புறநானூற்றில் இரும்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இரும்பு கண்டுபிடிப்பும், வேளாண்மையில் அதனைப் பயன்படுத்தும் முறையினையும், நாகரிகத்தையும் சங்க இலக்கியங்கள் தான் தோற்றுவித்தன. அதன் அடிப்படையில் இரும்பின் தொடர்புகளும் வேளாண்மையில் இரும்பின் பயன்படும் முக்கியத்துவம் வாய்ந்தது.

  நிலத்தில் பெரும்பான்மையாகக் காணப்படுகின்ற உலோகங்களில் இரும்பு முதன்மையானதாகும். களிமண், செம்மண், வண்டல்மண் மற்றும் கடலோர மணல்களில் இரும்பு என்ற உலோகத்தினை காந்தம் என்ற ஈர்ப்பு உலோகத்தின் மூலம் எளிதில் எடுக்கலாம். இவ்வாறு மண்ணிலிருந்து எடுக்கப் பட்ட இரும்பினை உருக்கி வளர்த்து, துவைத்துப் பல படைக்கருவிகளையும், உழவுக் கருவிகளையும் நமது முன்னோர்கள் பயன்பாட்டில் வைத்திருந்தனர்.
                          "வார் வலம்தர மறுப் பட்டன 
                                                       (புறம் 4:1)

என்றும் பாட்டில் போர்த் தொழிலில் வாள் என்னும் ஆயுதம் தற்காப்புக்கருவி மற்றும் எதிரி படைகளை அழிக்கும் பொருட்டு செய்யப்பட்டது என்பது விளங்கும்.

ஆதாரம்:

அறிவியல் தமிழ் ஆய்வு மாலை ,

தமிழ் வளர்ச்சி துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் 
மார்ச்-2016