உள்ளடக்கத்துக்குச் செல்

புரூணை சுல்தான் முகைதீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புரூணை சுல்தான் முகைதீன்
Sultan Muhyiddin
Muhyiddin of Brunei
புரூணை சுல்தான்
ஆட்சிக்காலம்1673–1690
முன்னையவர்சுல்தான் அப்துல் அக்குல் முபின்
பின்னையவர்சுல்தான் நசுருதீன்
பிறப்பு1643 (1643)
கோத்தா பாரு, புரூணை சுல்தானகம்
இறப்பு1690 (அகவை 46–47)
புரூணை
துணைவர்பாங்கீரான் அனாக் புத்ரி சித்தி மரியா
குழந்தைகளின்
பெயர்கள்
  • இளவரசர் சா முபின்
  • பெங்கீரான் அனாக் காசிம்
மரபுபோல்கியா மரபுவழி
தந்தைஅப்துல் சலீலுல் அக்பர்
தாய்ராடின் மாஸ் ஆயு சித்தி ஆயிசா
மதம்சன்னி

சுல்தான் முகைதீன் (மலாய்; Sultan Muhyiddin; ஆங்கிலம்: Muhyiddin of Brunei; சாவி: محيي الدين ابن عبد الجليل الأكبر) என்பவர் (ஆட்சி: 1673-1690) புரூணையின் 15-ஆவது சுல்தான்;; மற்றும் சுல்தான் அப்துல் சலீலுல் அக்பரின் நான்காவது மகன் ஆவார். புரூணை உள்நாட்டுப் போரின் போது தம்முடைய எதிராளியான சுல்தான் அப்துல் அக்குல் முபினை தோற்கடித்து அரியணை ஏறினார்.

பின்னணி

[தொகு]

தம்முடைய மாமனார் சுல்தான் முகம்மது அலியின் படுகொலையைத் தொடர்ந்து, சுல்தான் அப்துல் அக்குல் முபின் ஆட்சியில் இருந்தபோது அவரிடமிருந்து பெங்கிரான் பெண்டகாரா செரி மகாராஜா பரமேசுவாரா என்ற பட்டத்தைப் பெற்றார்.

சுல்தான் முகைதீன், சுல்தான் அப்துல் சலீலுல் ஜபாரின் ஒரே தாய்க்குப் பிறந்த தம்பி ஆவார்.[1] படுகொலை செய்யப்பட்ட சுல்தானின் ஆதரவாளர்களைச் சமாதானப்படுத்தும் பொருட்டு, சுல்தான் முகமது அலியின் மருமகன் எனும் சுல்தான் முகைதீனுக்கு இந்தப் பட்டம் வழங்கப்பட்டது.[2]

இறப்பு

[தொகு]

சுல்தான் முகைதீன் 1690-இல் இறந்தார். அவருக்குப் பிறகு பெங்கிரான் அனாக் சுசு நஸ்ருதீன் இபின் பெங்கிரான் முடா பெசார் அப்துல்லா (Pengiran Anak Chucu Nasruddin ibnu Pengiran Muda Besar Abdullah) புரூணை சுல்தானாகப் பதவி ஏற்றார். அவருக்கு சுல்தான் நசிருதின் எனும் அரசப் பெயர் வழங்கப்பட்டது.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Kesultanan Brunei Darussalam | Kerajaan Nusantara". www.kerajaannusantara.com. Retrieved 2023-04-07.
  2. ↑ "Civil war wrecks chaos in the country". The Brunei Times. Archived from the original on 14 June 2012. Retrieved 20 January 2012.
அரச பட்டங்கள்
முன்னர் புரூணை சுல்தான்
1673–1690
பின்னர்

வெளி இணைப்புகள்

[தொகு]