உள்ளடக்கத்துக்குச் செல்

புனைவிலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புனைவிலி[1] அல்லது அல்புனைவு (non-fiction) என்பது உண்மையை அடிப்படையாக கொண்டு எழுதப்படும் இலக்கியப் படைப்பாகும். இதில் சொல்லப்படுகின்ற சம்பவங்கள், மனிதர்கள், மற்றும் தகவல்கள் பெரும்பாலும் உண்மையானதாக இருக்க வேண்டும்.  [2] கற்பனைகளையோ, பொய்மைகளை வைத்து படைக்கப்படும் இலக்கியத்தை எழுத்தாளர் புனைவிலி என சொன்னால், அது ஏமாற்றுவதாக கருத்தப்படும். படைப்பின் மெய் பொய் தன்மையை தெரிவிக்காமல் எழுதப்படும் அனைத்துமே புனைவு என்றே பெரும்பாலும் எடுத்துக் கொள்ளப்படும்.[2][3] புனைவிலி இலக்கியங்கள் பொதுவாக அகநிலை சார்ந்தோ, புறநிலை சார்ந்தோ எழுதப்படும். இவை பெரும்பாலும் விவரண இலக்கியமாகவே கொள்ளப்படுவதுண்டு. புனைவிலி போன்றல்லாது புனைவு இலக்கியங்களில் பகுதியோ, முழுமையோ கற்பனையின் அடிப்படையில் எழுதப்படுவதாகும்.

குறிப்புகள்

[தொகு]
  1. http://www.viruba.com/Nigandu/Nigandu_Word.aspx?ID=3933
  2. 2.0 2.1 Farner, Geir (2014). "Chapter 2: What is Literary Fiction?". Literary Fiction: The Ways We Read Narrative Literature. Bloomsbury Publishing USA.
  3. Culler, Jonathan (2000). Literary Theory: A Very Short Introduction. Oxford University Press. p. 31. Non-fictional discourse is usually embedded in a context that tells you how to take it: an instruction manual, a newspaper report, a letter from a charity. The context of fiction, though, explicitly leaves open the question of what the fiction is really about. Reference to the world is not so much a property of literary [i.e. fictional] works as a function they are given by interpretation.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புனைவிலி&oldid=1911365" இலிருந்து மீள்விக்கப்பட்டது