratio TR ) 4 முதல் 10 வரையிலுள்ளன. இதில் கருத்தொடர்புடைய புற்று, நீர்மநிலையிலுள்ளள புற்று- இரத்தப்புற்றுகள், முதலியன அடங்கும்.

குறைந்த ஆனால் முக்கியமான-உணர்திறனுடைய புற்றுநோய் திசுக்கள்.(Low sensitivity )இவைகளின் TR 1முதல் 2 வரையில் உள்ளன. இதில் தட்டைப்படை (SQumous cell ) உயிரணுக்களில் தோன்றும் புற்றும் தோல் அடிப்பகுதி (Basal cell ) புற்றும் முலைப்புற்று , நாக்கு,உதடு, தோல், கருப்பைவாய்,பெண்ணுறுப்பு, தொண்டைக்குழி முதலிய புற்றுகள் அடங்கும்.

கதிர்வீச்சால் குணப்படுத்த முடியாத கதிர் எதிர்ப்புக் குணமுடைய (Radio resistant ) புற்று. இதன் TR மதிப்பு 0 முதல் 1 வரையில் காணப்படும். இந்த தொகுதியில் வயிறு, குடல், எலும்பு, இழைப்புற்று, கொழுப்பபுத் தொடர்புடைய புற்றும் அடங்கும்.


BARC notes

"https://ta.wikipedia.org/w/index.php?title=புற்றுநோய்_வகைப்பாடு&oldid=2035968" இலிருந்து மீள்விக்கப்பட்டது