புரூணை சுல்தான்
| புரூணை சுல்தான் Sultan of Brunei Sultan Brunei | |
|---|---|
புரூணை சுல்தான் அசனல் போல்கியா | |
| ஆட்சிக்காலம் | 5 அக்டோபர் 1967 இன்று வரையில் |
| முன்னையவர் | உமர் அலி சைபுடியன் III |
| பிரதிநிதி | அல்-முகததீ பில்லா |
புரூணை சுல்தான் (ஆங்கிலம்: Sultan of Brunei; மலாய்: Sultan Brunei; சாவி: سلطان بروني) என்பவர் புரூணையின் முடியாட்சித் தலைவர்; மற்றும் புரூணையின் தலைமை அமைச்சர் எனும் தகுதியில் அரசுத் தலைவர் ஆவார். 1984-இல் பிரித்தானியரிடம் இருந்து விடுதலை பெற்றதிலிருந்து, ஒரே ஒரு சுல்தான் மட்டுமே புரூணை நாட்டை ஆட்சி செய்து வருகிறார். புரூணை அரச அமைப்பு 14-ஆம் நூற்றாண்டிலிருந்து இயங்கி வருகிறது.[1]
புரூணையின் சுல்தானை, ஆளும் போல்க்கியா மரபுவழியின் ஓர் பகுதியாகக் கருதலாம்; அதன் தலைமுறைகள் முதல் சுல்தானான முகமது சா என்பவரிடம் இருந்து வந்தவை. பதின்மூன்றாவது சுல்தானான சுல்தான் அப்துல் அக்குல் முபின் என்பவரால் தற்காலிகமாக இந்த மரபுவழி நீக்கப்பட்டது. சுல்தானின் முழுப் பட்டப்பெயர் புருணை தாருசலாம் அரசின் மாட்சிமை பொருந்திய சுல்தான் யாங் டி-பெர்துவான் நெகாரா (His Majesty The Sultan and Yang di-Pertuan Negara of Brunei Darussalam).[1] சரவாக், லபுவான் மற்றும் சபா ஆகிய மூன்று நிலப்பகுதிகளையும் ஐரோப்பியர் கைப்பற்றுவதற்கு முன்பு, புரூணையின் சுல்தான் அந்த நிலப்பகுதிகளின் சுல்தானாகவும் அறியப்பட்டார்.
சுல்தான்கள் பட்டியல்
[தொகு]| No. | படிமம் | பெயர் | பதவி ஏற்பு | பதவி முடிவு | குறிப்பு |
|---|---|---|---|---|---|
| 1 | புரூணை சுல்தான் முகமது சா / அவாங் அலாக் பெதாத்தார் | 1363[2] அல்லது 1368 | 1402 | சுல்தானகத்தை நிறுவுதல்.[2] | |
| 2 | சுல்தான் அப்துல் மஜித் அசன் / மகாராஜா கருணா | 1402 | 1408 | சீனா, நாஞ்சிங்கில் காலமானார். | |
| 3 | புரூணை சுல்தான் அகமத் / அவாங் பாத்தே பெர்பாய் | 1408 | 1425 | ||
| 4 | புரூணை சுல்தான் சரீப் அலி / சுல்தான் பெர்காட் | 1425 | 1432 | இவருக்கு நேரடி அரச மரபுவழி இல்லை. ஆனால் அவர் சுல்தான் அகமதின் மருமகனாகவும் இசுலாமிய அறிஞராகவும் இருந்த காரணத்தால் புரூணை சுல்தானாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். | |
| 5 | புரூணை சுல்தான் சுலைமான் | 1432 | 1485 | முந்தைய சுல்தானின் மகனான சரீப் அலி, போல்க்கியா சுல்தானாகப் பதவி ஏற்பதற்கு வழிவிடும் வகையில், தன் மகனைப பதவி துறக்கச் செய்தார். | |
| 6 | புரூணை சுல்தான் போல்க்கியா / நககோதா ராகம் | 1485 | 1524 | தம் ஆட்சிக்காலத்தில் பீரங்கிகளைப் பயன்படுத்திய முதல் சுல்தான். | |
| 7 | புரூணை சுல்தான் அப்துல் ககார் | 1524 | 1530 | ||
| 8 | புரூணை சுல்தான் சைபுல் ரிசால் | 1533 | 1581 | புரூணைக்கும் இஸ்பெயினுக்கும் இடையே காசுடிலியா போர் மூண்டது. | |
| 9 | புரூணை சுல்தான் சா | 1581 | 1582 | முந்தைய சுல்தானின் மூத்த மகன் | |
| 10 | புரூணை சுல்தான் முகமது அசன் | 1582 | 1598 | முந்தைய சுல்தானின் சகோதரர் | |
| 11 | புரூணை சுல்தான் அப்துல் சலீலுல் அக்பர் | 1598 | 1659 | முந்தைய சுல்தானின் மகன் | |
| 12 | புரூணை சுல்தான் அப்துல் சலீலுல் ஜபார் | 1659 | 1660 | முந்தைய சுல்தானின் மகன் | |
| 13 | புரூணை சுல்தான் முகமது அலி | 1660 | 1661 | சுல்தான் முகமது அசனின் மகன். சுல்தான் அப்துல் அக்குல் முபினால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதன் விளைவாக புரூணை உள்நாட்டுப் போர் மூண்டது. | |
| 14 | புரூணை சுல்தான் அப்துல் அக்குல் முபின் | 1660 | 1673 | பதவியில் இருந்த சுல்தான் முகமது அலியைக் கொன்று புரூணைப் போரைத் தொடங்கிய இவர், பின்னர் இவருக்குப் பின் சுல்தானாகப் பதவியேற்ற சுல்தான் முகைதீனால் கொல்லப்பட்டார். | |
