புனே பல்கலைக்கழகம்

ஆள்கூறுகள்: 18°33′08″N 73°49′29″E / 18.5523°N 73.8246°E / 18.5523; 73.8246
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(புனே பல்கலைக் கழகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சாவித்ரிபாய் புலே புனே பல்கலைக்கழகம்
Savitribai Phule Pune University
முந்தைய பெயர்கள்
  • புனே பல்கலைக்கழகம்
குறிக்கோளுரைYaḥ kriyāvān saḥ paṇḍitaḥ (சமசுகிருதம்)
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
Where Actions Prove Knowledge[1]
வகைபொது ஆய்வு
உருவாக்கம்10 பெப்ரவரி 1949; 75 ஆண்டுகள் முன்னர் (1949-02-10)
நிதிநிலை593.53 கோடி (US$74 மில்லியன்)
{{{1}}}[2]
வேந்தர்மகாராட்டிர ஆளுநர்
துணை வேந்தர்பேராசிரியர் சுரேஷ் கோசுவாய்
மாணவர்கள்665121[3]
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்6,948[4]
அமைவிடம், , ,
18°33′08″N 73°49′29″E / 18.5523°N 73.8246°E / 18.5523; 73.8246
வளாகம்நகர்ப்புறம்
நிறங்கள்     Dark cyan
     Tangerine
சுருக்கப் பெயர்
கட்டிட விவரங்கள்
Map
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா)
இணையதளம்{{URL|example.com|optional display text}}
பல்கலைக்கழக முதன்மைக் கட்டிடம்

சாவித்ரிபாய் புலே புனே பல்கலைக்கழகம் (Savitribai Phule Pune University)(முன்னர்: புனே பல்கலைக்கழகம்)[5] இந்தியாவில் உள்ள முதன்மையான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். இப்பல்கலைக்கழகம் மகாராட்டிர மாநிலம் புனே நகரின் வடமேற்கில் அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகம் 1948ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.[6] இது சுமார் 411 ஏக்கர் (1.7 சதுர கிலோமீட்டர்கள்) பரப்பளவில் பரந்து விரிந்துள்ள வளாகத்தில்[7] 46 கல்விசார் துறைகளுடன் அமைந்துள்ளது.[8] இப்பல்கலைக்கழகத்தினை கிழக்கத்திய ஒக்ஸ்போர்ட் எனவும் அழைக்கின்றனர். முதலில் புனே பல்கலைக்கழகம் என பெயரிடப்பட்ட இப்பல்கலைக்கழகத்திற்கு பின்னர், பெண்களின் விடுதலைக்காகவும், அதிகாரத்திற்காகவும், கல்விக்காகவும் போராடிய சாவித்திரிபாய் புலே எனும் பெண்மணியின் பெயர் சூட்டப்பட்டது.[9]

இந்தப் பல்கலைக்கழகத்தின் ஆளுமையின் கீழ் பல ஆராய்ச்சி நிலையங்கள், இணைக்கப்பட்ட கல்லூரிகள், திணைக்களங்கள் போன்றவை அமைந்துள்ளன.[10][11]

வரலாறு[தொகு]

1948ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் பத்தாம் நாள் மும்பை சட்டப்பேரவை நிறைவேற்றிய புனா பல்கலைக் கழகச் சட்டம் என்பதன் அடிப்படையில் புனே பல்கலைக் கழகம் நிறுவப்பட்டது.[12] 1948ஆம் வருடத்திலேயே முனைவர் எம். ஆர். ஜயகர் இப்பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தராகப் பதவியேற்றார். அப்போதைய முதலமைச்சர் மற்றும் மும்பை நகரின் கல்வியமைச்சராக இருந்த பி. ஜி.கெர் இந்தப் பல்கலைக்கழகத்திற்கான வளாகத்திற்கான இடத்தினை உறுதி செய்தார். 1950ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில், இந்தப் பல்கலைக் கழகத்திற்கு 411 ஏக்கர்கள் (அதாவது 1.7 சதுர கிலோமீட்டர்கள்) நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.[13]

