உள்ளடக்கத்துக்குச் செல்

புரா சபோரி வனவிலங்கு சரணாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புரா சபோரி வனவிலங்கு சரணாலயம்
Bura Chapori Wildlife Sanctuary
ஐயுசிஎன் வகை IV (வாழ்விடம்/இனங்களின் மேலாண்மைப் பகுதி)
Map showing the location of புரா சபோரி வனவிலங்கு சரணாலயம்Bura Chapori Wildlife Sanctuary
Map showing the location of புரா சபோரி வனவிலங்கு சரணாலயம்Bura Chapori Wildlife Sanctuary
புரா சபோரி வனவிலங்கு சரணாலயத்தின் அமைவிடம் அசாம், இந்தியா
Map showing the location of புரா சபோரி வனவிலங்கு சரணாலயம்Bura Chapori Wildlife Sanctuary
Map showing the location of புரா சபோரி வனவிலங்கு சரணாலயம்Bura Chapori Wildlife Sanctuary
புரா சபோரி வனவிலங்கு சரணாலயம் (இந்தியா)
அமைவிடம்அசாம், இந்தியா
அருகாமை நகரம்தேச்பூர்
ஆள்கூறுகள்26°30′53″N 92°41′34″E / 26.51472°N 92.69278°E / 26.51472; 92.69278
பரப்பளவு44.06 சதுர கிலோமீட்டர்[1]
நிறுவப்பட்டது1974[1]
நிருவாக அமைப்புசுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, அசாம்

புரா சபோரி வனவிலங்கு சரணாலயம் (Bura Chapori Wildlife Sanctuary) இந்தியாவின் அசாம் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். சோணித்பூர் மாவட்டம் மாவட்டத்தில் பிரம்மபுத்திரா ஆற்றின் தெற்குக் கரையில் 44.06 சதுரகிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இப்பகுதி 1974 ஆம் ஆண்டு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டது. 1995 ஆம் ஆண்டு ஒரு சரணாலயமாக மாறியது.[2] புரா சபோரி வனவிலங்கு சரணாலயம் தேச்பூர் நகரத்திலிருந்து 40 கி.மீ தொலைவிலும், குவகாத்தியிலிருந்து 181 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இலாவோகோவா-புராச்சபோரி சுற்றுச்சூழல் அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியான இச்சரணாலயம் காசிரங்கா புலிகள் காப்பகத்தின் அறிவிக்கப்பட்ட இடையகமுமாகும்.

பல்லுயிர் சரணாலயம்

[தொகு]

புரா சபோரி வனவிலங்கு சரணாலயம் வங்காள மலர்வாழ் உயிரினங்களுக்கு ஏற்ற வாழ்விடமாகக் கருதப்படுகிறது. பல புலம்பெயர்ந்த பறவைகளுக்கு இச்சரணாலயம் ஒரு சொர்க்கமாகும். ஊர்வன மற்றும் மீன்களும் இங்கு காணப்படுகின்றன.

பாலூட்டிகள்

இந்திய மூக்குக்கொம்பன், tiger, சிறுத்தை, காட்டெறுமை, ஆக்சிசு, காட்டுப்பன்றி மற்றும் எப்போதாவது யானை கூட்டம் ஆகிய விலங்குகள் இங்கு காணப்படுகின்றன.

பறவைகள்

வங்காள வரகுக் கோழி, கருப்பு கழுத்து நாரை, காட்டு வாத்து, அகலவாயன், குறுவடிவ நன்னீர் வாத்து, சீழ்க்கைச் சிறகி என பல பறவைகள் இங்கு காணப்படுகின்றன.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 "National Wildlife Database: List of Protected Areas in India" (PDF). Wildlife Institute of India. Archived from the original (PDF) on 19 September 2011. Retrieved 22 October 2010.
  2. Wahid Saleh. "Indiawijzer". Indiawijzer.nl. Retrieved 2013-06-02.
  3. "Bura Chapori Wildlife Sanctuary, Wildlife Sanctuary Assam, Bura Chapori Wildlife Reserve, Wildlife Conservation Bura Chapori Assam, Wildlife Parks Bura Chapori, Bura Chapori Wildlife National Park". Naturesafariindia.com. Archived from the original on 2013-07-30. Retrieved 2013-06-02.

வெளி இணைப்புகள்

[தொகு]