| 15 | புரூணை சுல்தான் முகைதீன் | 1673 | 1690 | தன் மாமனாரான சுல்தான் முகமது அலியின் மரணத்திற்குப் பழிவாங்கும் விதமாக, சுல்தான் அப்துல் அக்குல் முபீனைக் கொன்று உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தவர் இளவரசர் சுல்தான் அப்துல் சலீலுல் அக்பர். மேலும், உள்நாட்டுப் போரின் போது அவர் ஜாம்பி சுல்தானகத்திடமிருந்து வெடிமருந்துகளைக் கொள்முதல் செய்தார். | |
| 16 | புரூணை சுல்தான் நசிருதீன் | 1690 | 1710 | சுல்தான் அப்துல் சலீலுல் அக்பரின் பேரன். | |
| 17 | புரூணை சுல்தான் உசின் கமாலுதீன் | 1710 | 1730 | புரூணை சுல்தான் ஆட்சி (முதலாம் முறை) | |
| 18 | புரூணை சுல்தான் முகமது அலாவுதீன் | 1730 | 1737 | புரூணை மன்னர்களின் மரபுவழி என்ற நூலை எழுதுமாறு டத்து இமாம் யாக்கூபிற்கு அறிவுறுத்தினார். | |
| (17) | புரூணை சுல்தான் உசின் கமாலுதீன் | 1737 | 1740 | புரூணை சுல்தான் ஆட்சி (இரண்டாம் முறை) | |
| 19 | புரூணை சுல்தான் உமர் அலி சைபுதீன் I | 1740 | 1778 | ||
| 20 | புரூணை சுல்தான் முகமது தாஜுதீன் | 1778 | 1807 | கதீப் அப்துல் லத்தீப் என்பவருக்கு தர்சிலாக் கல் செதுக்க அறிவுறுத்தல். | |
| 21 | புரூணை சுல்தான் முகமது ஜமாலுல் ஆலாம் I | 1804 | 1804 | ||
| 22 | புரூணை சுல்தான் முகமது கன்சுல் ஆலாம் | 1807 | 1826 | ||
| 23 | புரூணை சுல்தான் முகமது ஆலாம் | 1826 | 1828 | ||
| 24 | புரூணை சுல்தான் உமர் அலி சைபுதீன் II | 1828 | 1852 | புரூணை, சரவாக்கின் சில பகுதிகளை ஜேம்ஸ் புரூக்கிற்கு விட்டுக் கொடுத்தது. பின்னர் லபுவான் தீவையும் பிரித்தானியரிடம் விட்டுக் கொடுத்தது. | |
| 25 | புரூணை சுல்தான் அப்துல் மோமின் | 1852 | 29 மே 1885 | புரூணை, போர்னியோவின் வடமேற்குப் பகுதியை பிரிட்டனிடம் ஒப்படைத்தது. 1884-இல் வெளியிடப்பட்ட 'ஆணைப் பிரகடனம்': புரூணையின் எந்தப் பகுதியையும் இனி வெளிநாட்டு சக்திகளுக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம் என்ற உறுதிமொழியாகும். | |
| 26 | புரூணை சுல்தான் அசிம் ஜலீலுல் ஆலாம் அகமதின் | 29 மே 1885 | 10 மே 1906 | ஐக்கிய இராச்சியம் 1888-இல்புரூணையில் ஒரு பாதுகாப்புப் பிரதேசத்தை நிறுவியது. | |
| 27 | புரூணை சுல்தான் முகமது ஜமாலுல் ஆலாம் II | 10 மே 1906 | 11 செப்டம்பர் 1924 | மலேரியா நோய்த் தொற்றின் பரவல்; சுல்தானின் உயிரையும் அவரின் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரின் உயிர்களையும் பறித்தது. | |
| 28 | புரூணை சுல்தான் அகமத் தாஜுதீன் | 11 செப்டம்பர் 1924 | 4 சூன் 1950 | பிரித்தானிய போர்னியோவின் ஜப்பானிய ஆக்கிரமிப்பு | |
| 29 | புரூணை சுல்தான் உமர் அலி சைபுடியன் III | 4 சூன் 1950 | 5 அக்டோபர் 1967 | 1959 புரூணை அரசியலமைப்பில் கையெழுத்திட்டார். தன் மகன் அரியணை ஏறுவதற்கு வழிவிடுவதற்காகத் தானாக முன்வந்து பதவி துறந்தார். 1984-இல் விடுதலைக்குப் பிறகு புரூணையின் முதல் பாதுகாப்பு அமைச்சரானார். | |
| 30 | புரூணை சுல்தான் அசனல் போல்கியா | 5 அக்டோபர் 1967 | பதவியில் உள்ளார் | புரூணை 1984-இல் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது. |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "Prime Minister". The Prime Minister's Office of Brunei Darussalam. Retrieved 24 April 2011.
- 1 2 Elisseeff, Vadime (January 2000). "Chapter 8: A Brunei Sultan of the Early Fourteenth Century – A Study of an Arabic Gravestone". The Silk Roads: Highways of Culture and Commerce. Berghahn Books. pp. 145–157. ISBN 978-1-57181-222-3. Retrieved 26 December 2013.