இந்தப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டுள்ள இடம் வரலாற்று ரீதியான முக்கியத்துவம் உண்டு. கட்கிப் போர் நிகழ்கையில் இதன் சில சம்பவங்கள் தற்போது புனே பல்கலைக் கழகம் நிறுவப்பட்டுள்ள இடத்தில் நிகழ்ந்தன. தற்போதைய பிரதானக் கட்டிடம் 1864ஆம் ஆண்டு கட்டப்பட்டு ஆளுநர் இல்லம் எனப்பட்டது.[14][15]

19ஆம் நூற்றாண்டின் இந்திய சமூக சீர்திருத்தவாதியான சாவித்திரிபாய் புலே, காலனித்துவ ஆட்சிக் காலத்தில் மகாராட்டிராவில் பெண்கள் மற்றும் தலித் சமூகங்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றிய சாவித்ரிபாய் புலேயின் நினைவாக 9 ஆகத்து 2014 அன்று புனே பல்கலைக்கழகம் சாவித்ரிபாய் பூலே புனே பல்கலைக்கழகம் எனப் பெயர் மாற்றப்பட்டது. புலேயும் புலேயின் கணவரான மகாத்மா ஜோதிபா புலேயும் 1848-ல் இந்தியாவின் முதல் பூர்வீக பெண்களுக்காக நடத்தப்படும் பள்ளியை நிறுவினர்.[16]

அமைப்பும் நிர்வாகமும்[தொகு]

அதிகார எல்லை[தொகு]

துவக்கத்தில், இந்தப் பல்கலைக் கழகத்தின் அதிகார எல்லை மகாராட்டிரா மாநிலத்தின் மேற்குப் பகுதியின் 12 மாவட்டங்களைக் கொண்டிருந்தது. இருப்பினும், 1964ஆம் ஆண்டு கோலாப்பூர் நகரில் சிவாஜி பல்கலைக் கழகம் அமைக்கப் பெற்றவுடன், இதன் அதிகார எல்லையானது புனே, அகமதுநகர், நாசிக், துலே மற்றும் ஜல்காவுன் ஆகிய ஐந்து நகரங்களுக்குள்ளாகச் சுருங்கி விட்டது. இவற்றில் துலே மற்றும் ஜல்காவுன் ஆகிய இரண்டும் 1990ஆம் ஆண்டு நிறுவப்பட்ட வட மகாராட்டிரா பல்கலைக் கழகத்தின் கீழாக இணைந்துள்ளன.[17]

துணைவேந்தர்கள்[தொகு]

பல்கலைக்கழகத்தின் முன்னாள் மற்றும் தற்போதைய துணைவேந்தர்கள்:[18]

வ. எண் ஆண்டு துணைவேந்தர்
1 1948–56 முகுந்த் ராம்ராவ் ஜெயகர்
2 1956–1959 ஆர்.பி. பரஞ்ச்பை
3 1959–1961 தத்தாத்ரேய கோபால் கர்வே
4 1961–1964 டத்தோ வாமன் போட்டார்
5 1964–1966 நரஹர் விஷ்ணு காட்கில்
6 1966–1967 தனஞ்சய் ராமச்சந்திர காட்கில்
7 1967–1970 அரி விநாயக் படசுகர்
8 1970–1972 பி.பி. ஆப்தே
9 1972–1975 ஜி. எஸ் .மகாஜன்
10 1975–1978 தேவதத்தா தபோல்கர்
11 1978–1984 ராம் ஜி. தக்வாலே
12 1984–1988 வி. ஜி. பிடே
13 1988–1995 எஸ். சி. குப்தா
14 1995–1998 வசந்த் கோவாரிகர்
15 1998–2000 அருண் நிகவேகர்
16 2000–2001 என்.ஜே. சோனாவனே
17 2001–2006 அசோக் எஸ். கோலஸ்கர்
18 2006–2006 ரத்னாகர் கெய்க்வாட்
19 2006–2009 நரேந்திர ஜாதவ்
20 2009–2010 அருண் அட்சூல்
21 2010–2011 சஞ்சய் சாஹண்டே
22 2012–2017 வாசுதேயோ காடே
21 2017-2022 நிதின் ஆர். கர்மல்கர்
22 2022–2023 கர்பரி வி. காலே
23 2023- முதல் சுரேஷ் கோசாவி

