புறத்தாக்குடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புனித சவேரியார் தேவாலயம்

புறத்தாக்குடி (Purathakudi) என்பது இந்தியாவிலுள்ள தமிழ்நாடு மாநிலத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஓர் கிராமம். இங்கு 325 வருட பழமையான கிறிஸ்துவ தேவாலயம் மற்றும் 65 வருட பள்ளியும் அமைந்துள்ளது .

திருத்தல வரலாறு[தொகு]

325 ஆண்டுகளை கடந்து இன்றும் குன்றாத புகழுடன் சிறந்த பங்காக புறத்தாக்குடி பங்கு இயங்கி வருகிறது. "சவேரியார் பட்டினம் " என்றும் அழைக்கபடுகிறது. இப்பகுதியில் வாழும் மக்கள் முதலில் மகிழம்பாடி என்ற இடத்தில் வசித்து வந்தனர். ஒரு நாள் இப்பகுதியில் வாழ்ந்த பெண்ணொருத்தி தன் குழந்தையை தொட்டிலில் போட்டுவிட்டு தண்ணீர் பிடிக்க வெளியே சென்று விட்டாள். திரும்பி வந்து பார்க்கும் போது தொட்டிலில் குழந்தை இல்லை. குழந்தை அடுப்பின் உள்ளே எரிந்து கொண்டிருந்தது. இந்த சிறு குழந்தையை பலியாக்கியதோடு மட்டுமில்லாமல் ஈருயிர் ஓருடல் மகளிர் (கர்ப்பிணி பெண்கள்)-யும் பலி கொடுக்க வேண்டுமென்று அந்தக் கொடூரமான தேவதை "கொழந்தளாயி" கேட்டதாக வரலாறு கூறுகிறது. இதனால் கோபம் கொண்ட மக்கள் அத்தேவதையின் சிலையை ஏரியில் எறிந்து விட்டு மகிழம்பாடியின் எல்லையை விட்டு வெளியேறியதாக கூறப்படுக்கிறது.

புறம் (வெளியே) சென்று குடியேறியதால் இது புறம்+அத்து+குடி = புறத்தாக்குடி என்று அழைக்கப்படுகிறது. அப்பொழுது அங்கு வந்த யேசு சபையினர் அவர்களுக்கு திருமுழுக்கு வழங்கி கிறிஸ்துவர்களாக்கினர். கிறிஸ்துவ நெறி தழுவி குடியேறியதும் தங்களின் வழிபாட்டிற்காக ஒரு மண்மேடை அமைத்தனர். பிறகு கீழ்த்திசை நோக்கிய அமைப்பில் சிறுகோவில் கட்டினர். யேசு சபை குருக்கள் தூய சவேரியார் பெயரால் இக்கோவிலை அழைத்தனர். அதன் பிறகு இத்தாலிய பாணியில் இரு சிறகுடைய மண்டபக் கோவில் வடதிசை நோக்கி அமைந்தது. பிரஞ்சுகாரர்களுக்கும் ஆங்கிலேயருக்கும் ஏற்பட்ட இடைவிடாத போரினால் திருச்சியிலிருந்து பாண்டிசேரிக்கு புறத்தாக்குடி வழியாகவே போக்குவரத்தை அமைத்திருந்தது. போரில் இறந்த பிரஞ்சு ராணுவ அதிகாரியின் மனைவி மாறினி அவர்கள் இங்கு தங்க நேர்ந்தபோது கோவிலின் இடப்பற்றாக்குறையை உணர்ந்தார். தூய சவேரியாரின் பற்று காரணமாக ஒரு பெரிய ஆலயத்தை தெற்கு நோக்கி எழுப்பினார். இவ்வாலயம் 1255-இல் இந்திய அப்போஸ்தலரான தூய சவேரியாருக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

காலக்கண்ணாடி:[தொகு]

1680 - சேசு சபை குருக்களால் திருமுழுக்கு பெற்ற கிறிஸ்தவர்களுக்காக கோவில் எழுப்பப்பட்டது.

1715 – பிரஞ்ச் ராணுவத் தளபதியின் மனைவி மரிஹினியால் கோவில் விரிவுபடுத்தப்பட்டு, புனித சவேரியாருக்கு அர்பணிக்கப்பட்டது.

1730 – வீரமா முனிவரின் கண்காணிப்பில் இருந்தது.

1762 – பெரியவர்சீலியில் இங்கிருந்த பங்கு குரு கோயில் எழுப்பினார்.

1767 – அருள் திரு சதானந்தரின் உடல் ஞானதிக்கர் தோப்பில் அடக்கம் செய்யப்பட்டது.

1774 – சேசு சபையின் பணி முடக்கம் – கோவானிய குருக்கள் இப் பங்கின் பொறுப்பேற்றார்- பாரிஸ் அத்திய வேதபோதக சபை பொறுப்பேற்குமாறு பணிக்கப்பட்டது..

1777 – பாரிஸ் அந்நிய வேதபோதக சபையின் ( M.E.P) வருகை.

