புரதம் பகுத்தெடுத்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மூலக்கூற்று உயிர்யலில் வேசுடர்ன் படிவு (Western Blot) மற்றும் ELISA போன்ற நுட்பங்களுக்கு புரத பிரித்தெடுத்தல் என்னும் முறை இன்றியமையாத முறை ஆகும். பின்வரும் இடைமத்தை பயன்படுத்தி விலங்கு திசுவிலோ அல்லது அதனின் உயிரணுவில் இருந்து முழு புரதங்களை பிரிக்கலாம்.

உயிரணு பிரிக்கும் இடைமம்:[தொகு]

1. 5 mM Tris-HCl, pH 7.4 - pH பராமரிக்க

2. 2mM EDTA - மின்மமேறிகளை இழுக்கும் முகவராக (chelating agent) . ஏனெனின் அனைந்து நொதிகளும் மின்மமேறிகளை (எ.கா. MgCl2 ) ஒரு உதவி பொருளாக தனது செயலுக்கு பயன்படுத்துகிறது. அவைகளை EDTA தனது கட்டுப்பாட்டில் இழுப்பதால் நொதிகளின் செயல்கள் கட்டுப்படுத்தபடுகிறது.

3. 10 µl Protease Inhibitor Cocktail (1000 x stock) - புரத அழிவை தடுக்க

4. 10 mg/ml benzamidine

5. 5 mg/ml leupeptin

6. 5 mg/ml trypsin inhibitor - புரத அழிவை தடுக்க

புரத பகுத்தலுக்கு உட்படுத்தப்படும் திசுவை இவ் இடைமத்தை கொண்டு நன்றாக அரைக்க வேண்டும்.

நன்றாக அரைத்து உயிரணுக்களாக பிரிக்கப்பட்ட திசுவை 30-45 நிமிடம் பனிக்கட்டியில் நிலை நிறுத்தவேண்டும்.

பின் இவைகள் உயர் நிலையில் சுழற்றப்பட்டு, நீர்ம பகுதியில் உள்ள புரதங்கள் புதிய குழாய்களுக்கு மாற்றப்பட வேண்டும். புரத அடர்வை (protein concentration) கண்டுபிடித்து வேசுடர்ன் படிவு (Western blot) அல்லது மற்ற நுட்பங்களுக்கு பாவிக்கலாம்.