உள்ளடக்கத்துக்குச் செல்

புரூணை டாலர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புரூணை டாலர்
Brunei Dollar
புரூணை டாலர்கள்
ஐ.எசு.ஓ 4217
குறிவார்ப்புரு:ISO 4217/maintenance-category
சிற்றலகு0.01
அலகு
குறியீடு$, B$
மதிப்பு
துணை அலகு
1100sen
வங்கித்தாள்
 அடிக்கடி பயன்படுத்தப்படப்படும் வங்கித்தாள்(கள்)$1, $5, $10, $50, $100
 அரிதாக பயன்படுத்தப்படப்படும் வங்கித்தாள்(கள்)$20, $25, $500, $1000, $10,000
உலோக நாணயம்
 அடிக்கடி பயன்படுத்தப்படப்படும்
உலோக நாணயம்(கள்)
5, 10, 20, 50 சென்
 அரிதாக பயன்படுத்தப்படப்படும்

உலோக நாணயம்(கள்)

1 சென்
மக்கள்தொகையியல்
பயனர்(கள்) புரூணை
 சிங்கப்பூர்
வெளியீடு
நடுவண் வங்கிபுருணை தாருசலாம் நாணய ஆணையம்
Monetary Authority of Brunei Darussalam
 இணையதளம்bdcb.gov.bn
மதிப்பீடு
பணவீக்கம்0.2% - 2017[1]
உடன் இணைக்கப்பட்டதுசிங்கப்பூர் டாலர்

புரூணை டாலர் (ஆங்கிலம்: Brunei Dollar B$; மலாய் மொழி: Ringgit Brunei); currency code: BND) என்பது 1967-ஆம் ஆண்டில் இருந்து புரூணை சுல்தானகத்தில் (Sultanate of Brunei) பயன்படுத்தப்பட்டு வரும் பணத் தாள் (Currency) ஆகும். பொதுவாக டாலர் $ அடையாளத்துடன் அல்லது மற்ற டாலர் மதிப்புள்ள நாணயங்களில் இருந்து வேறுபடுவதற்கு மாற்றாக B$ எனும் அடையாளத்துடன் சுருக்கமாக அழைக்கப்படுகிறது.[2]

ஒரு புரூணை டாலர், 100 செண்டுகளைக் (100 cents) கொண்டது. புரூணை டாலரை புரூணை தாருசலாம் நாணய ஆணையம் (Monetary Authority of Brunei Darussalam) வெளியிடுகிறது.

வரலாறு

[தொகு]

புரூணையின் தொடக்கக் கால நாணயத்தில் சோகி கடல் நத்தைகளின் உருவங்கள் இருந்தன. புரூணை அதன் வெண்கல தேனீர் பாத்திரங்களுக்கும் பிரபலமானது, அவை வடக்கு போர்னியோ கடற்கரையில் பண்டமாற்று வர்த்தகத்தில் நாணயமாகப் பயன்படுத்தப்பட்டன.

20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஐக்கிய இராச்சியத்தின் பாதுகாப்பில் இருந்த போது, புரூணை நாடு, 1906 முதல் நீரிணை டாலரையும், 1939 முதல் மலாயா டாலரையும், 1953 முதல் 1967 வரை மலாயா பிரித்தானிய போர்னியோ டாலரையும் பயன்படுத்தியது. அதன் பின்னர் தன் சொந்த நாணயத்தை வெளியிடத் தொடங்கியது.

நாணயங்கள்

[தொகு]

1967-ஆம் ஆண்டில், 1, 5, 10, 20 மற்றும் 50 சென்ட் பிரிவுகளில் நாணயங்கள் அறிமுகப் படுத்தப்பட்டன. வெண்கல 1 சென்ட் தவிர, மற்ற நாணயங்கள் நிக்கல் உலோகத்தில் வெளியிடப்பட்டன. 1986-ஆம் ஆண்டில், தாமிரத்தால் மூடப்பட்ட எஃகு வெண்கலத்தை மாற்றியது. பின்னர், 2008-ஆம் ஆண்டில், 1 சென்ட் நாணயங்களின் அமைப்புகளை பித்தளைக்கு மாற்றப்பட்டன.

பணத்தாள்கள்

[தொகு]

12 ஜூன் 1967-இல், புரூணை அரசாங்கம் (Kerajaan Brunei) 1, 5, 10, 50 மற்றும் 100 டாலர்களை அறிமுகப்படுத்தியது. 1979-ஆம் ஆண்டில் 500 மற்றும் 1000 டாலர்களுக்கான குறிப்புகள் தொடர்ந்து வந்தன. 1989-ஆம் ஆண்டில், காகிதப் பணத்தின் தலைப்பு நாட்டின் அதிகாரப்பூர்வப் பெயரான நெகாரா புருனே தாருசலாம் (Negara Brunei Darussalam) என மாற்றப்பட்டது.

10,000 டாலர் குறிப்புகள் அதே ஆண்டில் அறிமுகப் படுத்தப்பட்டன. எல்லா எழுத்துக் குறிப்புகளும் மலாய் மொழியிலும் மற்றும் ஆங்கிலத்திலும் உள்ளன. முன்பு மலாய் மொழியின் கீழே ஆங்கில எழுத்துக்கள் இருந்தன. ஆனால் இப்போது ஜாவி எழுத்துகளும் உள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Brunei" (in ஆங்கிலம்). Central Intelligence Agency. 2022-07-01. Archived from the original on 21 July 2015. பார்க்கப்பட்ட நாள் 2022-07-14.
  2. Linzmayer, Owen (2011). "Brunei". The Banknote Book. San Francisco, CA: www.BanknoteNews.com. Archived from the original on 23 September 2015. பார்க்கப்பட்ட நாள் 21 August 2011.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


மேலும் காண்க

[தொகு]

‎ ‎

"https://ta.wikipedia.org/w/index.php?title=புரூணை_டாலர்&oldid=3668514" இலிருந்து மீள்விக்கப்பட்டது