1786 – அருள்திரு. பெப்ரி (M.E.P) பங்குத்தந்தை. 6000 – 7000 கிருஸ்தவர் – சாம்பெனாய்ஸ் ஆயர் வருகை.

1800 – 76, கிருஸ்தவர்கள் கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்த கருவுருக்குச் சென்றனர். (கருர்)

1830 – பாரிஸ் மிஷனரிகள் புரத்தாக்குடி பங்கின் பொறுப்பேற்க முயலுதல்.

1835 – சேசு சபை மீண்டும் பொறுப்பேற்றல்.

1838 – அருள்திரு. கார்னியர் பங்குத்தந்தையானார்.

1839 – அருள்திரு. பெடின் பங்குத்தந்தையானார்.

1840 – இரு குடும்பங்கள் பிரிவினைச் சகோதரர் சபையில் சேர்ந்தனர். ஆண்கள் தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டது

1842 – பாண்டிச்சேரி – மதுரை மிஷன் எல்லை வரையறுக்கப்பட்டது. புரத்தாக்குடி பாண்டிச்சேரி மிஷனுக்குரியதாயிற்று. அருள்திரு. மஹெ புதிய பங்குத்தந்தையானார்.

1846 - அருள்திரு .லீகூஸ்ட் அடிகளார் பங்குத்தந்தையானார். 11 ஆண்டுகள் பணி. மிகவும் வணக்கத்திற்குரிய பொனான் ஆயரின் பங்கு விசாரனை.

1849 – புரத்தாக்குடியிலிருந்து பிரிந்து பெரியவர்சீலி தனிப்பங்காக அமைந்து,பங்குத்தந்தையரின் புதிய இல்லம் அமைக்கப்பட்டது.

1850 – பாண்டிச்சேரி மிஷனின் இங்குள்ள (தற்போதய குடந்தை மாவட்டம்) 5 மறை மாவட்டங்களில் ஒன்றாக விளங்கிற்று.

1855 – அருள்திரு. லீகூஸ்ட் அடிகள் வேதியர் பயிற்சி பள்ளியைத் தொடங்கினார்.

1857 – அருள்திரு. பெடினியர் பங்குத்தந்தையானார். மிகவும் வணக்கத்திற்குரிய – பொனான் ஆயர் அவர்களால் புதுவை மாதா – இருதய சபை மடம் இங்கு தோன்றியது. பெண்கள் தொடக்கப் பள்ளி தோற்றம்.

1863 – இறையடி அடைந்த அருள்திரு. லீகூஸ்ட் அடிகளார் உடல் ஞானாதிக்கர் தோப்பில் அடக்கம் செய்யப்பட்டது.

1865 – புதிய பங்கு குரு பிரிச்சார்டு.

1874 – உத்தமனூர் பங்கு புரத்தாக்குடியிலிருந்து பிரிதல்.

1875 – மிகவும் வணக்கத்திற்குரிய _ லவுணான் ஆயரின் பங்கு விசாரனை.

1884 – மிகவும் வணக்கத்திற்குரிய காந்தி ஆயரின் பங்கு விசாரனை. அருள்திரு.தோபியாஸ் அடிகளார் கோயிலை விரிவுபடுத்த தொடங்கினார்.

1888 – விரிவுடன் கூடிய புதிய கோவிலாய் கட்டி முடிக்கப்பட்டது.

1889 – அருள்திரு. தோபியாஸ் இறையடி சேர்தல். ஞானாதிக்கர் தோப்பில் அடக்கம் செய்யப்படுதல்.

1890 – அருள்திரு – டிடியர் _ பங்குத்தந்தையானார்.

1892 – அருள்திரு. அகஸ்டின் ஆவே பங்குத் தந்தையானார்.

1893 – அருள்திரு. சுவாமிநாதர் பங்குத்தந்தையானார். கணக்கெடுப்பு கத்தோலிக்கர்: 4000

1894 – மீண்டும் அருள்திரு. டிடியர் பங்குத் தந்தையானார்.

1895 – மந்தைவெளி பிரச்சனை _ நீதிமன்றத்தில் வழக்கு.

1897 – அருள்திரு. M.A. சேவியர் (சவரிநாதர்) பங்குத் தந்தையானார். 33 ஆண்டுகள் பணி.

1898 – 150 – கத்தோலிக்கர்கள் பிரிவினைச் சபையில் சேர்தல்.

1899 – குடந்தை மறைமாவட்டத்தின் தோற்ரம், புரத்தாக்குடி அதன் அங்கமாகுதல். நீதிமன்றம் தீர்ப்பு: வெற்றி.

1901 – இந்திய வைஸ்ராயின் ஆணை ( பங்குக்குள்ள உரிமை) பெறல்.

1906 – பிரிவினைச் சபையில் சேர்ந்தோர் மீண்டும் கத்தோலிக்கராகுதல்.

1909 – அன்னா சவரிநாதர் ஞானாதிக்கர் தோப்பில் அடக்கம் செய்யப்பட்டார்.

