புரோசன் பீவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

புரோசன் பீவர் (Frozen Fever) என்பது 2015 ஆம் ஆண்டு வால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்து வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் வெளியிட்ட  அமெரிக்க கணினி-அனிமேஷன் இசை கற்பனை குறும்படம் ஆகும். இத் திரைப்படம்  2013 ஆம் ஆண்டு வெளிவந்த புரோசன் திரைப்படத்தை மையமாக கொண்டு வெளிவந்த குறும் படமாகும்.  இக் குறும்படம் கிறிஸ்டாஃப் , ஸ்வென் மற்றும் ஓலாஃப் ஆகியோரின் உதவியுடன் எல்சா, அன்னாவிற்கு வழங்கிய பிறந்தநாள் விருந்தின் கதையைச் சொல்கிறது. கிறிஸ் பக் மற்றும் ஜெனிபர் லீ ஆகியோரின் இயக்கத்திலும், புரோசன் திரைப்படத்தில் நடித்த கிறிஸ்டன் பெல் , இடினா மென்செல் , ஜொனாதன் கிராப் மற்றும் ஜோஷ் காட்  நடிப்பிலும் வெளிவந்தது.

புரோசன் பீவர்
இயக்கம்
 • கிறிஸ் பக்
 • ஜெனிபர் லீ
தயாரிப்பு
 • பீட்டர் டெல் வெச்சோ
 • எமி ஸ்கிரிப்னர்
இசைகிறிஸ்டோப் பெக்[1]
நடிப்பு
படத்தொகுப்புஜெப் ட்ரகீம்
கலையகம்
விநியோகம்வால்ட் டிஸனி ஸ்டுடியோஸ் மோசன் பிக்சர்ஸ்
வெளியீடு2015 மார்ச் 13
ஓட்டம்7 நிமிடங்கள்[2]
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்

இந்த குறும் படத்தின் தயாரிப்பு பணிகள் 2014 ஆம் ஆண்டு சூன் மாதம் தொடங்கியது. 2015 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் திகதி  வால்ட் டிஸ்னியின் சிண்ட்ரல்லா திரைப்படத்துடன் திரையரங்குகளில் திரையிடப்பட்டது. விமர்சகர்களிடம் இருந்து நேர்மறையான விமர்சனங்களப் பெற்றது.  கிறிஸ்டன் ஆண்டர்சன்-லோபஸ் மற்றும் ராபர்ட் லோபஸ் ஆகியோரின் புதிய பாடலான " மேக்கிங் டுடே எ பெர்பெக்ட் டே " பாடல் பாராட்டுக்களை  பெற்றது.

கதைச்சுருக்கம்[தொகு]