இணைப்புகள்[தொகு]

1949ஆம் வருடம் இந்தப் பல்கலைக் கழகத்துடன் இணைந்திருந்த கல்லூரிகள் மொத்தமாக 18 ஆகும். இவற்றில், 8000 மாணாக்கர்களுக்கும் மேலான எண்ணிக்கை கொண்டிருந்த, புகழ் பெற்ற பெர்குசான் கல்லூரி, புனே பொறியியல் கல்லூரி, இராணுவ தொழிநுட்ப நிறுவனமும் அடங்கும். இதன் பிறகு, கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. 2004ஆம் வருடம் இந்தப் பல்கலைக் கழகம் 46 இளநிலைப் பட்டதாரித் துறைகள், 269 இணைப்புக் கல்லூரிகள் மற்றும் அங்கீகாரம் பெற்ற 118 ஆராய்ச்சி நிறுவனங்கள் உடனான 170,000 மாணவர்களை இளநிலை மற்றும் முது நிலை ஆகிய இரண்டு நிலைகளிலுமான பல்வேறு கல்வித் துறைகளில் கொண்டிருந்தது.[19]

இந்தப் பல்கலைக்கழகம் வித்யாவாணி என்னும் சமூக வானொலியை நடத்துகிறது. இதில் புனே பல்கலைக்கழகம் நடத்தும் பல்வேறு துறைகள், மாணவர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள், பல்கலைக்கழகத்தின் தேர்வுகள், அவற்றின் முடிவுகள் மற்றும் நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் ஆகியவை ஒலிபரப்பாகின்றன.[20] இளைஞர்களின் பிரச்சினைகளுடன் தொடர்புடையதான பல்வேறு கல்விசார் நிரல்களும் ஒலிபரப்பாகின்றன.[21]

ஆய்வு நிறுவனங்கள்[தொகு]

புனே பல்கலைக் கழகம் 70 ஆராய்ச்சி நிறுவனங்களை அங்கீகரித்துள்ளது. இவற்றில், தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பல்கலைக்கழகங்களுக்கான வானியல், வானியற்பியல் மையம், தேசிய வேதியியல் ஆய்வகம், தேசிய உயிரணு அறிவியல் மையம், அரசியல் மற்றும் பொருளாதாரத்திற்கான கோகலே கல்வி நிறுவனம், தேசிய தீநுண்மியியல் ஆய்வு நிறுவனம், இந்தியப் புள்ளியியல் கழகம் சார்ந்த ஆவணப்படுத்தல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் (Documentation Research and Training Centre(DRTC) of the Indian Statistical Institute (ISI)) ஆகியவை அடங்கும்.

புனே பல்கலைக் கழகத்துடன் தொடர்புடைய இதர ஆராய்ச்சி நிறுவனங்கள் பின்வருமாறு:

  • வானொலி வானியற்பியலுக்கான தேசிய மையம் (National Centre for Radio Astrophysics).
  • மத்திய உயர்கணிணி மேம்பாட்டு மையம். பராம் வீச்சு கொண்ட மிகு திறன் வாய்ந்த கணினிகளுக்கு இதுவே தாயகமாகும்.
  • உயிரிய தகவல் நுட்பம் மற்றும் உயிரிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (Institute of Bioinformatics and Biotechnology)

