புரோமோ(டெட்ரா ஐதரோதயோபீன்)தங்கம்(I)
தோற்றம்
| இனங்காட்டிகள் | |
|---|---|
| 39929-22-1 | |
| ChemSpider | 57434281 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 85808834 |
| |
| பண்புகள் | |
| C4H8AuBrS | |
| வாய்ப்பாட்டு எடை | 365.04 g·mol−1 |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
புரோமோ(டெட்ரா ஐதரோதயோபீன்)தங்கம்(I) (Bromo(tetrahydrothiophene)gold(I)) என்பது C4H8AuBrS என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். தங்கத்தின் ஒருங்கிணைவுச் சேர்மமான இது பரவலாகப் பயன்பாட்டில் உள்ள குளோரோ(டெட்ரா ஐதரோதயோபீன்)தங்கம்(I) சேர்மத்துடன் தொடர்பு கொண்டுள்ளது. இதேபோல், இதில் உள்ள டெட்ரா ஐதரோதயோபீன் ஈந்தணைவி நிலையற்ற தன்மை கொண்டுள்ளது; எனவே, இது மற்ற வலிமையான ஈந்தணைவிகளால் எளிதில் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டு, நேர்கோட்டு வடிவத் தங்கப் புரோமைடு அணைவுச் சேர்மங்களை உருவாக்குகிறது.
இச்சேர்மமானது, டெட்ரா ஐதரோதயோபீனுடன் டெட்ராபுரோமோ ஆரிக் அமிலத்தை (டெட்ராகுளோரோ ஆரிக் அமிலம் மற்றும் ஐதரோபுரோமிக்கு அமிலத்திலிருந்து உருவாகும்) வினைபுரியச் செய்வதன் மூலம் தயாரிக்கப்படுகிறது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Eiter, Lauren C.; Hall, Nathan W.; Day, Cynthia S.; Saluta, Gilda; Kucera, Gregory L.; Bierbach, Ulrich (2009). "Gold(I) Analogues of a Platinum–Acridine Antitumor Agent are only Moderately Cytotoxic but Show Potent Activity Against Mycobacterium Tuberculosis". Journal of Medicinal Chemistry 52 (21): 6519–22. doi:10.1021/jm9012856. பப்மெட்:19803526.