புரூனோ ஓபெர்லெ
புருனோ ஓபெர்லே (Bruno Oberle) சுவிஸ் உயிரியலாளர் மற்றும் சுற்றுச்சூழல் விஞ்ஞானி ஆவார். 13 சூலை 2020 அன்று அவர் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் பொது இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
வாழ்க்கை வரலாறு
[தொகு]ஓபெர்லெ, 12 அக்டோபர் 1955 இல் சுவிட்சர்லாந்தின் செயின்ட் காலனில் பிறந்தார். இவர், லோகார்னோ மற்றும் சூரிச்சில் வளர்ந்தார். இவர் சூரிக்கில் உள்ள சுவிட்சர்லாந்து நடுவண் தொழில்நுட்ப நிறுவனத்தில் உயிரியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் பிரிவுகளைத் தேர்ந்தெடுத்து தனது முனைவர் பட்டத்தைப் பெற்றார்.[1]
ஓபெர்லெ இகோல் பாலிடெக்னிக் ஃபெடரெல் டி லாசன்னே நிறுவனத்தில் பேராசிரியராக இருந்தார். இதே நிறுவனத்தின் பசுமைப் பொருளாதாரம் மற்றும் வளங்கள் நிர்வகிப்புத் துறையின் தலைவராகவும் பணிபுரிந்தார். இவர் சுற்றுச்சூழல் சுவிஸ் கூட்டமைப்பு அலுவலகத்தின் முன்னாள் இயக்குநராகவும் இருக்கிறார் [2] கூடவே, சுற்றுச்சூழல் துறையின் மாநில செயலாளராகவும் பணிபுரிந்தார்.[3] தற்போது, இவர் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் இயக்குநர் ஜெனரலாக உள்ளார்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Bruno Oberle". World Resources Forum (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2021-10-09. Retrieved 2020-07-14.
- ↑ "Bruno M.C Oberle - Panel Member - Switzerland". International Resource Panel (IRP). 7 July 2020. Retrieved 14 July 2020.
- ↑ "Bruno Oberle". IRGC (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 14 July 2020. Retrieved 2020-07-14.
- ↑ "Dr Bruno Oberle named IUCN Director General". IUCN (in ஆங்கிலம்). 2020-07-13. Retrieved 2020-07-14.