புருலியாவில் ஆயுதங்கள் கொட்டப்பட்ட வழக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புருலியாவில் ஆயுதங்கள் கொட்டப்பட்ட வழக்கு என்பது இந்தியாவில் உள்ள மேற்கு வங்கம் புருலியா மாவட்டத்தில் திசம்பர் 18, 1995 அன்று அன்டனாவ் ஏ.என்-26 விமானத்திலிருந்து ஆயுதங்கள் வெடிபொருட்கள் கொட்டப்பட்டதை பற்றியதாகும்.

லாத்வியன் விமானம் ஒன்று ஏகே47 ரக இயந்திரத் துப்பாக்கிகளையும், அதிக அளவிலான வெடி பொருட்களையும் புருலியா மாவட்டத்தில் உள்ள நகரங்களான சல்தா, கதங்கா, பெலாமு, மர்மாவு ஆகியவற்றில் கொட்டியது. இது திசம்பர் 17, 1995 இரவில் நடந்தேறியது. சில நாட்களுக்குப்பிறகு இந்திய வான்வெளியில் மறுபடியும் பறந்த போது இந்திய வான்படைக்கு சொந்தமான மிக்-21 போர் விமானத்தால் இடைமறிக்கப்பட்டு பம்பாய்க்கு பலவந்தமாக தரையிரக்கப்பட்டது.

இந்த விமானத்தில் லாத்வியாவைச் சேர்ந்த ஐவரும், ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த பீட்டர் பிளீச், மற்றும் கூலிப்படையை சேர்ந்த கிம் டேவி ஆகியோரும் இருந்தனர். கிம் டேவி காவலில் இருந்து தப்பினார்.

டைம்ஸ் நவ் ஆங்கில தொலைக்காட்சி ஏப்ரல் 28, 2011 அன்று இவ்வழக்கில் தொடர்புடைய கிம் பீட்டர் டேவி, மற்றும் பீட்டர் பிளீச் ஆகியோரை பேட்டி கண்டது. அதில் கிம் பீட்டர் டேவி சொல்லும்போது, தான் தப்பிக்க ஓரு நாடாளுமன்ற உறுப்பினர் உதவியதாக கூறியுள்ளார். ஏகே 47 வகை துப்பாக்கிளுடன் கூடிய பாதுகாப்புப் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் தன்னை தனது காரின் பின் இருக்கையில் அமர வைத்து நேபாளத்தில் விட்டு வந்ததாக தெரிவித்துள்ளார். அதேபோல், பீட்டர் பிளீச் சொல்லும் போது மேற்கு வங்க இடதுசாரி கட்சிகளுக்கு நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த இந்திய உளவுத்துறை அதிகாரிகளும், அரசியல்வாதிகள் கூட்டாக செயல்பட்டார்கள் என்று தெரிவித்துள்ளார். இவர் 8 ஆண்டுகள் இந்திய சிறையில் நாட்களை களித்துள்ளார். மேலும் 24 மணி நேரத்திற்கு குறிப்பிட்ட இந்திய பகுதியில் ரேடார் கண்காணிப்பை நிறுத்த ரா இராணுவ அதிகாரகளுக்கு உத்தரவிட்டு அதற்கிடையில் தங்களது பணிகளை முடித்துக்கொள்ள இந்த ஆயுததாரிகளைக் கேட்டுக்கொண்டது என்று தெரிவித்தார்.[1][2]

மூலம்[தொகு]

  1. "India knew about Purulia arms drop: Accused". Indiatimes (New Delhi). 31 May 2010 இம் மூலத்தில் இருந்து 23 மே 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120523184449/http://articles.timesofindia.indiatimes.com/2010-05-31/india/28304324_1_kim-davy-alias-arms-drop-denmark-government. பார்த்த நாள்: 28 April 2011. 
  2. "Purulia Exposé: India's best kept secret". Indiatimes (New Delhi). 28 Apr 2011. http://timesofindia.indiatimes.com/india/Purulia-Expos-Indias-best-kept-secret/articleshow/8106795.cms. பார்த்த நாள்: 28 April 2011. 

வெளியிணைப்புகள்[தொகு]