பங்குத் தந்தையர்கள்:[தொகு]

மதுரை மிஷன் ஆளுகை:-

1680 முதல் 1730 வரை மதுரை மிஷன் குருக்கள்

1730 முதல் 1760 வரை அருட்திரு வீரமாமுனிவர் அவர்கள்

1760 முதல் 1765 வரை அருட்திரு ஞானாதிக்கர் அடிகளார்

1765 முதல் 1774 வரை அருட்திரு தைரியநாதர் அவர்கள்

கோவா ஆளுகை:-

1774 – 1784 –-- அருட்திரு தத்துவநாதர்

1784 – 1787 --- அருட்திரு சதானந்தர்

1787 – 1796 --- அருட்திரு அருளானந்தர்

பாரிஸ் வேத போதக சபை:-

1796 – 1835 --- அருட்திரு ஃபேப்ரி

யேசு சபை ஆளுகை:-

1835 – 1839 --- அருட்திரு கார்னியா

1839 – 1842 --- அருட்திரு பெடின்

பாண்டிச்சேரி ஆளுகை:-

1842 – 1846 --- அருட்திரு மஹெ

1846 – 1857 --- அருட்திரு ஞானாதிக்கர் (லீகூஸ்ட்)

1857 – 1865 --- அருட்திரு பழனியர்

1865 – 1884 --- அருட்திரு பிரிச்சர்டு

1884 – 1889 --- அருட்திரு தோபியாஸ் (சூசைநாதர்)

1889 – 1892 --- அருட்திரு டிடியர் ஞானபிரகாசம்

1892 – 1893 --- அருட்திரு அகஸ்டின் ஆவே

1893 – 1894 --- அருட்திரு சுவாமிநாதர்

1894 – 1897 --- அருட்திரு டிடியர்

1897 – 1899 --- அருட்திரு M.A.சேவியர்

குடந்தை ஆளுகை:-

1899 – 1930 --- அருட்திரு M.A சேவியர் (சவரிநாதர்)

1930 – 1932 --- அருட்திரு L. பிரகாசம்

1932 – 1933 --- அருட்திரு J.M. ரோச்

1933 – 1944 --- அருட்திரு S. அற்புதசாமி

1944 – 1948 --- அருட்திரு J. அதிருபநாதர்

1948 – 1963 --- அருட்திரு G. சூசைநாதர்

1963 – 1965 --- அருட்திரு K.M. ஞானிநாதர்

1965 – 1972 --- அருட்திரு A. ராயப்பநாதர்

1972 – 1973 --- அருட்திரு சிலுவை அருளப்பர்

1973 – 1982 --- அருட்திரு R. அந்தோணிசாமி

1982 – 1984 --- அருட்திரு M.A. செபஸ்தியான்

1984 – 1992 --- அருட்திரு T. ஜோசப்

1992 – 1994 --- அருட்திரு P. ஆரோக்கியசாமி லூர்தஸ்

1994 – 1995 --- அருட்திரு A. லூர்துசாமி

1995 – 1997 --- அருட்திரு R. சவரிமுத்து

1997 – 2003 --- அருட்திரு L. குழந்தைசாமி

2003 – 2009 --- அருட்திரு P. தங்கசாமி

2009 - 2015 --- அருட்திரு A. சந்தியாகு

2015 - 2019 --- அருட்திரு R. பீட்டர் ஆரோக்யதாஸ்

2019 - --- முதல் அருட்திரு A.சகாயராஜ் அடிகளார்

திருவிழாக்கள்:-[தொகு]

      ஒவ்வொரு ஆண்டும் இவ்வாலயத்தில் இரு பெரும் திருவிழாக்கள் கொண்டாடப்படுகிரது.
      முதலாவதாக ஈஸ்டர் பெருவிழா இவ்விழாவானது திருநீற்று புதனில் இருந்து தொடங்கி, பெரிய வியாழன், பெரிய வெள்ளி, பெரிய சனி, பாஸ்கா ஞாயிறு வரை அன்றைய தினம் இரவு ஆண்டவரின் பாடுகளின் பாஸ்கா நிகழ்ச்சியானது நடித்து காண்பிக்கப்படும். திங்கள் கிழமை இரவு உயிர்ப்பு பாஸ்க்கு நிகழ்ச்சியானது நடித்து காண்பிக்கப்பட்டு அதன்பிறகு மூன்று சிறிய சப்பரப்பவனி நடைபெறும். செவ்வாய் கிழமை மாலை தமிழக பாரம்பரிய, கலாச்சார முறையிலான பெரிய தேர் பவனி நடைபெற்று விழாவானது இனிதே நிறைவேறும்


      இரண்டாவதாக புனித சவேரியார் ஆலயத்தினுடய பங்குத்திருவிழா. இவ்விழாவானது ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 24 ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 9 நாட்கள் நவநாள் திருப்பலி நடைபெரும். டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி அன்று இரவு  மூன்று சிறிய சப்பரப்பவனியும், அதனைத் தொடர்ந்து 3 ஆம் தேதி அன்று மாலை பெரிய தேர் பவனி நடைபெற்று விழாவானது இனிதே நிறைவேறும்



"https://ta.wikipedia.org/w/index.php?title=புறத்தாக்குடி&oldid=3421706" இலிருந்து மீள்விக்கப்பட்டது