புனே பழங்குடியினர் அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனே பழங்குடியினர் அருங்காட்சியகம்
Pune Tribal Museum
Tribal museum (Sadhu waswani path) (43).JPG
Map
நிறுவப்பட்டது1962
அமைவிடம்புனே, மகாராட்டிரம்
வகைபழங்குடியினர் அருங்காட்சியகம்

புனே பழங்குடியினர் அருங்காட்சியகம் (Pune Tribal Museum) இந்தியாவின் மகாராட்டிர மாநிலம் புனே நகரில் அமைந்துள்ளது. புனேவில் உள்ள பழங்குடி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் விரிவாக்கமாக 1962 ஆம் ஆண்டு அருங்காட்சியகம் நிறுவப்பட்டது,[1] 1965 ஆம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கி மகாராட்டிர பழங்குடியினரின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தி வருகிறது. பழங்குடியினரின் கலை மற்றும் கவித்துவ அம்சங்களைப் பாதுகாக்க உறுதிபூண்ட ஓர் இடமாக செயல்படுகிறது.[1] அருங்காட்சியகத்தின் நிர்வாகம் தற்போது புனேவில் உள்ள பழங்குடி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் உள்ளது.[2]

கண்காட்சிகள்[தொகு]

மகாராட்டிராவின் உள்ள 47 பழங்குடியினருடன் தொடர்புடைய இசைக்கருவிகள், நகைகள், கருவிகள், கைவினைப்பொருட்கள், ஆடைகள், சிலைகள், வீட்டுப் பொருட்கள், புகைப்படங்கள், ஆயுதங்கள், கருவிகள், போர் ஓவியங்கள், மூங்கில் வேலைகள், முகமூடிகள், உடைகள், பாத்திரங்கள் உள்ளிட்ட கலைப்பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.[2]

விரிவாக்க திட்டங்கள்[தொகு]

புனே விமான நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள், அதே விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புனேவின் காட்சி மையமான பழங்குடியினர் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் உள்ள இந்த அருங்காட்சியகத்தை மெய்நிகர் சுற்றிப் பார்க்க உதவும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Neela Karnik (2007) Museumising the tribal: Why tribe‐things make me cry, South Asia: Journal of South Asian Studies, 21:1, 275-288, DOI: 10.1080/00856409808723337
  2. 2.0 2.1 HT, Correspondent (2017-06-29). "Visit this Pune museum where Maharashtra's tribal heart still beats". Hindustan Times, India. 2018-04-24 அன்று பார்க்கப்பட்டது.
  3. Sengupta, Joy (2018-01-17). "Flyers can go on virtual tours of tribal museum at Pune airport". Times of India, India. 2018-04-24 அன்று பார்க்கப்பட்டது.

புற இணைப்புகள்[தொகு]