துறைகள்[தொகு]

  • நிலவியல் துறை பரணிடப்பட்டது 2009-06-11 at the வந்தவழி இயந்திரம்- இத்துறை 1950ஆம் ஆண்டு முதலில் புனே பல்கலைக் கழகத்தில் நிறுவப்பட்டது. ஒவ்வொரு வருடமும், இத்துறையில் முதுகலை/ முதுநிலை அறிவியல், ஆய்வியல் நிறைஞர், முனைவர் படிப்பு ஆகியவற்றிற்கு மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இத்துறை தொடர்பான தொலை உணர்வு மற்றும் நிலவியல் தொடர்பான தகவல் அமைப்புடன் தொடர்புடைய கல்விசார் படிப்புகளை இத்துறை வழங்குகிறது.
  • உயிரியத் தகவல் மற்றும் உயிரிய நுட்பம் (ஐபிபி) பரணிடப்பட்டது 2009-08-31 at the வந்தவழி இயந்திரம் - உயிரியத் தகவல் மற்றும் உயிரிய நுட்பம் என்னும் இத்துறையானது புனே பல்கலைக் கழகத்துடன் இணைந்துள்ள ஒரு சுயாட்சி கொண்ட கல்வி நிறுவனமாகும். இது உயிரியத் தகவல் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும், உயர்தர ஆராய்ச்சிச் சூழல் மனித வளம் ஆகியவற்றைக் குவிமையப்படுத்தவும் துவக்கப்பட்டது. ஐபிபி இந்தியாவின் புனே பல்கலைக் கழக வளாகத்தினுள் அமைந்துள்ளது.
  • வேதியியல் துறை பரணிடப்பட்டது 2017-12-13 at the வந்தவழி இயந்திரம் - இது புனே பல்கலைக் கழகம் முதன் முதலாகத் துவக்கிய துறைகளுள் ஒன்றாகும். இது "சிஏஎஸ்" என்னும் உயர் நிலையை (அதாவது வேதியியலில் உயர் கல்விக்கான மையம் எனப் பொருள்படுவதான) நிலையைப் பெற்றுள்ளது.
  • நுண்ணுயிரியல் துறை பரணிடப்பட்டது 2010-05-07 at the வந்தவழி இயந்திரம் - இத்துறையும் பல்கலைக் கழகத்தினுள் சுயாட்சி பெற்றுள்ள ஒரு துறையாகும். இது நுண்ணுயிரியல் தொடர்பான நோய் எதிர்ப்பியல், மருத்துவ நுண்ணுயிரியல், தொழிற்துறை நுண்ணுயிரியல் மற்றும் உயிரிய நுண்ணுயிரியல் ஆகிய படிப்புகளை வழங்குகிறது.
  • மேலாண்மை அறிவியற் துறை பரணிடப்பட்டது 2008-03-10 at the வந்தவழி இயந்திரம் - இது பல்கலைக் கழகம் நடத்தும் ஒரு வணிகப் பள்ளியாகும்.
  • உயிரிய நுட்பத் துறை பரணிடப்பட்டது 2010-05-19 at the வந்தவழி இயந்திரம் - 1985ஆம் ஆண்டு உயிரிய நுட்பத்திற்கான தேசிய வாரியம், இப்படிப்பில் முதுகலைப் பட்டம் வழங்கத் தகுதியுள்ள ஐந்து மையங்களில் ஒன்றாக புனே பல்கலைக் கழகத்தைத் தேர்ந்தெடுத்தது.
  • சுற்றுச்சூழல் அறிவியற்துறை பரணிடப்பட்டது 2010-04-19 at the வந்தவழி இயந்திரம் - இத்துறை முதலில் ஒரு துறை சார்ந்த கல்வியாக 1978ஆம் ஆண்டு புனேவில் உருவாகியது. இதன் முதற்படியாக, அனைத்து அறிவியற் துறைகளிலும், சுற்றுச் சூழல் அறிவியல் ஒரு விருப்பப் பாடமாக அறிமுகமானது. விரைவிலேயே இதன் புகழ் ஓங்கியதன் விளைவாக பி.எஸ்சி (அப்ளைட்) என்னும் ஒரு இளங்கலைப் பட்டம் 1986ஆம் ஆண்டு துவக்கப்பட்டுப் பின்னர் முழு நேர எம்.எஸ்சி என்னும் இரண்டு வருட முதுகலைப் படிப்பாக உயர் நிலை அடையப் பெற்றது.
