உள்ளடக்கத்துக்குச் செல்

புராணம் (தமிழ்நூல் அட்டவணை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புராணம் என்னும் சொல் பழங்கதைகளைக் குறிக்கும்.
தமிழில் புராணம் என்னும் பெயரைக் கொண்டுள்ள நூல்கள் பல.
அவற்றைக் கால நோக்கில் வரிசைப்படுத்திப் பட்டியலிட்டுப் பகுத்துத் தருவது இந்த அட்டவணை.

காலநிரலில் புராணங்கள் [1][தொகு]

காலம், கி. பி. நூற்றாண்டு புராணத்தின் பெயர் ஆசிரியர் பெயர், பிற குறிப்பு விளக்கம்
இடைச்சங்கம் (?) மாபுராணம், மதிநலம் கவின்ற மாபுராணம் (பெருந்தொகை குறிப்பு) யாப்பிலக்கண நூல், எழுத்திலக்கணமும் கூறுகிறது, (யாப்பருங்கல விருத்தி குறிப்பு)
இடைச்சங்கம் (?) பூதபுராணம் புதுநலம் கனிந்த பூதபுராணம் (யாப்பருங்கல விருத்தி குறிப்பு)
7 தசபுராணம் அப்பர் தேவாரப் பதிகங்களில் ஒன்று (4:14)
7 இலிங்க புராணம் அப்பர் தேவாரப் பதிகங்களில் ஒன்று (5:15)
8 புராண சாகரம் - (யாப்பருங்கல விருத்தி குறிப்பு)
8 சாந்தி புராணம் - சமண தீர்த்தங்காரர் கதை (புறத்திரட்டு நூலில் 9 பாடல்)
9 சிவபுராணம் மாணிக்கவாசகர் திருவாசகத்தில் முதல் பாடல்
10 புராண சிந்தாமணி - இது நூல் அன்று, திருவிசைப்பாவில் வரும் தொடர்கள்
12 திருத்தொண்டர் புராணம் சேக்கிழார் திருத்தொண்டர் வரலாறு
13 திருவாலவாயுடையார் திருவிளையாடல் புராணம் பெரும்பற்றப்புலியூர் நம்பி மதுரையின் தலபுராணம்
13 குரு பரம்பரா பிரபாவம் ஆறாயிரப்படி பின்பழகிய பெருமாள் ஜீயர் பரம்பத நாதன் தொடங்கி நம்பிள்ளை வரையில் ஆழ்வார், ஆசாரியர் வரலாறு (மணிப்பிரவாள நடை)
14 திருமுறை கண்ட புராணம் உமாபதி சிவம் நம்பியாண்டார் நம்ப திருமுறைகளைத் தேடித் தொகுத்த வரலாறு
14 சேக்கிழார் புராணம் உமாபதி சிவம் திருத்தொண்டர் புராணம் பாடப்பட்ட வரலாறு
14 கோயிற்புராணம் உமாபதி சிவம் தில்லைத் தலத்தின் வரலாறு
14 மேருமந்தர புராணம் சமய திவாகர வாமன முனிவர் மேரு,மந்தரர் என்கிற இரண்டு சமணப் பெரியார் வரலாறு
14 கந்த புராணம் கச்சியப்ப சிவாசாரியார் முருகப் பெருமான் கதை
15 திருவாதவூர் அடிகள் புராணம் கடவுள் மாமுனிவர் மாணிக்க வாசகர் வரலாறு
15 ஸ்ரீ புராணம் - சமணப் பெரியார் வரலாறு (மணிப்பிரவாள நடை)

16 ஆம் நூற்றாண்டு [2][தொகு]

16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த 15 புலவர்கள் பல்வேறு ஊர்களிலுள்ள திருக்கோயில்கள் பற்றிப் புராணங்கள் பாடியுள்ளனர். சில புராணங்கள் சிவபெருபானின் தீரத்தைக் காட்டுவனவாகவும் உள்ளன. 36 புராண நூல்கள் அகவரிசையில் அடுக்கப்பட்டு அவற்றைப்பட்டிய செய்திகள் இங்கு நிரல்படுத்தப்பட்டுள்ளன.

