உள்ளடக்கத்துக்குச் செல்

புரோப்பியோனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புரோப்பியோனேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
புரோப்பியோனேட்டு
Propionate
வேறு பெயர்கள்
புரோப்பனோயேட்டு, புரோப்பனோயிக் அமில
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

புரோப்பியோனேட்டு (Propionate) என்பது C2H5COO− என்ற வாய்ப்பாடு கொண்ட ஒர் அயனியாகும். இதை புரோப்பனோயேட்டு அயனி என்ற பெயராலும் அழைக்கிறார்கள். புரோப்பியோனிக் அமிலத்தினுடைய இணை காரம் புரோப்பியோனேட்டு ஆகும். புரோப்பனாயிக் சேர்மம் என்பது ஓர் எளிய உப்பாகும் அல்லது புரோப்பியோனிக் அமிலத்தினுடைய எசுத்தர் ஆகும். இச்சேர்மங்களில் புரோப்பியோனேட்டு என்பதை பெரும்பாலும் சுருக்கமாக CH3CH2CO2 என்று எழுதுவார்கள் அல்லது எளிமையாக EtCO2 என்று எழுதுவார்கள்.

புரோப்பியோனேட்டுகளும் புரோப்பெனோயேட்டுகளும் வெவ்வேறான சேர்மங்களாகும். இவற்றை ஒன்றாகக் கருதுதல் தவறாகும். CH2=CHCOO− என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட அக்ரைலேட்டுகளே பொதுவாக புரோப்பெனோயேட்டுகளாகும். அக்ரைலிக் அமிலத்தினுடைய அயனிகள் அல்லது உப்புகள் அல்லது எசுத்தர்கள் புரோப்பெனோயேட்டுகள் எனப்படுகின்றன. இவற்றை 2-புரோப்பெனோயிக் அமிலம் அல்லது அக்ரைலிக் அமிலம் என்றும் அழைக்கிறார்கள்.

குறுகிய சங்கிலி கொழுப்பு அமிலங்களாக புரோப்பியோனேட்டுகள் அறியப்படுகின்றன. உணவிலுள்ள செரிக்கப்படாத கார்போவைதரேட்டுகளை மனித குடல் மைக்ரோபயோட்டாக்கள் இத்தகைய கொழுப்பு அமிலங்களாக மாற்றுகின்றன[1].

உதாரணங்கள்[தொகு]

சோடியம் புரோப்பனோயேட்டு - Na(C2H5COO)

மெத்தில் புரோப்பியோனேட்டு - C2H5(CO)OCH3

கால்சியம் புரோப்பியோனேட்டு - Ca(C2H5CO2)2

பொட்டாசியம் புரோப்பியோனேட்டு - KC2H5CO2

பிளட்டிக்கேசோன் புரோப்பியோனேட்டு- C25H31F3O5S

மேற்கோள்கள்[தொகு]

  1. How gut microbes talk to organs: The role of endocrine and nervous routes. https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC5004142 | Section 2.1, paragraph 2: The microbial fermentation of carbohydrates in the gut typically produces acetate, propionate, butyrate, and lactate, which are specific SCFAs.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோப்பியோனேட்டு&oldid=2543150" இலிருந்து மீள்விக்கப்பட்டது