  • கணினி அறிவியல் துறை பரணிடப்பட்டது 2017-12-12 at the வந்தவழி இயந்திரம் - இந்தியப் பல்கலைக் கழகங்களில் கணினி தொடர்பாக அளிக்கப்படும் கல்வித்துறைகளில் மிகவும் மூத்தது இதுவேயாகும். கணினி என்பது மிகவும் குறைவாகவும், தகவல் தொழில் நுட்பம் என்பது முற்றிலும் அறியப்படாமலும் இருந்த 1980ஆம் ஆண்டுகளிலேயே ஒரு வருட கல்விசார் நிரல் ஒன்று பி.எஸ்சி (அப்ளைட்) என்னும் கணினி அறிவியல் இளங்கலைப் பட்டத்திற்கு முற்செல்வதாகத் துவங்கப்பட்டது. 1983ஆம் ஆண்டு எம்.சி.ஏ நிரலும் 1985ஆம் ஆண்டு எம்.டெக் நிரல் மற்றும் 1986ஆம் வருடம் ஒரு வருட பி.எஸ்சி.(அப்ளைட்) நிரல் ஒரு இரண்டு வருட முதுகலைப் படிப்பாக மாற்றப்பட்டதும் நிகழ்ந்தன.
  • இயற்பியல் துறை பரணிடப்பட்டது 2017-12-09 at the வந்தவழி இயந்திரம் - புனே பல்கலைக் கழகத்தின் இயற்கை எழில் மிக்க வளாகத்தில் அமைந்துள்ள இது தனது நடவடிக்கைகளை 1952ஆம் ஆண்டு துவக்கியது. அதன் பிறகு இதற்கு ஏறுமுகம்தான். இன்றைய தினம் அறிவியலின் பல்வேறு எல்லைகளில் நிகழ்ந்து வரும் ஆராய்ச்சிகள், உயர்தர முதுகலை மற்றும் முனைவர் பட்டங்கள் அளிக்கும் கல்வித் துறை என இது ஒரு தேனீயின் சுறுசுறுப்புடன் இது இயங்கி வருகிறது. பருப்பொருள் அறிவியல், திண்மநிலை இயற்பியல், உறைவி நிலை இயற்பியல், நேரிலா இயக்கவியல், ஊருவி ஒளிவருடி நுண்ணியல், மேக இயற்பியல், மெலிய/ வலிய புகைப்படச்சுருள்கள், வைர மேற்பூச்சுகள், அணு மற்றும் விரைவி இயற்பியல், கிளர்கதிர் ஒளிமி, மின்னணு நீர்ம இயற்பியல், தள எதிர்மின்மம்/ அயனி நுண்ணியல், உயிரிய இயற்பியல் ஆகிய பல்வேறு துறைகளிலும் கல்விசார் மற்றும் ஆராய்ச்சி நிரல்களை இத்துறை கொண்டுள்ளது. இத்துறையில் கல்வி கற்பித்தல் நாட்டின் மிகச் சிறந்த பணி என்பதாக அங்கீகாரம் பெற்றுள்ளது. மாணவர்கள் மட்டும் அல்லாது பொதுமக்களிடமும் இத்துறை சார்ந்த பலன்களைக் கொண்டு செல்வதில் இத்துறையின் ஆசிரியர் குழுமம் மிகுந்த ஆவல் கொண்டுள்ளது. குறிப்பாக, உள்ளூர் பத்திரிகைகள், வானொலி, மராத்தி மற்றும் ஆங்கில மொழியில் வெகுஜன மற்றும் தொழில் நுட்பக் கட்டுரைகள், முன்னரே அறிந்ததை நினைகூர்வதற்கான புத்துணர் நிரல்கள், உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களுக்கான பயிற்சி நிரல்கள், வேனிற்கால நிரல்கள், இயற்பியல் மாணவர்களுக்கான ஒளிக்காட்சிப் பாடங்கள் ஆகியவற்றின் மூலம் இதனை நிறைவேற்றுகிறது. இந்திய அரசின் டிஎஸ்டியிலிருந்து அதன் ஃபிஸ்ட் (பிஸ்ட்) செயற்திட்டத்தின் கீழ் இத்துறை நிதியுதவி பெறுகிறது. இந்நிரல்களின் வாயிலாக எண்ணற்ற மாணவர்களும் ஆசிரியர்களும் பயன் அடைகின்றனர்.
  • வளிமண்டல மற்றும் வான்வெளி அறிவியல்கள் பரணிடப்பட்டது 2010-06-10 at the வந்தவழி இயந்திரம்
  • மின்னணு அறிவியற் துறை பரணிடப்பட்டது 2017-02-24 at the வந்தவழி இயந்திரம்
  • மாதிரியாக்கம் மற்றும் உருவகப்படுத்துதல் துறை பரணிடப்பட்டது 2017-11-07 at the வந்தவழி இயந்திரம்

