புபொப 7752 மற்றும் புபொப 7753

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புபொப 7752 / 7753
கண்டறிந்த தகவல்கள் (J2000 ஊழி)
விண்மீன் குழுபெகாசசு
வல எழுச்சிக்கோணம்23h 46m 58.5s / 23h 47m 04.8s[1]
பக்கச்சாய்வு+29° 27′ 32″ / +29° 29′ 00″[1]
செந்நகர்ச்சி5072 ± 5 / 5168 ± 6 km/s[1]
தூரம்272 Mly[சான்று தேவை]
வகைI0 / SAB(rs)bc[1]
தோற்றப் பரிமாணங்கள் (V)0′.8 × 0′.5 / 3′.3 × 2′.1[1]
தோற்றப் பருமன் (V)15.0 / 12.8[1]
ஏனைய பெயர்கள்
UGC 12779 / 12780,[1] PGC 72382 / 72387,[1] Arp 86[1]
இவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல்

புபொப 7752 மற்றும் புபொப 7753 (NGC 7752 and NGC 7753) என்பவை வானில் தோராயமாக 272 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள பெகாசசு விண்மீன் குழுவின் ஒரு தொகுப்பாகும்.

புபொப 7753 என்பது தொடக்கநிலை விண்வெளி மண்டலமாகும். இது சிறிய உட்கருவுடன் கூடிய தண்டு கருச்சுருள் அண்டம் எனப்படுகிறது. புபொப 7752 என்பது புபொப 7753 இன் துணைக்கோள் விண்மீன் மண்டலமாகும். இது தண்டு கருச்சுருள் ஒடுக்க உருவ அண்டம் எனப்படுகிறது .இதனுடைய தோற்றம் புபொப 7753 இன் சுருள் கை ஒன்றுடன் வெளிப்படையாக இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இது சுழல் விண்மீன் மண்டலம் எம்51ஏ வைப் போலவும் இதனுடைய துணைக்கோள் புபொப 5195 எம்51பி யைப் போலவும் ஒத்திருக்கின்றன. 2006 ஆம் ஆண்டு சனவரி 2 ஆம் நாளில் ஒரு மீயொளிர் விண்மீன் வெடிப்பு (சுப்பர்னோவா மீஒ 2006ஏ) புபொப 7753 இல் பார்க்கப்பட்டது. இது ஒன்றே இதுவரையில் புபொப 7752 மற்றும் 7753 விண்மீன் மண்டலத்தில் பார்க்கப்பட்ட மீயொளிர் விண்மீன் வெடிப்பு ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 "NASA/IPAC Extragalactic Database". Results for NGC 7752 / 7753. பார்த்த நாள் 2006-11-21.

ஆள்கூறுகள்: Sky map 23h 46m 58.5s, +29° 27′ 32″

வெளிப்புற இணைப்புகள்[தொகு]