புரதத்தொகுதி

புரதத்தொகுதி (proteome) என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு மரபணு, உயிரணு, திசு அல்லது உயிரினத்தால் உருவாக்கப்படும் அல்லது வெளிப்படுத்தப்படும் புரதங்களின் முழு தொகுப்பாகும். இது ஒரு குறிப்பிட்ட நேரத்தில், வரையறுக்கப்பட்ட நிலைமைகளின் கீழ், ஒரு குறிப்பிட்ட வகை உயிரணு அல்லது உயிரினத்தில் வெளிப்படுத்தப்பட்ட புரதங்களின் தொகுப்பாகும்.புரதத்தொகுதி (proteome) பற்றிய ஆய்வு புரதவியல் (Proteomics) எனப்படும்.
புரதத்தொகுதிகளின் வகைகள்
[தொகு]புரதத்தொகுதியில் உள்ள புரதங்களின் அளவு, பல்வேறு உயிரினக்களில் சுற்றுப்புற மற்றும் உடல்நல மாற்றங்களுக்கு ஏற்ப மாறுபடும். புரதத்தொகுதியைப் பற்றிய ஆய்வுகள், உயிரின் சிக்கலான தன்மை பற்றிய தகவல்களை வழங்குகின்றன.எனவே உயிரணுக்கள் மற்றும் உயிரினங்களில் உள்ள புரதத்தொகுதியிகளை வேறுபடுத்தி அறிவது முக்கியமானதாகும்.
செல்லுலார் புரதத்தொகுதி என்பது ஹார்மோன் தூண்டுதல் போன்ற ஒரு குறிப்பிட்ட சுற்றுச்சூழல் நிலைமைகளின் கீழ் ஒரு குறிப்பிட்ட உயிரணு வகைகளில் காணப்படும் புரதங்களின் தொகுப்பாகும்.
ஒரு உயிரினத்தின் முழுமையான புரதத்தொகுதியினைக் கருத்தில் கொண்டால், இது பல்வேறு செல்லுலார் புரதத்தொகுதிகளின் முழுமையான புரதங்களின் தொகுப்பாகக் கருதப்படலாம். இது தோராயமாக மரபணுவுக்கு சமமான புரதமாகும்.
புரதத்தொகுதி என்ற சொல் செல்லின் உள்ளுறுப்புகள் போன்ற சில துணை அமைப்புகளில் காணப்படும் புரதங்களின் தொகுப்பினைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக, மைட்டோகாண்ட்ரியல் புரதத்தொகுதி 3000 க்கும் மேற்பட்ட தனித்துவமான புரதங்களைக் கொண்டிருக்கலாம்.[1][2][3]
ஒரு வைரஸில் உள்ள புரதங்களை வைரஸ் புரதத்தொகுதி என்று அழைக்கலாம். பொதுவாக வைரஸ் புரதத்தொகுதிகள் வைரஸ் மரபணுவிலிருந்து கணிக்கப்படுகின்றன, [4][5] ஆனால் வைரஸ் புரதவியல் ஆய்வுகளில் பெரும்பாலும், வைரஸ் மற்றும் அதன் ஓம்புயிரின் புரதங்கள் இரண்டுமே ஆய்வு செய்யப்படுகின்றன.[6]
புற்றுநோயில் புரதத்தொகுதியின் முக்கியத்துவம்
[தொகு]
வெவ்வேறு புற்றுநோய் உயிரணு வரிசைகளை ஒப்பீட்டளவில் பகுப்பாய்வு செய்ய புரதத்தொகுதிகள் பயன்படுத்தப்படலாம். சிறுநீர்ப்பை புற்றுநோய் திசுஆய்வுகளில் புற்றுநோயின் சாத்தியக்கூறுகளை அடையாளம் காண புரதத்தொகுதி ஆய்வுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன [7] புரதத்தொகுதிகளின் அமைப்பில் தோன்றும் வேறுபாடுகளைக் கொண்டு புதிய புற்றுநோய் சமிக்ஞை வழிமுறைகளை கண்டறிய முடியும்.
