புன்னச்சேரி நம்பி நீலகண்ட சர்மா
புன்னாசேரி நம்பி நீலகண்ட சர்மா (Punnasseri Nambi Neelakanta Sharma) பிரித்தானிய இந்தியாவில் பிறந்த ஒரு சமசுகிருத அறிஞரும், ஆசிரியரும் ஆவார். இவர் 1858 ஜூன் 17 அன்று பாலக்காடு மாவட்டத்தில் பட்டாம்பியில் நாராயணன் நம்பி மற்றும் அச்சுதத் நங்கய்யா அந்தர்ஜனம் ஆகியோருக்கு மூசத் குடும்பத்தில் பிறந்தார்.[1] சமசுகிருதத்தை வழக்கமான முறையில் கற்றுக் கொண்டார்.
1888 ஆம் ஆண்டில் சர்மா சமசுகிருதம் கற்பித்தலுக்கான ‘சரசுவதோதயோதினி’ என்ற மையத்தை பட்டாம்பியில் தொடங்கினார். பின்னர் அது ‘ஸ்ரீ நீலகண்ட அரசு சமசுகிருதக் கல்லூரி’ ஆனது. ‘விஞ்ஞானசிந்தாமணி’ அச்சகத்தையும் ஒரு மருத்துவமனையையும் நிறுவினார். திருவிதாங்கூர் மற்றும் கொச்சி மாநிலங்களின் மகாராஜாக்களிடமிருந்து பல்வேறு பட்டங்களையும் கௌரவங்களையும் பெற்ற சர்மா, பல கல்வி அமைப்புகளுக்குத் தலைமை தாங்கினார்.[2][3]
இறப்பு
[தொகு]நீலகண்ட சர்மா 1934 செப்டம்பர் 14 அன்று இறந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Biography on Kerala Sahitya Akademi portal". Biography on Kerala Sahitya Akademi portal. 2019-04-24. Retrieved 2019-04-24.
- ↑ Akhilavijnanakosam; D.C.Books; Kottayam
- ↑ Sahithyakara Directory; Kerala Sahithya Academy, Thrissur