புரோமோபென்சீன்
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
புரோமோபென்சீன் | |||
வேறு பெயர்கள்
பீனைல் புரோமைடு;
புரோமோபென்சோல்; மோனோபுரோமோபென்சீன் | |||
இனங்காட்டிகள் | |||
108-86-1 | |||
ChEBI | CHEBI:3179 | ||
ChEMBL | ChEMBL16068 | ||
ChemSpider | 7673 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
KEGG | C11036 | ||
பப்கெம் | 7961 | ||
வே.ந.வி.ப எண் | CY9000000 | ||
| |||
பண்புகள் | |||
C6H5Br | |||
வாய்ப்பாட்டு எடை | 157.01 g·mol−1 | ||
தோற்றம் | நிறமற்ற திரவம் | ||
மணம் | நறுமணமுடைய அரோமாட்டிக் வாசனை | ||
அடர்த்தி | 1.495 கி.செ.மீ−3, நீர்மம் | ||
உருகுநிலை | −30.8 °C (−23.4 °F; 242.3 K) | ||
கொதிநிலை | 156 °C (313 °F; 429 K) | ||
0.041 கி/100 மி.லி | |||
கரைதிறன் | டை எத்தில் ஈதர், ஆல்ககால், CCl4, பென்சீன் ஆகியனவற்றில் கரைகிறது. குளோரோஃபார்ம் உடன் கலக்கிறது | ||
ஆவியமுக்கம் | 4.18 மி.மீ Hg | ||
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.5602 | ||
பிசுக்குமை | 1.124 cP (20 °செல்சியசு) | ||
தீங்குகள் | |||
ஈயூ வகைப்பாடு | Xi N | ||
R-சொற்றொடர்கள் | R10, R38, R51/53 | ||
S-சொற்றொடர்கள் | (S2), S61 | ||
தீப்பற்றும் வெப்பநிலை | 51 °C (124 °F; 324 K) | ||
Autoignition
temperature |
565 °C (1,049 °F; 838 K) | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
புரோமோபென்சீன்(Bromobenzene) என்பது C6H5Br என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அரைல் ஆலைடான இச்சேர்மம், புரோமினைப் பயன்படுத்தி பென்சீனை அரோமாட்டிக் எலக்ட்ரான்நாட்ட பதிலீட்டு வினைக்கு உட்படுத்துவதன் மூலம் உருவாகிறது. நிறமற்ற அல்லது வெளிர் மஞ்சள் நிறத்தில் தெளிவான நீர்மமாக புரோமோபென்சீன் காணப்படுகிறது. மெத்தனால், டை மெத்தில் ஈதர் ஆகிய கரிமக் கரைப்பான்களில் நன்றாகவும், குளிர் நீரில் சிறிதளவும் கரையக்கூடியதாக உள்ளது[1]. பென்சீனுடன் எத்தனை புரோமின் அணுக்கள் சேர்ந்திருந்தாலும் அல்லது கூடுதலாக பதிலீடு செய்யப்பட்டிருந்தாலும் அரிதாக சிலசமயங்களில் அவற்றை புரோமோபென்சீன் என்ற சொல்லாலேயே அழைக்கிறார்கள்.
தயாரிப்பு
[தொகு]தொழிற்சாலைகளில் இரும்புத்தூள் முன்னிலையில் பென்சீனுடன் புரோமினைச் சேர்த்து தொகுப்புமுறையில் புரோமோபென்சீன் தயாரிக்கிறார்கள்.
பயன்கள்
[தொகு]சுசுகி வினை போன்ற பலேடியம் வினையூக்க இணைப்பு வினைகள் வழியாக பீனைல் தொகுதியை அறிமுகப்படுத்துவதற்கு புரோமோபென்சீன் பயன்படுத்தப்படுகிறது. தொடர்புடைய கிரிக்னார்டு வினைப்பொருளான பீனைல்மக்னீசியம் புரோமைடு தயாரிப்பதற்கு புரோமோபென்சீன் பயன்படுத்தப்படுகிறது. மேலும், இதனுடன் கார்பன் டை ஆக்சைடு சேர்த்து பென்சாயிக் அமிலம் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. பெருமளவில் பென்சைக்கிளிடின் தயாரிக்க உதவும் ஒரு முன்னோடிச் சேர்மமாகவும் புரோமோபென்சீன் பயன்படுத்தப்படுகிறது.
மருந்தியல்
[தொகு]புரோமோபென்சீன் ஒரு நச்சுப்பொருளாகும். இதை சுவாசிக்க நேரிட்டாலோ அல்லது தோலின் வழியாக உட்கிரகிக்கப்பட்டாலோ கல்லீரல் மற்றும் நரம்புத் தொகுதிகள் பாதிப்புக்கு உள்ளாகும் [2].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-02-24. பார்க்கப்பட்ட நாள் 2016-09-20.
- ↑ http://hazard.com/msds/mf/baker/baker/files/b4080.htm