புற்றுநோயின் உயிரிக்குறியீடுகள் பொருண்மை நிரல் ஆய்வு அடிப்படையிலான புரதத்தொகுதிகளின் பகுப்பாய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளன. புரதவியல் பயன்பாடு அல்லது புரதத்தொகுதிகள் பற்றிய ஆய்வு என்பது நோயாளியின் ஊடலில் உள்ள புரதத்தொகுதிகள் மற்றும் மரபணு சுயவிவரத்திற்கு ஏற்ப மருந்துகளை தெரிந்தெடுக்கும் தனிப்பயனாக்கப்பட்ட மருத்துவத்தில் ஒரு படியாகும்.[8]
நோயாளிகளின் உடலில் ஏற்படும் சில புற்றுநோய் மருந்துகளுக்கான எதிர்ப்புநிலை இன்னும் நன்கு புரிந்து கொள்ளப்படவில்லை. புற்றுநோய் மருந்துகளை எதிர்க்கும் பண்புகளைக் கொண்ட புரதங்களை அடையாளம் காண புரதவியல் பகுப்பாய்வு பயன்படுத்தப்படுகிறது, எடுத்துக்காட்டாக பெருங்குடல் புற்றுநோய் மருந்து ஐரினோடெகான்.[9]
பாக்டீரியா அமைப்புகளில் உள்ள புரதத்தொகுதிகள்
[தொகு]பல்வேறு வகையான பாக்டீரியாக்களில் வளர்சிதை மாற்ற எதிர்வினைகளை வெவ்வேறு சூழல்களில் மதிப்பிடுவதற்கு புரதவியல் பகுப்பாய்வுகள் செய்யப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, க்ளோஸ்ட்ரிடியம் மற்றும் பேசிலஸ் போன்ற பாக்டீரியாக்களில், நீண்டகால செயலற்ற நிலைக்குப் பிறகு இந்த பாக்டீரியா வித்திகள் (ஸ்போர்கள்) ஒவ்வொன்றும் முளைக்க வெவ்வேறு புரதங்கள் எவ்வாறு உதவுகின்றன என்பதை ஆராய்வதற்காக புரதவியல் பகுப்பாய்வுகள் பயன்படுத்தப்பட்டன.[10] வித்திகளை (ஸ்போர்கள்) எவ்வாறு ஒழுங்காக அகற்றுவது என்பதை நன்கு புரிந்துகொள்ள, புரதவியல் பகுப்பாய்வுகள் செய்யப்பட வேண்டும்.
வரலாறு
[தொகு]மார்க் வில்கின்ஸ் என்ற அறிஞர் 1994 ஆம் ஆண்டில் இத்தாலியின் சியானாவில் நடைபெற்ற "இருபரிமாண மின்புலத் தூள்நகர்ச்சி: புரத வரைபடங்களிலிருந்து மரபணுக்களுக்கு" என்ற கருத்தரங்கில் ”புரோட்டியோம்” (புரதத்தொகுதி) என்ற வார்த்தையை உருவாக்கினார்.[11] இது 1995 இல் அவரது முனைவர் பட்ட ஆய்வறிக்கையின் ஒரு பகுதியாக வெளியிடப்பட்டது.[12] ஒரு மரபணு, செல், திசு அல்லது உயிரினத்தால் வெளிப்படுத்தப்படும் புரதங்களின் முழு தொகுப்பினை விவரிக்க வில்கின்ஸ் இந்த வார்த்தையைப் பயன்படுத்தினார்.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Johnson, D. T.; Harris, R. A.; French, S.; Blair, P. V.; You, J.; Bemis, K. G.; Wang, M.; Balaban, R. S. (2006). "Tissue heterogeneity of the mammalian mitochondrial proteome". American Journal of Physiology. Cell Physiology 292 (2): c689–c697. doi:10.1152/ajpcell.00108.2006. பப்மெட்:16928776. https://doi.org/10.1152/ajpcell.00108.2006.
- ↑ Morgenstern, Marcel; Stiller, Sebastian B.; Lübbert, Philipp; Peikert, Christian D.; Dannenmaier, Stefan; Drepper, Friedel; Weill, Uri; Höß, Philipp et al. (June 2017). "Definition of a High-Confidence Mitochondrial Proteome at Quantitative Scale". Cell Reports 19 (13): 2836–2852. doi:10.1016/j.celrep.2017.06.014. பன்னாட்டுத் தர தொடர் எண்:2211-1247. பப்மெட்:28658629.