சிவதருமம்[தொகு]
புராணம் ஆசிரியர் காலம் சருக்கம் பாடல்
இலிங்க புராணம் வரகுண ராம பாண்டியர் 1560-1600 154 2506
கூர்ம் புராணம் அதிவீர ராம பாண்டியர் 1564-1600 97 3717
பிரமோத்தர காண்டம் வரதுங்க ராம பாண்டியர் 1560-1610 22 1323
வாயு சங்கிதை வரதுங்க ராம பாண்டியர் 1560-1600 6 1333
வினாவிடை – புராணம் புராணத் திருமலைநாதர் 1500-1525 - 44 பாடல்கள் பட்டுமே கிடைத்துள்ளன
சிவ பராக்கிரமம்[தொகு]
புராணம் ஆசிரியர் காலம் சருக்கம் பாடல்
சரப புராணம் புராணத் திருமலைநாதர் 1500-1525 7 431
சைவமகா புராணம் புராணத் திருமலைநாதர் 1500-1525 - ஒரு பாடலும் கிடைக்கவில்லை
ததீசி புராணம் புராணத் திருமலைநாதர் 1500-1525 - 48 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன
சிவதருமம், தலபுராணம்[தொகு]
புராணம் ஆசிரியர் காலம் சருக்கம் பாடல்
காசிகாண்டம் அதிவீர ராம பாண்டியர் 1564-1610 100 2526
சங்கர விலாசம் சிதம்பரநாத-கவி 1575-1600 23 1437
தலபுராணம், தீர்த்தம்[தொகு]
புராணம் ஆசிரியர் காலம் சருக்கம் பாடல்
மாக புராணம் தெரியவில்லை 1562-1610 28 1424
தலபுராணம்[தொகு]
புராணம் ஆசிரியர் காலம் சருக்கம் பாடல்
அருணகிரி புராணம் புராணத் திருமலைநாதர் 1500-1525 - கிடைக்கவில்லை
அருணகிரி புராணம் மறைஞான சம்பந்தர் 1525-1575 8 613
அருணாசல புராணம் சைவ எல்லப்ப நாவலர் 1550-1600 6 441
இறைசை புராணம் புராணத் திருமலைநாதர் 1550-1600 8 376 இன்று நூல் இல்லை
கமலாலயம் மறைஞான சம்பந்தர் 1525-1575 24 1066
சிதம்பரம் – புராணம் புராணத் திருமலைநாதர் 1550-1600 9 814
சுந்தரபாண்டியம் அனதாரி 1550-1575 - 2015
செவ்வந்தி புராணம் சைவ எல்லப்ப நாவலர் 1550-1600 14 550
சேது புராணம் நிரம்ப அழகிய தேசிகர் 1560-1610 45 3438
திருக்காளத்திப் புராணம் ஆனந்தக் கூத்தர் 1575-1600 33 1726
திருச்செங்காட்டங்குடி புராணம் சைவ எல்லப்ப நாவலர் 1550-1600 11 392 [3]
திருப்பட்டீசுரம் – புராணம் ரேவண சித்தர் 1575-1600 - நூல் இன்று இல்லை
திருப்பரங்கிரிப் புராணம் நிரம்ப அழகிய தேசிகர் 1560-1610 11 526
திருமழபாடி புராணம் கமலை ஞானப் பிரகாசர் 1550-1575 8 571
திருமேற்றளி – புராணம் ரேவண சித்தர் 1575-1600 - நூல் இன்று இல்லை
திருவலஞ்சுழி – புராணம் ரேவண சித்தர் 1575-1600 - நூல் இன்று இல்லை
திருவாரூர்ப் புராணம் அளகை சம்பந்த முனிவர் 1575-1600 111 2929
திருவானைக்காப் புராணம் கமலை ஞானப்பிரகாசர் 1550-1575 14 571
திருவிரிஞ்சைப் புராணம் சைவ எல்லப்ப நாவலர் 1550-1600 8 370
திருவெண்காடு – புராணம் சைவ எல்லப்ப நாவலர் 1550-1600 18 614
திருவெற்றியூர்ப் புராணம் திருவெற்றியூர் ஞானப்பிரகாசர் 1575-1600 16 599
திருவையாறு – புராணம் ஞானக்கூத்தர் 1575-1600 12 473
திருவையாறு – புராணம் நிரம்ப அழகிய தேசிகர் 1560-1610 41 2207
தீத்தகிரி புராணம் சைவ எல்லப்ப நாவலர் 1550-1600 445
வேணுவனம் - புராணம் நிரம்ப அழகிய தேசிகர் 1560-1610 2 4554

புலவர் பாடிய புராணங்கள்[தொகு]

மேலே கண்ட 36 புராணங்களைப் பாடிய புலவர்கள் 15 பேர். இவர்களை அகரவரிசையில் அவர்கள் பாடிய நூல்களுடன் இங்குக் காணலாம்.

 1. அதிவீர ராம பாண்டியர் - காசி காண்டம், கூர்ம புராணம்
 2. அளகை சம்பந்த முனிவர் - திருவாரூர்
 3. அனதாரியப்பன் - சுந்தரபாண்டியம்
 4. ஆனந்தக் கூத்தர் - திருக்காளத்தி
 5. சைவ எல்லப்ப நாவலர் - அருணாசலம், திருவெண்காடு, செவ்வந்தி, தீர்த்தகிரி, திருவிரிஞை, திருச்செங்காட்டங்குடி
 6. ஞானக்கூத்தர் - திலு ஐயாறு
 7. ஞானப்பிரகாசர் (கமலை) - திருமழபாடி, திரு ஆனைக்கா
 8. ஞானப்பிரகாசர் (திருவொள்ளியூர்) - திருவொற்றியூர்
 9. சிதம்பரநாத கவி - நங்கர விலாசம்
 10. நிரம்ப அழகிய தேசிகர் - திருப்பரங்கிரி, சேதுபுராணம், திரு ஐயாறு, வேணுவனம்
 11. புராணத் திருமலைநாதர் - சிதம்பரம், ததீசி, சரப புராணம், வினாவிடைப் புராணம், சைவமகா புராணம், இறைசை, அருணகிரி
 12. மறைஞான சம்பந்தர் - அருணகிரி, கமலாலயம்
 13. ரேவண சித்தர் - திர்பட்டீசுரம், திருவலஞ்சுழி, திருமேற்றளி
 14. வரகுண ராம பாண்டியர் - இலிங்க புராணம், வாயு சங்கிதை
 15. வரதுங்க ராம பாண்டியர் - பிரமோத்தர காண்டம்

இவற்றையும் காண்க[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

 1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1972, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. {{cite book}}: Check date values in: |year= (help)
 2. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1977, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. pp. 310, 311. {{cite book}}: Check date values in: |year= (help)
 3. நூல் இக்காலத்தில் இல்லை