புரோப்பனாயிக் நீரிலி
| பெயர்கள் | |
|---|---|
| விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
புரோப்பனாயிக் நீரிலி | |
| வேறு பெயர்கள்
புரோப்பியானிக் நீரிலி புரோப்பனாயில் புரோப்பனோயேட்டு | |
| இனங்காட்டிகள் | |
| 123-62-6 | |
| ChemSpider | 29003 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 31263 |
| வே.ந.வி.ப எண் | UF9100000 |
| |
| பண்புகள் | |
| C6H10O3 | |
| வாய்ப்பாட்டு எடை | 130.14 கி/மோல் |
| தோற்றம் | நீர்மம், வினீகரின் மணம் |
| அடர்த்தி | 1.015 கி/செ.மீ3, நீர்மம் |
| உருகுநிலை | −42 °C (−44 °F; 231 K) |
| கொதிநிலை | 167 முதல் 170 °C (333 முதல் 338 °F; 440 முதல் 443 K) |
| வினைபுரிந்து புரோப்பனாயிக் அமிலம் உருவாகும் | |
| பிசுக்குமை | 1.144 cP at ?°C |
| தீங்குகள் | |
| தொழில்சார் நலமும் பாதுகாப்பும்: | |
முக்கிய இடர்கள் |
தீப்பிடிக்கும் |
| தீப்பற்றும் வெப்பநிலை | 63 °C (145 °F; 336 K) |
| பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
புரோப்பனாயிக் நீரிலி (Propanoic anhydride) என்பது (CH3CH2CO)2O. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இந்த எளிய அமில நீரிலி நிறமற்ற நீர்மமாகக் காணப்படுகிறது. கரிமத்தொகுப்பு வினைகளில் இது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
தயாரிப்பு
[தொகு]புரோப்பனாயிக் அமிலத்தை கீட்டீன் சேர்மத்தைப் பயன்படுத்தி நீர்நீக்க வினைக்கு உட்படுத்தி புரோப்பனாயிக் நீரிலியைத் தயாரிக்கிறார்கள்:[1]
- 2 CH3CH2CO2H + CH2=C=O → (CH3CH2CO)2O + CH3CO2H
பாதுகாப்பு
[தொகு]கடுமையான நெடியும் அரிக்கும் தன்மையும் கொண்டதாக புரோப்பனயிக் நீரிலி காணப்படுகிறது. தோலின் மீது பட நேர்ந்தால் தீப்புண்கள் உண்டாகும். கண்கள், நுரையீரல் ஆகியவற்றிலும் புரோப்பனாயிக் நீரிலியின் ஆவி கடுமையான பாதிப்புகளை உருவாக்கும்.
சட்ட அங்கீகாரம்
[தொகு]பென்டானில் மற்றும் பென்டானில் வழிப்பொருட்களைத் தயாரிப்பதில் ஒரு முன்னோடிச் சேர்மமாகக் கருதப்படுவதால் புரோபனாயிக் நீரிலியைப் பயன்படுத்துவது முறைப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க மருந்து அமுலாக்க நிர்வாக அமைப்பு கட்டுப்படுத்தப்பட்ட பொருட்கள் சட்டத்தின்படி புரோப்பனாயிக் நீரிலியை பட்டியல் 1 வகைப் பொருட்கள் எனப்பட்டியலிட்டுள்ளது [2].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Williams, J. W. Krynitsky, J. A. (1955). "n-Caproic Anhydride". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv3p0164.; Collective Volume, vol. 3
- ↑ "Drugs of Abuse Publication, Chapter 2". Archived from the original on 2007-12-20. Retrieved 2017-08-17.