புரப்பேன்தையால்
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
புரப்பேன்-1-தையால்
| |
வேறு பெயர்கள்
MERCAPTAN C3
n-புரப்பேன்தையால் 1-புரப்பேன்தையால் புரோபன்-1-தையால் புரப்பைல் மெர்கேப்டன் | |
இனங்காட்டிகள் | |
107-03-9 | |
ChEBI | CHEBI:8473[2] |
ChemSpider | 7560[3] |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
C3H8S | |
வாய்ப்பாட்டு எடை | 76.16 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நிலையில் இருந்து வெளிர் மஞ்சள் நிற நீர்மம் |
மணம் | முட்டைக்கோசின் மணம் |
அடர்த்தி | 0.84 கி/மி.லி |
உருகுநிலை | -113 |
கொதிநிலை | 67 முதல் 68 |
சிறிதளவு | |
ஆவியமுக்கம் | 155 மி.மி.பாதரசம் (25 °செ) |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | −21 °C; −5 °F; 253 K |
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |
அனுமதிக்கத்தக்க வரம்பு
|
none |
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
|
C 0.5 ppm (1.6 மி.கி/மி.3) [15-நிமிடம்] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
புரப்பேன்தையால் (Propanethiol) என்பது C3H8S என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் தையால் என்ற வேதிவினைக் குழுவில் இடம்பெற்றுள்ள ஒரு சேர்மமாகும். நிறமற்ற இச்சேர்மம் கடுமையான விரும்பத்தகாத நெடியைக் கொண்டிருக்கிறது. மிதமான நச்சுத் தன்மை கொண்ட இச்சேர்மம் நீரை விட அடர்த்தி குறைவாகவும் நீரில் சிறிதளவு கரையக்கூடியதாகவும் காணப்படுகிறது. வேதியியல் இடைப்பொருளாகவும் களைக்கொல்லியாகவும் புரப்பேன்தையால் பயன்படுத்தப்படுகிறது[4]. நன்றாக கொழுந்து விட்டு எரியும் தன்மை கொண்ட இச்சேர்மம் எரியும்போது எரிச்சலூட்டும் புகை அல்லது வாயுவை வெளிவிடுகிறது. மேலும் இதைச் சூடுபடுத்துகையில் அழுத்தத்தின் காரணமாக வெடிக்கும் அபாயமும் ஏற்படலாம்.[5][6]
புரப்பேன்தையாலின் வேதியியல்
[தொகு]வேதியியல் வகைப்பாட்டின்படி புரப்பேன்தையால் ஒரு தையால் ஆக வகைப்படுத்தப்படுகிறது. தையால் என்பது மூலக்கூற்று வாய்ப்பாடும் அமைப்பு வாய்ப்பாடும் ஆல்ககால்களைப் போல அமைந்து , மூலக்கூறில் ஆல்ககால்களின் ஐதராக்சில் குழுவில் இடம்பெற்றுள்ள ஆக்சிசனுக்குப் பதிலாக கந்தகத்தைப் பெற்றிருக்கும் கரிமச்சேர்மங்கள் ஆகும். புரப்பேன்தையாலின் மூலக்கூற்று வாய்ப்பாடு C3H7SH, n- புரோப்பனாலின் அமைப்பு வாய்ப்பாட்டை ஒத்திருக்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ International Chemical Safety Card 0317
- ↑ 2.0 2.1 ChEBI 8473
- ↑ CSID:7560, accessed 19:05, Feb 10, 2013
- ↑ 1-Propanethiol, chemicalbook.com
- ↑ 1-Propanethiol, inchem.org
- ↑ 1-Propanethiol, International Chemical Safety Card