பல்கலைக் கழகம் நடத்தும் சுயாட்சி பெற்ற துறைகள்

குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்[தொகு]

  • சாவித்ரிபாய் பூலே புனே பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களில் இந்தியாவின் 7வது பிரதமர் விசுவநாத் பிரதாப் சிங் உட்பட இந்தியாவின் முக்கிய அரசியல்வாதிகளும் அடங்குவர்.
  • பிரதீபா பாட்டீல், இந்தியாவின் 12வது குடியரசுத் தலைவர்
  • விலாஸ்ராவ் தேஷ்முக், மகாராட்டிராவின் 17வது மற்றும் 19வது முதல்வர்
  • சரத் பவார், மகாராட்டிராவின் முன்னாள் முதல்வர்.
  • இந்தியாவின் 9வது பிரதமரான பி. வி. நரசிம்ம ராவ், புனே பல்கலைக்கழகத்தின் கீழ் ​​பெர்குசன் கல்லூரி செயல்பட்டபோது இங்கு பட்டம் பெற்றார்.
  • லீலா பூனாவாலா, ஆல்பா லாவல் இந்தியா என்னும் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் பத்மஸ்ரீ பட்டம் பெற்றவரும் ஆவார்.
  • லாஸ் ஏஞ்சல்ஸ் கலிபோர்னியா பல்கலைக் கழக ஆராய்ச்சித் துறையின் துணைவேந்தர் சி. குமார் என். படேல் கரியமில ஒளிமியைக் கண்டுபிடித்தவர் ஆவார். இவர் 1996ஆம் ஆண்டு, ஐக்கிய அமெரிக்க நாடுகளின் அறிவியலுக்கான தேசியப் பதக்கம் பெற்றார்.
  • ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தின் ஹிட்டாச்சி அமெரிக்கப் பேராசிரியரான தாமஸ் கைலத் 2000ஆம் ஆண்டு தகவல் துறையில் கருத்தாக்கம் என்பது குறித்தான தமது பங்களிப்பிற்காக ஷான்னோன் விருது பெற்றார். இவர் சிலிக்கான் வேலியின் புகழ்பெற்ற பொறியாளர் கூடத்தில் (2005) அனுமதி பெற்றுள்ளார். கணிதம் மற்றும் பொறியியல் ஆகிய துறைகளில் அளித்த பங்களிப்பிற்காக இந்திய அரசின் பத்ம பூசண் விருதினையும் 2009ஆம் ஆண்டு இவர் பெற்றார்.
  • இந்தியாவின் மிகப்பெரும் இருசக்கர விசையுந்தித் தயாரிப்பு நிறுவனமான பஜாஜ் ஆட்டோவின் மேலாண்மை இயக்குனரான ராஜிவ் பஜாஜ்.
  • இந்திய அறிவியற் கழகத்தின் இயக்குநர் பத்மநாபன் பலராம் புனே பல்கலைக் கழகத்தில் தனது இளநிலைப் பட்டத்தினையும், பின்னர் கார்னேஜி மெல்லான் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்றார். ஆர்வார்ட்டு பல்கலைக் கழகத்தில், நோபெல் பரிசு வென்றவரான ராபர்ட் பர்ன்ஸ் வுட்வார்ட் உடன் முனைவர் பட்ட மேலாய்வு ஒன்றில் பங்கேற்றா. பின்னர் இவர் இந்திய அறிவியல் கழகத்தின் மூலக்கூறு உயிரிய இயற்பியல் துறையில் பணியாற்றி வருகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Motto in English – Pune University Emblem Details". University of Pune. பார்க்கப்பட்ட நாள் 22 July 2011.
  2. "Online senate meet clears ₹540 crore SPPU budget for 2021-22". பார்க்கப்பட்ட நாள் 21 March 2021.
  3. {{cite web}}: Empty citation (help)
