புரபி பாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புரபி பாசு
2017 இல் புரபி பாசு
தாய்மொழியில் பெயர்পূরবী বসু
தேசியம்வங்காளதேசத்தவர்
கல்விமுனைவர் (ஊட்டச்சத்து)
படித்த கல்வி நிறுவனங்கள்தாக்கா பல்கலைக்கழகம்
பென்சில்வேனியா பெண்கள் மருத்துவக் கல்லூரி
மிசூரி பல்கலைக்கழகம்
பணிசிறுகதை எழுத்தாளர், மருந்தியல் நிபுணர், ஆர்வலர்
வாழ்க்கைத்
துணை
ஜோதி பிரகாஷ் தத்டா ( எழுத்தாளர்

புரபி பாசு ( Purabi Basu ) (பிறப்பு 21 செப்டம்பர் 1949 [1] ) வங்காளதேசத்தைச் சேர்ந்த சிறுகதை எழுத்தாளரும், மருந்தியல் நிபுணரும், ஆர்வலரும் ஆவார். 2005 இல் அனன்யா இலக்கிய விருதையும் [2] , [3] 2013இல் பங்களா அகாடமி இலக்கிய விருதையும் வென்றார். 2005 ஆம் ஆண்டு வரை, நியூயார்க்கை தளமாகக் கொண்ட மருந்து நிறுவனமான வைத் பார்மாசூட்டிகல்ஸில் மூத்த நிர்வாகியாகப் பணியாற்றி வருகிறார். [4]

கல்வி[தொகு]

புரபி பாசு டாக்கா பல்கலைக்கழகத்தில் மருந்தகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். [4] 1970 இல் அமெரிக்கா சென்று 1972 இல் பென்சில்வேனியாவின் பெண்கள் மருத்துவக் கல்லூரியில் உயிர் வேதியியலில் முதுகலைப் பட்டமும், 1976 இல் மிசோரி பல்கலைக்கழகத்தில் இருந்து ஊட்டச்சத்துத் துறையில் முனைவர் பட்டமும் பெற்றார். [4] பின்னர் தெற்கு அலபாமா பல்கலைக்கழகத்தில் மருந்தியலில் முதுகலை பட்டத்தையும் பெற்றார். [4]

தொழில்[தொகு]

பாசு வங்காளதேசம் ஊர் முன்னேற்ற செயற்குழுவில் சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் மக்கள் தொகைப் பிரிவின் இயக்குநராகவும் பணியாற்றினார். [4]

பணிகள்[தொகு]

இவர் இரண்டு நூல்களை எழுதியுள்ளார்.

  • ராதா இன்று சமைக்க மாட்டார் [5]
  • சலேஹாவின் ஆசை [6]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

எகுஷே பதக் மற்றும் பங்களா அகாடமி இலக்கிய விருது பெற்ற சிறுகதை எழுத்தாளரான ஜோதி பிரகாஷ் தத்தாவை மணந்தார். [7] [8]

சான்றுகள்[தொகு]

  1. "পূরবী বসু (Purabi Basu) - Portfolio of Bengali Author Purabi Basu on". Authors.com.bd. 1949-09-21. பார்க்கப்பட்ட நாள் 2022-05-31.
  2. "The Scientist". 20 July 2007. http://archive.thedailystar.net/magazine/2007/07/03/interview.htm. பார்த்த நாள்: 6 August 2017. 
  3. পুরস্কারপ্রাপ্তদের তালিকা [Winners list] (in Bengali). Bangla Academy. Archived from the original on 1 ஆகஸ்ட் 2017. பார்க்கப்பட்ட நாள் 24 July 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 "Dr. Purabi Basu". munshigonj.com. Archived from the original on 30 January 2012. பார்க்கப்பட்ட நாள் 6 August 2017.
  5. The Concept. https://books.google.com/books?id=ja9tAAAAMAAJ. 
  6. Kaiser, Nahid (2011). "Resistance to Paterfamilias in Purabi Basu's two short stories: "Radha Will Not Cook Today" and "Saleha's Desire"". Stamford Journal of English 6. http://www.banglajol.info/index.php/SJE/article/view/13912. 
  7. "The Scientist". http://archive.thedailystar.net/magazine/2007/07/03/interview.htm. Rahman, Nader (20 July 2007). "The Scientist". The Daily Star. Retrieved 6 August 2017.
  8. . boinews24.com. http://www.boinews24.com/uncategorized/কথাসাহিত্যিক-পূরবী-বসুকে. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரபி_பாசு&oldid=3691104" இலிருந்து மீள்விக்கப்பட்டது