புறத்திரட்டுச் சுருக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புறத்திரட்டில் உள்ள பாடல்களில் சிலவற்றை மட்டும் தெரிந்தெடுத்து புறத்திரட்டுச் சுருக்கம் என்னும் நூலை உருவாக்கிப் பலமுறை பதிப்பித்துள்ளனர்.

புறத்திரட்டை முதன்முதலில் பதிப்பித்த சு. வையாபுரிப்பிள்ளை இதன் காலம் பதினைந்தாம் நூற்றாண்டின் முற்பகுதி (1400-1450) எனக் குறிப்பிட்டுள்ளார். இதில் உள்ள பாடல்களில் பதினெண்கீழ்க்கணக்கு செய்யுட்களுக்கு சிறந்த பாடம் கிடைத்த்தால் “இது எனக்குக் கண்ணைக் கொடுத்த நூல்” என உ. வே. சாமிநாதையர் குறிப்பிட்டுள்ளார்.

இதில் முதலாவது புறத்திரட்டுச் சுருக்கம் 45 அதிகாரங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. இதன் காலம் 16ஆம் நூற்றாண்டு.

இரண்டாவது புறத்திரட்டுச் சுருக்கத்தில் திருமலைக்கொழுந்து அவர்களின் வெண்பா உள்ளது. எனவே இதன் காலம் 17ஆம் நூற்றாண்டு.

சொற்பொழிவாளர்களுக்குப் பெரிதும் பயன்பட்டதால் ‘பிரசங்காபரணம்’ என இதனைப் போற்றியுள்ளனர்.

கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1959) திருத்தப்பட்ட பதிப்பு 2005