உள்ளடக்கத்துக்குச் செல்

புருஷ சூக்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாயனரின் விளக்கத்துடன் புருஷ சூக்தத்தின் முதலிரண்டு மந்திரங்கள்

புருஷ சூக்தம் (Purusha sukta) (puruṣasūkta), ரிக் வேதத்தில், மண்டலம் 10, மந்திரம் 90, 16 செய்யுட்கள் பிரபஞ்ச இறைவனைத் (Cosmic Being) துதிக்கும் பகுதியாகும்.

புருஷ சூக்த மந்திரம் 16 செய்யுட்கள் கொண்டது. அதில் 15 செய்யுட்கள் அனுஸ்டுப் சந்தசிலும், (anuṣṭubh) மற்றும் இறுதிச் செய்யுள் திருஷ்டுப் சந்தசிலும் (triṣṭubh) பாடப்படுவதாகும். [1][2]

மையக்கருத்து

[தொகு]

புருஷ சூக்தத்தின் நோக்கம் பிரபஞ்சத்தின் ஆன்மீக ஐக்கியத்தை விளக்குதே ஆகும். பிரபஞ்சப் படைப்பிற்கு ஆதாரமான புருஷனின் இயற்கைத் தோற்றத்தை எடுத்துரைக்கிறது.

பாலில் நெய்போல் இயல்பாக எங்கும் ஊடுருவிப் பரவியுள்ள, உள்ளுறை இயல்பினரான இறைவனை வெளிப்படுத்தும் இப்பிரபஞ்சத்தை அறிய, அறிவுக்கு அப்பாற்பட்டது.[3] பிரபஞ்ச படைப்பிற்கு காரணமான புருஷனை (படைப்பவனை) இரண்யகர்பன், விசுவகர்மா அல்லது பிரஜாபதிகளுடன் அடையாளப்படுத்தி, ஆகாயம் மற்றும் காலத்துடன் (Space and Time) பிரபஞ்சத்தை வெளிப்படுத்துபவராக வர்ணிக்கிறது.[4]

புருஷன்

[தொகு]

செய்யுள் 2 முதல் 5 முடிய புருஷனை விளக்குகிறது. புருஷன், பிரபஞ்சம் முழுவதும் உணர்வுள்ள பொருட்களிலும்; உணர்வற்ற பொருட்களில் பரவியுள்ளது. புருஷன் ஆயிரம் தலைகள், கண்கள், கால்களுடன் பிரபஞ்சத்தின் பத்து திசைகளையும் கடந்து நிற்கிறான். கடந்த கால, நிகழ்கால மற்றும் வருங்காலத்தின் அனைத்துப் படைப்புகளும் புருஷனால் மட்டுமே நிகழ்த்தப்படுகிறது.[3]

படைப்பு

[தொகு]

ரிக் வேதத்தின் 5 முதல் 15 முடிய உள்ள செய்யுட்கள் பிரபஞ்சப் படைப்புகள் குறித்து விளக்குகிறது. புருஷனின் மனதிலிருந்து தோன்றிய விராட் எனும் பிரபஞ்சப் படைப்பு துவங்கிறது. விராட், பல்வேறுபட்ட உணர்வுள்ள சீவராசிகளுக்கும், உணர்வற்ற சடப் பொருட்களுக்கும் காரணமாக விளங்குகிறது.

யக்ஞம்

[தொகு]

யக்ஞம் எனும் புனித வேள்வி மூலம் புருஷனால் இப்பிரபஞ்சமும், அனைத்து உயிர்களும் படைக்கப்பட்டது.[5]

இதனையும் காண்க

[தொகு]

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. David Keane (2007), Caste-based Discrimination in International Human Rights Law, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0754671725, pp 26-27
  2. Raghwan (2009), Discovering the Rigveda A Bracing text for our Times, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8178357782, pp 77-88
  3. 3.0 3.1 The Purusha sukta in Daily Invocations by Swami Krishnananda
  4. Krishnananda, Swami. A Short History of Religious and Philosophic Thought in India. Divine Life Society, p. 19
  5. Koller, The Indian Way 2006, ப. 45-47.
ஆதாரங்கள்
  • Koller, John M. (2006), The Indian Way: An Introduction to the Philosophies & Religions of India (2nd ed.), Pearson Education, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0131455788
  • Visvanathan, Meera (2011), "Cosmology and Critique: Charting a History of the Purusha Sukta", in Roy, Kumkum (ed.), Insights and Interventions: Essays in Honour of Uma Chakravarti, Delhi: Primus Books, pp. 143–168, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-80607-22-1

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=புருஷ_சூக்தம்&oldid=4057520" இலிருந்து மீள்விக்கப்பட்டது