உள்ளடக்கத்துக்குச் செல்

புறநானூறு (துறைவிளக்கம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(புறநானூறு-துறை விளக்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

புறநானூறு சங்ககால வரலாற்றை அறிய உதவும் பழமையான நூல். அதில் உள்ள ஒவ்வொரு பாடலும் இன்ன திணையைச் சேர்ந்தது என்றும், இன்ன துறையைச் சேர்ந்தது என்றும் பகுத்துக் காட்டப்பட்டுள்ளது. இந்தப் பகுப்பு தொல்காப்பியத்தை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படவில்லை, புறப்பொருள் வெண்பாமாலை இலக்கணத்தையும் தழுவவில்லை.

புறநானூற்றைத் தொகுத்தவர் அதில் உள்ள ஒவ்வொரு பாடலுக்கும் திணை, துறை பற்றிய குறிப்புகளைத் தந்துள்ளார். தொல்காப்பியர் அகத்திணையாகக் கொள்ளும் கைக்கிளை, பெருந்திணை ஆகியவற்றைப் புறநானூற்றுத் திணைக்குறிப்பு புறத்திணையில் வைத்துள்ளது. தொல்காப்பியரின் புறத்திணையில் இல்லாத பொதுவியல் என்னும் திணைக்குறிப்பு புறநானூற்றுப் பாடல்களுக்குத் தரப்பட்டுள்ளது. இவற்றால் தொல்காப்பியப் பாகுபாடு புறநானூற்றுப் பாடல்களின் திணைக்குறிப்புக்குப் பயன்படுத்தப்படவில்லை என்பது தெளிவாகிறது. துறைக் குறிப்புக்குப் புறப்பொருள் வெண்பாமாலை பயன்படுத்தப்படவில்லை என்பதைப் புறநானூற்றில் உள்ள இயன்மொழி என்னும் துறையிலுள்ள பாடல்களால் அறியலாம். எனவே, புறநானூற்றுத் திணை, துறைக் குறிப்புகளுக்குப் பயன்பட்ட இலக்கண நூல் பன்னிரு படலம் எனக் கொள்ளக்கிடக்கிறது.

புறநானூற்றுப் பாடல்களுக்குத் தரப்பட்டுள்ள துறைகளின் பெயர்களை அகர வரிசையில் இங்குக் காணலாம். அதனைச் சொடுக்கி அந்தந்தத் துறையின் விளக்கத்தையும் பெறலாம்.

துறைகள்[தொகு]

 1. அரச வாகை
 2. ஆனந்தப் பையுள்
 3. இயன்மொழி.
 4. உடனிலை.
 5. உண்டாட்டு
 6. உவகைக் கலுழ்ச்சி
 7. எருமை மறம்
 8. ஏர்க்கள உருவகம்
 9. ஏறாண் முல்லை
 10. கடவுள் வாழ்த்து
 11. கடைநிலை
 12. கடைநிலை விடை
 13. களிற்றுடனிலை
 14. காடு வாழ்த்து
 15. குடிநிலை உரைத்தல்
 16. குடைமங்கலம்
 17. குதிரை மறம்
 18. குறுங்கலி
 19. கையறுநிலை
 20. கொற்ற வள்ளை
 21. செரு மலைதல்
 22. செருவிடை வீழ்தல்
 23. செவியறிவுறூஉ
 24. தலைத்தோற்றம்
 25. தாபத நிலை
 26. தாபத வாகை
 27. தானை நிலை
 28. தானை மறம்
 29. துணை வஞ்சி
 30. தொகைநிலை
 31. நல்லிசை வஞ்சி
 32. நீண்மொழி
 33. நூழிலாட்டு
 34. நெடுமொழி
 35. பரிசில்
 36. பரிசில் கடாநிலை
 37. பரிசில் துறை
 38. பரிசில் விடை
 39. பழிச்சுதல்
 40. பாண் பாட்டு
 41. பாண் ஆற்றுப்படை
 42. பார்ப்பன வாகை
 43. பிள்ளைப் பெயர்ச்சி
 44. புலவர் ஆற்றுப்படை
 45. பூக்கோட் காஞ்சி
 46. பூவைநிலை
 47. பெருங்காஞ்சி
 48. பெருஞ்சோற்று நிலை
 49. பேய்க்காஞ்சி
 50. பொருண்மொழிக் காஞ்சி
 51. மகட்பாற்காஞ்சி
 52. மகள் மறுத்தல்
 53. மழபுல வஞ்சி
 54. மறக்களவழி
 55. மறக்கள வேள்வி
 56. மனையறம் துறவறம்
 57. முதல்வஞ்சி
 58. முதுபாலை
 59. முதுமொழிக்காஞ்சி
 60. மூதின் முல்லை
 61. வஞ்சினக் காஞ்சி
 62. வல்லாண் முல்லை
 63. வாழ்த்தியல்
 64. வாழ்த்து, புறநானூற்றுத் துறை
 65. வாள் மங்கலம்
 66. விறலி ஆற்றுப்படை
 67. வேத்தியல்

இவை தவிர துறை மறைந்துபோன பாடல்களும் உள்ளன.

இவற்றையும் பார்க்க[தொகு]

தொகுப்பு முன்னோடி[தொகு]

புறநானூறு, ஆசிரியக் குழுவினர் வெளியீடு, 1958, எஸ் ராஜம், மர்ரே அண்டு கம்பெனி, சென்னை.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புறநானூறு_(துறைவிளக்கம்)&oldid=3317159" இலிருந்து மீள்விக்கப்பட்டது