உள்ளடக்கத்துக்குச் செல்

புரோடாக்டினியம்(V) ஆக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புரோடாக்டினியம்(V) ஆக்சைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
புரோடாக்டினியம்(V) ஆக்சைடு
இனங்காட்டிகள்
12036-75-8
InChI
  • InChI=1S/5O.2Pa
    Key: LDJMPPCAULZCAH-UHFFFAOYSA-N
  • InChI=1S/10O.4Pa
    Key: YHCILLCTPZINHI-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
Image
  • O=[Pa](=O)O[Pa](=O)=O
  • O=[Pa]12O[Pa]3(=O)O[Pa](=O)(O1)O[Pa](=O)(O2)O3
பண்புகள்
Pa
2
O
5
வாய்ப்பாட்டு எடை 542.0688 g mol−1
தோற்றம் வெண்மையான ஒளிபுகா படிகங்கள்
கட்டமைப்பு
படிக அமைப்பு செஞ்சாய்சதுரம்
புறவெளித் தொகுதி Fm-3m, No. 225
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

புரோடாக்டினியம்(V) ஆக்சைடு (Protactinium(V) oxide) என்பது Pa2O5. என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட கனிம வேதியியல் சேர்மம் ஆகும். ஐதரசனைப் பயன்படுத்தி இதை ஒடுக்க வினைக்கு உட்படுத்தினால் புரோடாக்டினியம்(IV) ஆக்சைடு உருவாகிறது. ஆர்சிடிட்டு வி. குரோசு முதன்முதலில் 1927[1] ஆம் ஆண்டு 2 மில்லிகிராம் சேர்மத்தைத் Pa2O5 தயாரித்தார். புரோடாக்டினியம்(V) ஆக்சைடு அடர் நைட்ரிக் அமிலத்தில் கரைவதில்லை. ஆனால் ஐதரோ புளோரிக் அமிலம் மற்றும் HF + H2SO4 கலவை ஆகியவற்றில் கரைகிறது. உயர் வெப்பநிலைகளில் கார உலோகங்கள் மற்றும் காரமண் உலோகங்களின் திண்ம ஆக்சைடுகளுடன் வினை புரிகிறது[2][3]

பிற புரோடாக்டினியம் சேர்மங்களைப் போல புரோடாக்டினியம்(V) ஆக்சைடும் கதிரியக்கத் தன்மையும், நச்சுத்தன்மையும் கொண்டது ஆகும். அரிதாகக் கிடைக்கும் இது மிககுறைவான் தொழில்நுட்பப் பயன்களைக் கொண்டுள்ளது. Nb, Mg, Ga மற்றும் Mn ஆகிய தனிமங்களின் கலப்பு ஆக்சைடுகள் 0.005–0.52% Pa2O5 உடன் மாசாக கலக்கப்பட்டு உயர்வெப்பநிலைகளில் (1300 °செல்சியசு வரை) மின்காப்புப் பொருளாக பீங்கான் மின்தேக்கிகளில் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.3rd1000.com/elements/Protactinium.htm
  2. Boris F. Myasoedov, H. W. Kirby, & Ivan G. Tananaev (2006) Protactinium, Chapter 4 in Morss, Lester R. & Edelstein, Norman M. & Fuger, Jean, (edit.) The Chemistry of the Actinide and Transactinide Elements பரணிடப்பட்டது 2017-08-26 at the வந்தவழி இயந்திரம் (PDF) (3. painos). Dordrecht: Springer. ss. 161–252.
  3. Sellers, Philip A.; Fried, Sherman; Elson, Robert E.; Zachariasen, W. H. (1954). "The Preparation of Some Protactinium Compounds and the Metal". Journal of the American Chemical Society 76: 5935. doi:10.1021/ja01652a011.