புரதமல்லா நைட்ரசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விலங்கு ஊட்டச்சத்தில் புரதமல்லா நைட்ரசன் (Non-protein nitrogen) என்பது யூரியா, பையூரெட், அம்மோனியா போன்ற உட்கூறுகளை கூட்டாகக் குறிக்க பயன்படுத்தப்படும் ஒரு சொற்றொடராகும். அ-புரத நைட்ரசன் என்ற சொற்றொடராலும் இதை குறிப்பிடலாம். இவை புரதங்கள் அல்ல என்றாலும் அசைபோடும் விலங்குகளின் வயிற்றில் உள்ள நுண்ணுயிரிகள் இவற்றை புரதங்களாக மாற்றுகின்றன. தாவர மற்றும் விலங்கு புரதங்களுடன் ஒப்பிடும்போது குறைந்த செலவு காரணமாக இவற்றை உணவில் சேர்ப்பது பொருளாதார ஆதாயத்தை விளைவிக்கலாம். நுண்ணுயிரிகள் அபுரோட்டீனை முதலில் அம்மோனியாவாக மாற்றுவதால் மிக அதிகமான இவற்றின் பயன்பாடு வளர்ச்சியில் மனச்சோர்வையும் சாத்தியமான அம்மோனியா நச்சுத்தன்மையையும் ஏற்படுத்தும். பண்படாத புரத மதிப்புகளை செயற்கையாக உயர்த்தவும் அபுரோட்டீன்களைப் பயன்படுத்த முடியும். அம்மதிப்புகள் நைட்ரசன் உள்ளடக்கத்தின் அடிப்படையில் அளவிடப்படுகின்றன. ஏனெனில் எடுத்துக்காட்டாக புரதத்தில் சுமார் 16% நைட்ரசன் உள்ளது. ஆனால் யூரியாவில் நைட்ரசனின் அளவு 47% ஆகும். குறிப்பாக இரசாயன கூட்டு சேர்க்கைப் பொருள், கோழி கழிவுகள்[1][2] மற்றும் கால்நடை உரம்[3][4] போன்றவை அபுரோட்டீன் நைட்ரசனின் மூலங்களாகும்.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரதமல்லா_நைட்ரசன்&oldid=3221918" இருந்து மீள்விக்கப்பட்டது