  4. "University Student Enrollment Details". ugc.ac.in. பார்க்கப்பட்ட நாள் 10 February 2020.
  5. "It's Savitribai Phule Pune University". Times Of India. பார்க்கப்பட்ட நாள் 7 August 2014.
  6. "Pune University History". Pune University. பார்க்கப்பட்ட நாள் 21 September 2013.
  7. "The University of Pune Campus". University of Pune. 2010. Archived from the original on 29 செப்டம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 29 September 2011. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  8. http://www.naac.gov.in/
  9. "Pune university to be renamed after Savitribai Phule". The Times of India. 8 July 2014. http://timesofindia.indiatimes.com/city/pune/Pune-university-to-be-renamed-after-Savitribai-Phule/articleshow/37989022.cms. பார்த்த நாள்: 22 July 2015. 
  10. "List of Affiliated Colleges and Institutions". Pune University. பார்க்கப்பட்ட நாள் 22 September 2013.
  11. "Departments List". Pune University. பார்க்கப்பட்ட நாள் 22 September 2013.
  12. "Pune University History". Pune University. பார்க்கப்பட்ட நாள் 21 September 2013.
  13. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; university history2 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  14. "University of Pune turns 65 : Nizam Guest House to Oxford of the East". 10 February 2014. பார்க்கப்பட்ட நாள் 20 May 2018.
  15. Datta, Rangan (22 March 2023). "Grab a slice of history at Savitribai Phule Pune University in Maharashtra". My Kolkata. https://www.telegraphindia.com/my-kolkata/places/savitribai-phule-pune-university-heritage-tour-offers-insightful-stories-from-british-era-and-enriches-your-mind-and-soul/cid/1924261. 
  16. "It's Savitribai Phule Pune University". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 7 August 2014.
  17. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; university history4 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  18. "Vice-Chancellors List". பார்க்கப்பட்ட நாள் 20 August 2018.
  19. [1] பரணிடப்பட்டது 2010-06-08 at the வந்தவழி இயந்திரம்]
  20. "Visually impaired get taste of radio broadcasts". Times of India.
  21. http://www.unipune.ac.in/university_files/vidyavani.htm

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புனே_பல்கலைக்கழகம்&oldid=3810071" இலிருந்து மீள்விக்கப்பட்டது