புர்ஜ் கலிபா/துபாய் மால் (துபாய் மெட்ரோ நிலையம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புர்ஜ் கலிபா/துபாய் மால்

புர்ஜ் கலிபா / துபாய் மால் (Burj Khalifa/Dubai Mall) ஓர் துபாய் மெட்ரோ விரைவுப் போக்குவரத்து நிலையம் ஆகும். இது துபாய் மெட்ரோ சிகப்பு வழித்தடத்தில் அமைத்துள்ளது. இது துபாய் மெட்ரோவின் பரபரப்பான நிலையங்களில் ஒன்றாகும். இது 2011 ஆம் ஆண்டில் 3.180 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் இதன் வழியே பயணம் செய்துள்ளனர்.[1] [2]

இடம்[தொகு]

புர்ஜ் கலிபா/துபாய் மால் மெட்ரோ நிலையம் ஷேக் சயீத் சாலை நிதி மைய சாலை மற்றும் அல் சஃபா சாலை ஆகியவற்றுக்கு இடையேயான பரிமாற்றத்தின் தெற்கே அமைந்துள்ளது. நேரடியாக கிழக்கு நோக்கி பெரிய டவுன்டவுன் துபாய் வளர்ச்சி மையம் உள்ளது. இதில் உலகின் மிக உயரமான கட்டிடம் புர்ஜ் கலீஃபா மற்றும் துபாய் மால் உள்ளதால் இதன் பெயர் புர்ஜ் கலிபா/துபாய் மால் மெட்ரோ நிலையம் என்று பெயரிடப்பட்டது.

துபாய் நீரூற்று மற்றும் தி அட்ரஸ் டவுன்ட்டவுன் பூர்ஜ் துபாய் உள்ளிட்ட பல முக்கிய இடங்களுக்கு இது மிக அருகில் உள்ளது.

மேடை தளவமைப்பு[தொகு]

நடைமேடை வரி நோக்கி
ரஷீடியா சிவப்பு கோடு (மேலே) புர்ஜுமான், யூனியன், ரஷீடியாவுக்கு
யுஏஇ பரிமாற்றம் சிவப்பு கோடு (கீழே) மால் ஆஃப் தி எமிரேட்ஸ், டமாக் பிராபர்டீஸ், யுஏஇ எக்ஸ்சேஞ்ச்

குறிப்புகள்[தொகு]