- ↑ Gómez-Serrano, M (November 2018). "Mitoproteomics: Tackling Mitochondrial Dysfunction in Human Disease.". Oxid Med Cell Longev 2018: 1435934. doi:10.1155/2018/1435934. பப்மெட்:30533169.
- ↑ Uetz, P. (2004-10-15). "From ORFeomes to Protein Interaction Maps in Viruses" (in en). Genome Research 14 (10b): 2029–2033. doi:10.1101/gr.2583304. பன்னாட்டுத் தர தொடர் எண்:1088-9051. பப்மெட்:15489322.
- ↑ Maxwell, Karen L.; Frappier, Lori (June 2007). "Viral proteomics". Microbiology and Molecular Biology Reviews 71 (2): 398–411. doi:10.1128/MMBR.00042-06. பன்னாட்டுத் தர தொடர் எண்:1092-2172. பப்மெட்:17554050.
- ↑ Viswanathan, Kasinath; Früh, Klaus (December 2007). "Viral proteomics: global evaluation of viruses and their interaction with the host". Expert Review of Proteomics 4 (6): 815–829. doi:10.1586/14789450.4.6.815. பன்னாட்டுத் தர தொடர் எண்:1744-8387. பப்மெட்:18067418. https://pubmed.ncbi.nlm.nih.gov/18067418.
- ↑ Yang, Ganglong; Xu, Zhipeng; Lu, Wei; Li, Xiang; Sun, Chengwen; Guo, Jia; Xue, Peng; Guan, Feng (2015-07-31). "Quantitative Analysis of Differential Proteome Expression in Bladder Cancer vs. Normal Bladder Cells Using SILAC Method". PLOS ONE 10 (7): e0134727. doi:10.1371/journal.pone.0134727. பன்னாட்டுத் தர தொடர் எண்:1932-6203. பப்மெட்:26230496. Bibcode: 2015PLoSO..1034727Y.
- ↑ An, Yao; Zhou, Li; Huang, Zhao; Nice, Edouard C.; Zhang, Haiyuan; Huang, Canhua (2019-05-04). "Molecular insights into cancer drug resistance from a proteomics perspective". Expert Review of Proteomics 16 (5): 413–429. doi:10.1080/14789450.2019.1601561. பன்னாட்டுத் தர தொடர் எண்:1478-9450. பப்மெட்:30925852.
- ↑ Peng, Xing-Chen; Gong, Feng-Ming; Wei, Meng; Chen, Xi; Chen, Ye; Cheng, Ke; Gao, Feng; Xu, Feng et al. (December 2010). "Proteomic analysis of cell lines to identify the irinotecan resistance proteins" (in en). Journal of Biosciences 35 (4): 557–564. doi:10.1007/s12038-010-0064-9. பன்னாட்டுத் தர தொடர் எண்:0250-5991. பப்மெட்:21289438.
- ↑ Chen, Yan; Barat, Bidisha; Ray, W. Keith; Helm, Richard F.; Melville, Stephen B.; Popham, David L. (2019-03-15). "Membrane Proteomes and Ion Transporters in Bacillus anthracis and Bacillus subtilis Dormant and Germinating Spores" (in en). Journal of Bacteriology 201 (6). doi:10.1128/JB.00662-18. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-9193. பப்மெட்:30602489.
- ↑ Wilkins, Marc (Dec 2009). "Proteomics data mining". Expert Review of Proteomics (England) 6 (6): 599–603. doi:10.1586/epr.09.81. பப்மெட்:19929606.
- ↑ "Progress with gene-product mapping of the Mollicutes: Mycoplasma genitalium". Electrophoresis 16 (1): 1090–94. 1995. doi:10.1002/elps.11501601185. பப்மெட்:7498152.
வெளி இணைப்புகள்
[தொகு]- பிஐஆர் தரவுத்தளம்
- யூனிபிரோட் தரவுத்தளம்
- Pfam database at the Library of Congress Web Archives (பரணிடப்பட்டது 2011-05-06)