உள்ளடக்கத்துக்குச் செல்

புரூணை மலாய் மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புரூணை மலாய் மக்கள்
Bruneian Malays
Orang Melayu Brunei
பிரித்தானிய வடக்கு போர்னியோவில், புரூணை மலாய் பெண்கள் (1920s–1930s)
மொத்த மக்கள்தொகை
~330,000[1] (1999 மதிப்பீடு)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 புரூணை

 மலேசியா
சரவாக் (மிரி, இலாவாசு, இலிம்பாங்)
சபா (சிபித்தாங் மாவட்டம், பியூபோர்ட் மாவட்டம், கோலா பென்யூ மாவட்டம், பாப்பார் மாவட்டம், கோத்தா கினபாலு)
லபுவான்


மொழி(கள்)
புரூணை மலாய் மொழி; மலேசிய மொழி
சமயங்கள்
சன்னி இசுலாம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
மலாய் மக்கள், புரூணை பழங்குடிகள்

புரூணை மலாய் மக்கள் (மலாய்: Orang Melayu Brunei; ஆங்கிலம்: Bruneian Malays; சாவி: اورڠ ملايو بروني) என்பவர்கள் போர்னியோ தீவின் புரூணை; மலேசியாவின் லபுவான், சபா, சரவாக் மாநிலங்களில் வாழும் பழங்குடி மக்கள் ஆவர்.

மலாய் உலகின் பிற பகுதிகளில், அதாவது மேற்கு மலேசியா, சரவாக்கின் மத்தியப் பகுதி; மற்றும் தெற்குப் பகுதிகள், சிங்கப்பூர், இந்தோனேசியா மற்றும் தெற்கு தாய்லாந்து போன்ற நிலப்பகுதிகளில் காணப்படும் மலாய் இனக்குழுவின் ஒரு துணைக்குழுவினர் ஆவர். இவர்கள் இன அடிப்படையில் ஒருவருக்கு ஒருவர் தொடர்பு உடையவர்களாகவும்; இசுலாத்தைப் பின்பற்றும் மக்களாக இருந்தாலும்; மொழி மற்றும் மரபு வகையில் வெளிப்படையான வேறுபாடுகளைக் கொண்டுள்ளனர்.

பொது

[தொகு]

1963-இல் மலேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்படுவதற்கு முன்னரோ அல்லது பின்னரோ, பல தலைமுறைகளாகக் கிழக்கு மலேசியாவில் பிறந்தவர்கள் அல்லது அங்கு வசித்து வரும் அனைத்து புரூணை மலாய்க்காரர்களும் இந்த மலேசியக் கூட்டமைப்பில் அடங்குவர். அவர்கள் தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் மலேசிய மலாய்க்காரர்களாகவே கருதப்படுகிறார்கள்.

மேலும், மேற்கு மலேசிய மாநிலங்களிலும், சரவாக்கின் மத்தியப் பகுதி மற்றும் தெற்குப் பகுதிகளில் வசிக்கும் மலேசிய மலாய்க்காரர்களைப் போன்ற அதே தகுதியை இவர்களும் பெற்றுள்ளனர்.

புரூணை மலாய் மக்கள் என்பவர் கடசான் மக்கள், டூசுன் மக்கள், ஒராங் உலு மக்கள், இபான் மக்கள், மலாக்கா போர்த்துகீசியர்கள் (கிறிஸ்தாங்), மூருட்டு மக்கள், ருங்குஸ் மக்கள், பைத்தான் மக்கள் (ஒராங் சுங்கை), பஜாவு மக்கள், தவுசுக் மக்கள், மெலனாவு மக்கள், மலேசிய சயாமியர்[2] போன்ற இனக்குழுக்களுடன் இணைந்து, மலேசிய மலாய் மக்கள் தொகையின் ஒரு துணைக் குழுவாகவும்; பூமிபுத்திரா (மலேசியா)வின் ஒரு பகுதியினராகவும் வரையறுக்கப் படுகிறார்கள்.

