உள்ளடக்கத்துக்குச் செல்

புரு பச்சைப் புறா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புரு பச்சைப் புறா
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
கொலும்பிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
தெரெரான்
இனம்:
தெ. அரோமாடிகசு
இருசொற் பெயரீடு
தெரெரான் அரோமாடிகசு
ஜெமிலின், 1789

புரு பச்சைப் புறா (Buru green pigeon)(தெரெரான் அரோமாடிகசு) என்பது தெரெரான் பேரினத்தைச் சேர்ந்த ஒரு புறா சிற்றினமாகும். இது இந்தோனேசியாவில் உள்ள புரு காடுகளில் காணப்படுகிறது. பல வகைப்பாட்டியலாளர்கள் இதனைச் சாம்பல் நெற்றிப் புறா தொகுதியில் தனிச் சிற்றினமாக வகைப் பிரித்துள்ளனர்.

நடத்தை

[தொகு]

புரு பச்சைப் புறா பொதுவாக தனித்தனியாக அல்லது சிறிய குழுக்களாக வாழ்கின்றது. இது வேகமாகவும் நேராகவும் பறக்கும். வழக்கமான இறக்கை அசைவுகளுடன் அவ்வப்போது வேகமாக இறக்கைகளை அசைக்கக்கூடியன. இது பலவகையான தாவரங்களின் விதைகளையும் பழங்களையும் உண்ணும். மரத்தில் குச்சிகளைக் கொண்டு கூடு கட்டி இரண்டு வெள்ளை முட்டைகளை இடுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. BirdLife International (2017). "Treron aromaticus". IUCN Red List of Threatened Species 2017: e.T22726297A110885686. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T22726297A110885686.en. https://www.iucnredlist.org/species/22726297/110885686. பார்த்த நாள்: 11 November 2021. 
  • Collar, N.J. 2011. Species limits in some Philippine birds including the Greater Flameback Chrysocolaptes lucidus. Forktail number 27: 29–38.
  • Rasmussen, P.C., and J.C. Anderton. 2005. Birds of South Asia: the Ripley guide. Lynx Edicions and Smithsonian Institution.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரு_பச்சைப்_புறா&oldid=3773579" இலிருந்து மீள்விக்கப்பட்டது