புரோமோபுளோரோமெத்தேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புரோமோபுளோரோமெத்தேன்
Bromofluoromethane.png
Bromofluoromethane-3D-vdW.png
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
புரோமோ(புளோரோ)மெத்தேன்
வேறு பெயர்கள்
புரோமோபுளோரோமெத்தேன்
புரோமோபுளோரோமீத்தேன்
புரோமோபுளோரோமெத்திலீன்
சி.எப்.சி 31பி1
ஆர் 31பி1
இனங்காட்டிகள்
373-52-4 Yes check.svgY
ChemSpider 55059 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 61108
பண்புகள்
CH2BrF
வாய்ப்பாட்டு எடை 112.93 கி/மோல்
தோற்றம் வளிமம்
கொதிநிலை 19 °C (66 °F; 292 K)
கட்டமைப்பு
மூலக்கூறு வடிவம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

புரோமோபுளோரோமெத்தேன் (Bromofluoromethane) என்பது CH2BrF என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். வாயுக்கள் கலந்த ஆலோமீத்தேன் சேர்மமான இது ஆல்ககாலில் கரைகிறது மற்றும் குளோரோபார்மில் மிகவும் நன்றாகக் கரைகிறது.

இதன் திட்ட மோலார் எந்திரோப்பி மதிப்பு Soவாயு 276.3 யூல்/(மோல் கெல்வின்) மற்றும் வெப்பக் கொண்மம் cp மதிப்பு 49.2 யூல்/(மோல் கெல்வின்).

தயாரிப்பு[தொகு]

இன்று வரையில் புரோமோபுளோரோமெத்தேன் அதிகப்பயன் கொடுக்காத மூன்று முறைகளில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

1.புளோரோ அசிட்டிக் அமிலத்தின் உப்புகளிலிருந்து அன்சுடைக்கர் வகை வினையின் மூலம் தயாரித்தல்,

2.டைபுரோமோபுளோரோமெத்தேன் சேர்மத்தை சுவார்ட்சு வினையாக்கியைப் பயன்படுத்தி ஒடுக்க வினைமூலம் புரோமின் நீக்கம் செய்து தயாரித்தல்,

3.டை ஆலோமெத்தேனை ஆலசன் பரிமாற்ற வினைக்கு உட்படுத்தி அல்லது ஆலோமெத்தேனை ஒரு வினையூக்கியைப் பயன்படுத்தி புரோமினேற்றம் அல்லது புளோரினேற்றம் செய்து தயாரித்தல் என்பன அம்மூன்று தயாரிப்பு முறைகளாகும்.

கரிம வெள்ளீயம் ஐதரைடு சேர்மத்தைப் பயன்படுத்தி ஒடுக்க புரோமின் நீக்கம் செய்து தயாரிக்கும் முறையில் சற்று கூடுதலாக இச்சேர்மம் உற்பத்தியாகிறது[1].

பயன்கள்[தொகு]

வேதிப்பொருள்கள், மருந்துவகைப் பொருள்கள், இடைநிலை வேதிப்பொருள்கள் போன்றவற்றை தயாரிப்பதில் புரோமோபுளோரோமெத்தேன் ஒரு முக்கியமான வினைப்பொருளாகப் பயன்படுகிறது. 0.73 ஒசோன் குறைப்புத் திறன் மதிப்பைக் கொண்டுள்ள காரணத்தால் புரோமோபுளோரோமெத்தேன் பயன்பாடு கட்டுப்படுத்தப்படுகிறது. இதனுடைய சமவியல்பு மாற்றியனான CH
2Br18F சேர்மத்தில் புளோரின்-18 (18F) இடம்பெற்றிருப்பதால் இது கதிரியக்க வேதியியலில் பயன்படுத்தப்படுகிறது. .

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]