சொற்பிறப்பியல்

[தொகு]

அரசு சார்ந்த புள்ளிவிவரங்களின்படி, 1921-ஆம் ஆண்டு புரூணை இனப்பிரிவு மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பின்னரே "புரூணை மலாய்க்காரர்கள்" (Bruneian Malays) என்ற சொல் சட்டப்படியாக ஏற்றுக் கொள்ளப்ட்டது. 1921-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு 1906 மற்றும் 1911-ஆம் ஆண்டு கணக்கெடுப்புகளில் இருந்து வேறுபட்டதாகும், ஏனெனில் அவை பாருணேயசு (Barunays - புரூணையர்கள்) என்று மட்டுமே குறிப்பிட்டிருந்தன.[3]

அதுவே புரூணையர்கள் தங்களின் மலாய் அடையாளம் குறித்த கருத்துணர்வில் ஏற்பட்ட ஒரு மாற்றத்தைக் குறிக்கலாம்.[4] மேற்கத்திய நாடுகளால் புரூணை நாட்டைப் பற்றி பதிவு செய்யப்பட்ட தொடக்ககால ஆவணம் லுடோவிகோ டி வர்தேமா (Ludovico di Varthema) என்ற இத்தாலியரின் ஆவணமாகும். மலுக்கு தீவுகளில் அவர் சந்தித்த மக்களை விட புரூணை மக்கள் வெண்மையான நிறத்தைக் கொண்டுள்ளனர் என்றும் கூறியுள்ளார்.[5] 1550-ஆம் ஆண்டு வரையிலான அவரின் ஆவணங்களின்படி;

நாங்கள் மலூக் தீவில் (Maluch) இருந்து ஏறக்குறைய 200 மைல் தொலைவில் உள்ள 'போர்னே' (புரூணை அல்லது போர்னியோ) தீவை வந்தடைந்தோம். இந்தத் தீவு சற்றே பெரியதாகவும், மிகவும் தாழ்வானதாகவும் இருப்பதைக் கண்டோம். அங்குள்ள மக்கள் புறச்சமயத்தினர் ஆவர்; மற்றும் நல்மனம் கொண்டவர்கள். மற்ற இனத்தவரை விட இவர்களின் தோல் நிறம் வெண்மையானது; இந்தத் தீவில் நீதி சிறப்பாக செயல்படுகிறது.[5][6]

லியு இங் செங் (Liu Yingsheng) மற்றும் பெங்கிரான் கரீம் பெங்கிரான் ஒசுமான் (Pengiran Karim Pengiran Osman) போன்ற வரலாற்றாசிரியர்கள் சிலர், புரூணை மலாய்க்காரர்கள் சீனப் பெருநிலத்துடன் தொடர்புடையவர்கள் என்று குறிப்பிட்டுள்ளனர். 14-ஆம் நூற்றாண்டின் புரூணை சுல்தானகத்தை விட மிகவும் பழமையான, 6-ஆம் நூற்றாண்டின் லியாங் வரலாற்று ஆவணம் (Book of Liang) போன்ற சீன வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில் அக்கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன. இந்த ஆவணங்கள் தொடக்ககால புரூணை இராச்சியத்திற்கும் சீனாவுக்கும் இடையிலான கூட்டுவாழ்வுத் தொடர்புகள், தொடக்ககால கடல்வழி வணிகம், அரசதந்திரம் மற்றும் தெற்கு சீனப் பகுதியிலிருந்து மக்களின் இடப்பெயர்வு போன்றவற்றை விவரிக்கின்றன.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Clynes 2001, ப. 11.
  2. "SENARAI SUKU/KAUM/KETURUNAN YANG DIANGGAP SEBAGAI BUMIPUTERA" [LIST OF TRIBES/RACE/DESCENTS CONSIDERED AS BUMIPUTERA] (PDF). Special Bumiputera Share Allocation, Ministry of Investment, Trade and Industry of Malaysia (in மலாய்). p. 1. Archived (PDF) from the original on 18 September 2025. Retrieved 15 March 2026.
  3. Hussainmiya 2010, ப. 68.
  4. Hussainmiya 2010, ப. 69.
  5. 1 2 Lamport 2018, ப. 100.
  6. Bala 2005, ப. 211.
  7. Yingsheng & Pg. Osman 1991, ப. 1.

நூல்கள்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

மேலும் படிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரூணை_மலாய்_மக்கள்&oldid=4623387" இலிருந்து மீள்விக்கப்பட்டது