புன்னிலப் பக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புன்னிலப் பக்கி
ஒசை (ராஜஸ்தானில் பதிவிடப்பட்டது)
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: பக்கி
குடும்பம்: கேப்ரிமுல்கிடே
பேரினம்: கேப்ரிமுல்கசு
இனம்: கே. அபினீசு
இருசொற் பெயரீடு
கேப்ரிமுல்கசு அபினீசு
கோர்சூபீல்டு, 1821

புன்னிலப் பக்கி (Savanna nightjar)(கேபரிகசு அபினீசு) என்பது தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் ஒரு வகை இரவு பக்கி ஆகும். எட்டு துணையினங்கள் இந்தச் சிற்றினத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவை: கே. அ. மான்டிகோலசு, கே. அ. அமோயென்சிசு, கே. அ. இசுடிக்டோமசு, கே. அ. அபினிசு, கே. அ. திமோரென்சிசு, கே. அ. கிரிசேடசு, கே. அ. மைண்டனென்சிசு மற்றும் சி. ஏ. புரோபின்கசு.[2] இதன் வாழ்விடம் திறந்தவெளி காடுகள் மற்றும் புதர்கள் நிறைந்த பகுதிகள் ஆகும். இதன் நீளம் சுமார் 25 cm (9.8 அங்) ஆகும். உடலின் மேல் பகுதிகள் பழுப்பு-சாம்பல் மற்றும் புழுவார்த்தமாதிரி, வெளிர் பழுப்பு நிறப் புள்ளிகளுடன் இருக்கும்.[3] கீழ்ப்பகுதி பழுப்பு நிறத்தில், சிறிய கோடுகளுடன் இருக்கும். புன்னிலப் பக்கி இரவாடுதல் வகையினைச் சார்ந்தது. இதன் சிறப்பியல்பான உரத்த சிணுங்கல் இதனை அடையாளம் காணப்பயன்படக்கூடியது.[3] முக்கியமாக மாலை நேரத்தில் பறக்கும் போது இந்த சிணுங்கல்கள் கேட்கும். பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாக மதிப்பிட்டுள்ளது. ஏனெனில் இது ஒரு பெரிய வரம்பினையும் எண்ணிக்கையினையும் கொண்டுள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 BirdLife International (2016). "Caprimulgus affinis". IUCN Red List of Threatened Species 2016: e.T22689985A93255114. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22689985A93255114.en. https://www.iucnredlist.org/species/22689985/93255114. பார்த்த நாள்: 11 November 2021. 
  2. Gill, F; D Donsker (eds.). "Frogmouths, Oilbird, potoos & nightjars". IOC World Bird List Version 6.3. பார்க்கப்பட்ட நாள் 30 September 2016.
  3. 3.0 3.1 Myers, Susan (2016). Wildlife of Southeast Asia. Princeton University Press. பக். 78. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781400880720. https://books.google.com/books?id=i428CwAAQBAJ&pg=PA78. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=புன்னிலப்_பக்கி&oldid=3813270" இலிருந்து மீள்விக்கப்பட்டது