புறா மரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வகைப்பாடு[தொகு]

தாவரவியல் பெயர் : டேவிடியா இன்வாலு கிரேட்டா (Davidia Involucrate)

குடும்பம் : டேவிடியேசியீ (Davidiaceae)

புறா மரம்

இதரப் பெயர்கள்[தொகு]

  1. ஆவிமரம் (Ghost Tree)
  2. கைகுட்டை மரம் (Pockethand Kerchief Tree)

மரத்தின் அமைவு[தொகு]

இம்மரத்தைப் பற்றி சீனாவின் இயற்கையாளரும் பிரஞ்சு மிசினினரியுமான அர்மண்ட் டேவிட் என்பவர் முதன் முதலில் விளக்கினார். இதனால் இதற்கு இவர் பெயர் இணைக்கப்பட்டுள்ளது.

டேவிடியா இன்வாலு கிரேட்டா

இது 50 முதல் 70 அடி உயரம் வளரக் கூடியது. கூம்பு வடிவில் இருக்கும். இதனுடைய இலைகள் இதய வடிவில் உள்ளது. இம்மரத்தில் உள்ள பூக்கள் அனைவரையும் கவரும் விதத்தில் உள்ளது. உருண்டையான மலர் கொத்தில் ஆண் பூக்கள் பலவும், ஒன்றிலிருந்து பல இருபால் பூக்களும் உள்ளன. இதன் அடியில் இரண்டு பூவடிச் செதில் இலைகள் சந்தன வெள்ளை நிறத்தில் தொங்கிக் கொண்டிருக்கும். இது 15 செ.மீ. நீளத்திற்கு ஒன்று பெரியதும் மற்றும் சிறியதுமாக இருக்கும். இது பார்ப்பதற்கு பச்சை இலைகளின் இடையே புறா உட்கார்ந்து இருப்பது போல தெரியும் இதனால் இதற்கு புறா மரம் என்று பெயர் வந்தது. இதனுடையே கனி, பூ முடிந்தவுடன் வரும். இலைகள் கொட்டிவிடும். விதை கல்போன்று இருக்கும்.

காணப்படும் பகுதிகள்[தொகு]

இது மேற்கு சீனாவில் வளர்கிறது

மேற்கோள்[தொகு]

| 1 || சிறியதும் - பெரியதும் [1] || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001

  1. சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு. http://books.google.com/books/about/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF.html?id=vKXyPAAACAAJ. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=புறா_மரம்&oldid=3610617" இருந்து மீள்விக்கப்பட்டது