புற்றுநோயிலிருந்து மீண்டோர் தினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புற்றுநோயிலிருந்து மீண்டோருக்கான தேசிய நாள் (National Cancer Survivors Day) என்பது ஒவ்வோர் ஆண்டும் சூன் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை கொண்டாப்படுகிறது. “புற்றுநோய் அறிகுறிக்குப் பின்னரான வாழ்க்கையை யதார்த்தமாக்கிக் காட்டுவதே" இந்நாளின் நோக்கமாகும்.[1] ஐக்கிய அமெரிக்காவிலேயே இந்நாள் முக்கியமாகக் கொண்டாடப்பட்டு வந்தாலும், புற்றுநோயிலிருந்து மீண்டோருக்கான தேசிய நாள் நிறுவனம் பல உலக நாடுகளிலும் இந்நாளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வருகிறது.

இந்நாள் 1988 ஆம் ஆண்டு சூன் 5 முதல் கடைபிடிக்கப்படுகின்றது. மெரில் கேசுடிங்சு என்பவர் நியூ மெக்சிக்கோ, ஆல்புகெர்க்கி நகரத்தில் 1987 நவம்பர் 20 இல் நடைபெற்ற புற்றுநோயை எதிர்த்து வாழ்பவர்களின் மாநாட்டில் இக்கருத்தை முதன் முதலில் வெளியிட்டார்.[2] புற்றை வென்று வாழமுடியும் என்கிற நம்பிக்கையினை கொடுக்க இது உதவும். முன்பு புற்றுநோய் என்றாலே மரணம் தான் முடிவு என்ற நிலை இன்று முற்றிலும் மாறிவிட்டது. இன்று இந்நோயினை ஆரம்பநிலையிலேயே கண்டுகொண்டால் முற்றிலும் குணப்படுத்தமுடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் நவீன கருவிகளும் மிகுந்த ஆய்வுகளினால் கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகளுமே ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Official Website: National Cancer Survivors Day." National Cancer Survivors Day: A Celebration of Life. 2008. The National Cancer Survivors Day Foundation. 30 June 2008 <http://www.ncsdf.org/>.
  2. "Origin of National Cancer Survivors Day." National Cancer Survivors Day. COPING magazine. 30 June 2008 <http://www.nationalcancersurvivorsday.com/body_index.html[தொடர்பிழந்த இணைப்பு]>.
  • தி இந்து தமிழ் 5.6.16

வெளி இணைப்புகள்[தொகு]