புறக்குவியக் கதிர்வீச்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புறக்குவியக் கதிர்வீச்சு (extra-focal radiation) என்பது, எக்சு கதிர்க் குழாயில் உண்மையான குவியத்தின் புறப் பகுதியிலிருந்து தோன்றும் தேவையற்ற எக்சு கதிர்களின் தோற்றமாகும். இதற்கு முக்கிய காரணம், இலக்கினை வேகமாக மோதும் இலத்திரன்கள் அதிக வெப்பத்தினை இலக்கில் தோற்றுவிக்கின்றன. இதன் காரணமாக இலக்கில் வெப்ப இலத்திரன்கள் தோன்றுகின்றன. நேர்மின்முனையின் இலக்கைத் தவிர்த்த பிற இடங்களில் இந்த இலத்திரன்கள் மோதுவதால் அவ்விடங்களிலும் எக்சு கதிர்கள் தோற்றுவிக்கப்படுகின்றன. இவ்வாறு தோற்றுவிக்கப்படும் கதிர்கள் புறக்குவிய கதிர்கள் எனப்படுகின்றன. இந்நிகழ்வு புறக்குவிய கதிர்வீச்சு எனப்படும்.

உசாத்துணை[தொகு]

  • Fundamental Physics of Radiology—Massey and Meridith

வெளி இணைப்புகள்[தொகு]