கிறிஸ்டாஃப் , ஸ்வென் மற்றும் ஓலாஃப் ஆகியோரின் உதவியுடன் அன்னாவிற்கு  பிறந்தநாள் விழா கொண்டாட  எல்சா திட்டமிடுகிறார். எல்சாவிற்கு சளி பீடித்திருக்கின்றது. எல்சா ஒவ்வொரு முறை தும்மும் போதும் அவரை அறியாமல் சிறிய பனி பொம்மைகள் உருவாகின்றார்கள். சிறிய பனி பொம்மைகள் கிறிஸ்டாப்பின் எதிர்ப்பை மீறி பிறந்தநாள் விருந்தின் அலங்காரங்களை அகற்றத் தொடங்குகிறார்கள். எல்சா அன்னாவை ஆச்சிரியப்படுத்துவதற்காக பல பரிசுப் பொருட்களை வழங்க அழைத்துச் செல்கிறார். கிறிஸ்டாஃப், ஸ்வென் மற்றும் ஓலாஃப் பனிபொம்மைகளை கட்டுப்படுத்தவும், அன்னா மற்றும் எல்சா திரும்பி வருவதற்குள் அலங்காரங்களை சரிசெய்யவும் முயற்சி செய்கிறார்கள். இதற்கிடையில், எல்சாவின் நிலை விரைவாக மோசமடைகிறது. மேலும் அவர் காய்ச்சலால் மயக்கமடைகிறார். எல்சா ஒரு கடிகார கோபுரத்திலிருந்து விழப் பார்க்கிறார். அன்னா அவரை  ஓய்வெடுக்கச் சொல்கிறார். அன்னாவின் பிறந்த நாளை கொண்டாட முடியாமல் போனதற்காக எல்சா அன்னாவிடம் மன்னிப்பு கேட்கிறார். இருவரும் கோட்டைக்கு திரும்பிச் செல்கின்றனர். கோட்டையின் கதவுகள் திறக்கப்படும் போது கிறிஸ்டாஃப், ஓலாஃப், ஸ்வென் மற்றும் சிறிய பனிபொம்மைகள் மலை போல் குவிந்து இருக்க அன்னா ஆச்சிரிப்படுகிறார். எல்சா மீண்டும் தும்முகிறார். அவர் தும்மும் போது வெளிப்படும் பனி பொம்மைகளை பார்க்கிறார். எல்சா அன்னாவின் எதிர்ப்பை மீறி ஊதி ஒன்றில் ஊதுகிறார் அதனால் பெரிய பனி பந்தொன்று உருவாகின்றது. அது தீவொன்றில் வேலை செய்யும் ஹான்ஸ்சை தாக்குகிறது. (ப்ரோசன் திரைப்படத்தில் எல்சாவிற்கு இழைத்த துரோகத்திற்கு தண்டனையாக தொழுவத்தை சுத்தம் செய்கிறார்) . பிறகு எல்சா அன்னாவின் கவனிப்பில் ஓய்வெடுக்க, கிறிஸ்டாஃப் மற்றும் ஸ்வென் சிறிய பனி பொம்மைகளை எல்சாவின் பனி அரண்மனைக்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கு பனி அரண்மனை காவலராக மார்ஷ்மெல்லோ (பெரிய பனிமனிதன்) இருக்கின்றது.

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பும் வெளியீடும்[தொகு]

2014  செப்டம்பர் 2 இல் வால்ட்  டிஸ்னி அனிமேஷன் ஸ்டூடியோவின் தலைமை படைப்பாக்க அதிகாரி புரோசன் திரைப்படத்தை மையமாக கொண்ட பாடலுடன் கூடிய குறும்படமொன்று வெளியிடப்படும் என்று அறிவித்தார். [3]அதே நாளில் வெரைட்டி சஞ்சிகை இந்த குறும்படம் 2015 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்படும் என்றும், கிறிஸ் பக், ஜெனிபர் லீ இயக்குனர்கள் எனவும் , பீட்டர் டெல் வெச்சோ தயாரிப்பாளர் என்றும், கிறிஸ்டன் ஆண்டர்சன் லோபஸ், ராபர்ட் லோபஸின் புதிய பாடலுடன் வெளிவரும் என்றும் தெரிவித்தது.[4][5][6]2014 திசம்பர் 3 இல் இந்த குறும்படம் வால்ட் டிஸ்னியின் சிண்ட்ரெல்லா திரைப்படத்துடன் 2015 மார்ச் 13 ஆம் திகதி வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டது.[7][8]

மேற்கோள்கள்[தொகு]

 1. "'Frozen Fever' to Feature Music by Christophe Beck". Film Music Reporter. February 6, 2015. Archived from the original on February 7, 2015. https://web.archive.org/web/20150207204734/http://filmmusicreporter.com/2015/02/06/frozen-fever-to-feature-music-by-christophe-beck/. பார்த்த நாள்: February 12, 2015. 
 2. "Exclusive First Look at Disney's 'Frozen Fever' Trailer". ABC News. மூல முகவரியிலிருந்து August 16, 2015 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் October 7, 2015.
 3. "'Frozen' characters to return for a new short film, says Disney" (en).
 4. Graser, Marc (2014-09-03). "‘Frozen’ Characters to Return in ‘Frozen Fever’ Animated Short" (en).
 5. "Disney's New 'Frozen' Short Film Will Premiere in Spring 2015" (en-US) (2014-09-03).
 6. "'Frozen Fever': Disney to bring back Elsa and Anna for animated short" (en).
 7. "'Frozen' Short Film to Screen in Front of Disney's 'Cinderella'" (en).
 8. Graser, Marc (2014-12-03). "‘Frozen Fever’ Short to Debut in Front of Disney’s ‘Cinderella’" (en).
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோசன்_பீவர்&oldid=2815188" இருந்து மீள்விக்கப்பட்டது