புரோசுட்டேட் சுரப்பி நீக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புரோசுட்டேட் சுரப்பி நீக்கம்
இடையீடு
ICD-9-CM60.2-60.6
MeSHD011468

புரோசுட்டேட் சுரப்பி நீக்கம், அல்லது முன்னிற்குஞ்சுரப்பி நீக்கம் (prostatectomy) என்பது அறுவைச் சிகிச்சை மூலம் புரோசுடேட் சுரப்பியை முழுமையாகவோ பகுதியாகவோ நீக்குதலாகும்.[1] பெரும்பாலும் தீதிலி முன்னிற்குஞ்சுரப்பி மிகைப்பெருக்கம் (BPH), அல்லது சிலநேரங்களில் வழமையில்லா கட்டிகள், அல்லது பிற காரணங்களால் ஏற்படும் இச்சுரப்பியின் பெருக்கம் சிறுநீர்வழியில் வழமையான சிறுநீர்ப் போக்கிற்கு தடை ஏற்படுத்துவதால் நோயாளிக்கு சிறுநீர் முழுமையாக வெளியேறாமல் சிரமம் உண்டாகிறது. இதற்கான வேதி மருந்துகள் துவக்கநிலையிலேயே தரப்பட்டால் இந்த அறுவை சிகிச்சை தேவையிராது. ஆனால் சிறுநீர்ப்போக்கு பெரிதும் தடைபடும்போது இதனால் கடுமையான சிறுநீரகக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இத்தகைய நேரங்களில் மருத்துவரீதியாக இச்சுரப்பி நீக்கப்படுகிறது. இச்சுரப்பியில் புற்றுநோய் வருவதற்கான தீவாய்ப்புள்ள நோயாளிகளுக்கும் புரோசுட்டேட் புற்றுநோய் உள்ளவர்களுக்கும் இச்சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளிகள் இரண்டு மூன்று நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டியிருக்கும்.[2] கத்தீட்டர் எனப்படும் குழாய் நோயாளியின் தேங்குப்பையிலிருந்து இரண்டு மூன்று வாரங்களுக்கு சிறுநீர் வெளியேற்ற இணைக்கப்படும். இதனால் சிறுநீர் கழிப்பதை கட்டுப்படுத்த நோயாளி சிறிதுகாலம் தடுமாறலாம்.

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Prostate cancer: Treatments and drugs - MayoClinic.com". mayoclinic.com. பார்க்கப்பட்ட நாள் May 4, 2010.
  2. "Radical prostatectomy". webmd.com. பார்க்கப்பட்ட நாள் May 4, 2010.