புனோம் பென்னின் புராணக்கதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனோம் வாட்டுக்கு அருகில் பென் என்னும் பெண்ணின் சிலை

புனோம் பென்னின் புராணக்கதை (Phnom Penh Legend) என்பது புனோம் பென் நகரம் தோன்றியது எப்படி என்பதைக் கூறும் ஒரு புராணக்கதையாகும்.

பென் என்ற ஒரு பணக்காரப் பெண், இன்றைய புனோம் பென்னின் புறநகர்பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தாள். மீகாங் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோது, உள்ளீடற்ற மரமொன்று அவளுக்குச் சொந்தமான புல்வெளிக்கு மிதந்து வந்தது. அம்மரத்தில் நான்கு வெண்கல புத்தர் சிலைகள் இருந்தன. புத்தர் ஒரு புதிய வீட்டிற்குள் வரவேண்டும் என்று விரும்புவது போன்ற ஒரு அடையாளமாக அக்காட்சி அவளுக்குத் தோன்றியது. அதனால் அவள் புத்தருக்காக அங்கு ஒரு கோவில் கட்டினாள். இப்போதும் தலைநகர் புனோம் பென்னில் அந்தக் கோயிலும் இருப்பதாக நம்பப்படுகிறது.

பென் உருவாக்கிய அக்கோயில் பெரும் புகழுடன் வளர்ச்சியடைந்தது. பக்தர்கள் கூட்டம் கூட்டமாக கோயிலுக்கு வரத் தொடங்கினர். நூறு ஆண்டுகளுக்கு பின்னர் அங்கோர் படை சியாம் நகரின் மீது படையெடுத்த போது, கம்போடியாவின் தலைநகரம் புனோம் பென்னுக்கு மாற்றப்பட்டது. கெமர் மொழியில் புனோம் என்ற சொல்லின் பொருள் குன்று என்பதாகும். எனவே புனோம் பென் என்றால், பென் என்ற பெண்ணுக்குச் சொந்தமான மலை என்று பொருளாகும். அப்பெண் கட்டியதாக நம்பப்படும் அக்கோயில் மிகவும் பழமை வாய்ந்த நூற்றாண்டுகளுக்கு முந்தைய கோயில் ஆகும். அக்கோயிலை புனோம் வாட் என்று அல்லது மலைக் கோயில் என்று அழைக்கிறார்கள்.

சான்று[தொகு]

  • Major World Nations: Cambodia by Claudia Canesso.

இவற்றையும் காண்க[தொகு]