உள்ளடக்கத்துக்குச் செல்

புரோமின்(I) புளோரோசல்போனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புரோமின்(I) புளோரோசல்போனேட்டு
Bromine(I) fluorosulfonate
பெயர்கள்
வேறு பெயர்கள்
புரோமின்(I) புளோரோசல்பேட்டு[1] புரோமின் புளோரோசல்பேட்டு
இனங்காட்டிகள்
13997-93-8 Y
ChemSpider 67033872 N
InChI
  • InChI=1S/BrFO3S/c1-5-6(2,3)4
    Key: BWQHCHYXXFFAKU-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 13267198
  • O=S(=O)(OBr)F
பண்புகள்
BrFO3S
வாய்ப்பாட்டு எடை 178.96 g·mol−1
தோற்றம் கருஞ்சிவப்பு நீர்மம்
அடர்த்தி 2.60 கி/செ.மீ3
கொதிநிலை 120.5 °செல்சியசு
நீருடன் வினை புரியும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

புரோமின்(I) புளோரோசல்போனேட்டு (Bromine(I) fluorosulfonate) என்பது BrSO3F என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். புளோரின், கந்தகம், புரோமின், ஆக்சிசன் ஆகிய தனிமங்கள் இச்சேர்மத்தின் உட்கூறுகளாக உள்ளன. இது புளோரோசல்போனேட்டுகள் குழுவைச் சேர்ந்த புரோமினின் ஓர் ஒற்றை இணைதிறன் சேர்மமாகும்.

தயாரிப்பு

[தொகு]

இதேபோல், மற்ற ஆலசனோபுளோரோசல்போனேட்டுகள் போலவே, புரோமின் பெராக்சிடைசல்பியூரைல் டைபுளோரைடுடன் வினைபுரியும்போது இந்தச் சேர்மம் உருவாகிறது.[2][3]

Br2 + S2O6F2 -> 2BrSO3F

புரோமின்(III) புளோரோசல்போனேட்டைக் குறைக்கும்போது புரோமின்(I) புளோரோசல்போனேட்டும் கிடைக்கிறது:[4]

Br(SO3F)3 + Br2 -> 3BrSO3F

வேதிப் பண்புகள்

[தொகு]

புரோமோ(I) புளோரோசல்போனேட்டு கருஞ்சிவப்பு நிறமுடைய, பாகுத்தன்மை கொண்ட, நீராற்பகுப்பிற்கு உணர்திறன் கொண்ட ஒரு திரவமாகும். இது நீருடன் தீவிரமாக வினைபுரிகிறது. குளிர்விக்கும்போது, ​​கண்ணாடி போன்ற திட நிலைக்கு உறைகிறது.

50 °செல்சியசு வெப்பநிலைக்கு மேற்பட்ட வெப்பநிலைகளில், புரோமோ(I) புளோரோசல்போனேட்டு சேர்மமானது அயோடின்(I) புளோரோசல்போனேட்டுடன் வினைபுரிந்து டைபுரோமோ அயோடோபுளோரோசல்போனேட்டை உருவாக்குகிறது.:[5]

2BrSO3F + ISO3F -> IBr2(SO3F)3

மேற்கோள்கள்

[தொகு]
  1. Earl, Boyd L.; Hill, Brian K.; Shreeve, Jean'ne M. (1 December 1966). "Reactions of Bromine(I) Fluorosulfate with Simple Inorganic Molecules and Polyfluoroolefins. A Novel Route to Perfluoro-2,3-butanedione". Inorganic Chemistry (journal) 5 (12): 2184–2186. doi:10.1021/ic50046a024. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. https://pubs.acs.org/doi/10.1021/ic50046a024. பார்த்த நாள்: 18 August 2025. 
  2. Cotton, F. Albert (2009). Progress in Inorganic Chemistry: Volume 14. New York: John Wiley & Sons. p. 65. ISBN 978-0-470-16658-1. Retrieved 14 August 2025.
  3. Brauer, Georg (1975). Handbook of Preparative Inorganic Chemistry. 3rd, revised edition. Volume I (PDF) (3., umgearb. Aufl ed.). Stuttgart: Ferdinand Enke. p. 339. ISBN 3-432-02328-6. Retrieved 14 August 2025.
  4. Roberts, John E.; Cady, George H. (1 January 1960). "Halogen Fluorosulfonates BrSO3F, Br(SO3F)3 and I(SO3F)3". Journal of the American Chemical Society 82 (2): 352–353. doi:10.1021/ja01487a023. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. Bibcode: 1960JAChS..82..352R. https://pubs.acs.org/doi/abs/10.1021/ja01487a023. பார்த்த நாள்: 14 August 2025. 
  5. Niedenzu, Kurt; Zimmer, Hans (2013). Annual Reports in Inorganic and General Syntheses (PDF). Academic Press. p. 109. ISBN 978-1-4832-1388-0. Retrieved 14 August 2025.