புனேரி பகாதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகாதேவ் கோவிந்த் ரானடே புனேரி பகாதி அணிந்துள்ளார்

புனேரி பகாதி (Puneri Pagadi) என்பது ஒரு தனித்துவமான வகை தலைப்பாகையாகும். புனே நகரத்தில் பெருமை மற்றும் கௌரவத்தின் அடையாளமாக இது கருதப்படுகிறது.[1] புனேயில் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு இத்தலைப்பாகை அறிமுகப்படுத்தப்பட்டது.[2] கவுரவ சின்னமாக இருந்தாலும், பல ஆண்டுகளாக தலைப்பாகையின் பயன்பாடு மாறி, தற்போது கல்லூரிகளில் பாரம்பரிய நாட்களில் மட்டும் பயன்படுத்தப்படுகிறது.[3] தலைப்பாகையின் அடையாளத்தைப் பாதுகாக்க, இதற்கு புவியியல் குறியீடு தகுதி வழங்க உள்ளூர் மக்களிடமிருந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டன.[3] அவர்களின் கோரிக்கை பின்னர் நிறைவேற்றப்பட்டது. புனேரி பகாதி 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4 ஆம் தேதியன்று அறிவுசார் சொத்து ஆனது.[1][3][4][5][6]

வரலாறு[தொகு]

புனேவின் தலைப்பாகை பொருத்துபவர்கள், 1890

புனேரி பாணியில் தலைப்பாகை 19 ஆம் நூற்றாண்டில் சமூக சீர்திருத்தவாதியான மகாதேவ் கோவிந்த் ரானடே என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர், லோகமான்ய திலக், இயே.எசு.கரண்டிகர், டி.டி. சத்யே, டாக்டர் விட்டல்ராவ் காடே, தத்யாசாகேப் கேல்கர் மற்றும் டத்தோ வாமன் போட்தார் போன்ற பல தலைவர்கள் அணிந்தனர்.[2] புனேரி பகாதி 1973 ஆம் ஆண்டில் மராத்தி நாடகமான காசிராம் கோட்வாலுக்குப் பிறகு மிகவும் பிரபலமானது.[3]

பயன்பாடு[தொகு]

பள்ளி மற்றும் கல்லூரிகளில் திருமண விழாக்கள் மற்றும் பாரம்பரிய நாட்கள் போன்ற சிறப்பு நிகழ்வுகளில் இத்தலைப்பாகை பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. கோந்தல் கலையை நிகழ்த்தும் போது இளைஞர்கள் இதை அணிவார்கள். தலைப்பாகை மரியாதைக்குரிய சின்னமாக இருப்பதால், நினைவுப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. வரலாற்று நாடகங்கள் மற்றும் திரைப்படங்களில் புனேரி பகாதி பயன்படுத்தப்படுகிறது.[3]

அறிவுசார் சொத்துரிமை[தொகு]

10 உறுப்பினர்களைக் கொண்ட சிறீ புனேரி பகாதி சங்கம், இத்தலைப்பாகைக்கான புவிசார் குறியீடு (ஜிஐ) பெற , புவியியல் அடையாளப் பதிவேட்டில் விண்ணப்பித்திருந்தது.[3] அறிவுசார் சொத்துரிமைகளை ஊக்குவிக்கும் சீரியப் பணி ஆலோசனைக் குழு சார்பாக விண்ணப்பத்தை தாக்கல் செய்யப்பட்டது.[2] புனேரி பகாதியை அடையாளம் காணக்கூடியதாக மாற்றுவதும், அதன் அடையாளத்தையும் புனேரி கலாச்சாரத்தையும் பாதுகாப்பதும் இதன் நோக்கமாக இருந்தது. இதன் விளைவாக, 4 செப்டம்பர் 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4 ஆம் தேதியன்று தலைப்பாகைக்கு புவியியல் அடையாளத் தகுதி வழங்கப்பட்டது. தலைப்பாகை புனேவின் அதிகாரப்பூர்வ கலாச்சார அடையாளமாக மாறியது.[1][3][4][5][6] இதனால் புனேரி பகாதிக்கு அறிவுசார் சொத்துரிமை கிடைத்தது. புனேரி பகாதி என்ற பெயரில் புனேவுக்கு வெளியே தயாரிக்கப்பட்ட எந்த தலைப்பாகையும் விற்பனை செய்வது சட்டவிரோதமானது. புனேரி பகாதியுடன், டார்ச்சிலிங்கு தேநீர், பனாரசி புடவைகள், திருப்பதி லட்டூ போன்ற இந்திய தயாரிப்புகளுக்கு இந்த தகுதி வழங்கப்பட்டது.[4]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Indian association seeks IPR for 'Puneri Pagadi'". Business Standard. 7 April 2009. http://www.business-standard.com/india/news/indian-association-seeks-ipr-for-%5Cpuneri-pagadi%5C/354259/. "Indian association seeks IPR for 'Puneri Pagadi'". Business Standard. 7 April 2009. Retrieved 12 June 2012.
  2. 2.0 2.1 2.2 "Turban legend: Puneri Pagadi may soon get intellectual property tag". Mid-day. 6 April 2009. http://www.mid-day.com/news/2009/apr/060409-Pune-News-property-tag-Puneri-Pagadi-Turban-intellectual-property-rights.htm. "Turban legend: Puneri Pagadi may soon get intellectual property tag". Mid-day. 6 April 2009. Retrieved 13 June 2012.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 Shruti Nambiar (2 August 2011). "The Pagadi Unravelled". The Indian Express. pp. 1–2. http://www.indianexpress.com/news/the-pagadi-unravelled/825919/1. Shruti Nambiar (2 August 2011). "The Pagadi Unravelled". The Indian Express. pp. 1–2. Retrieved 13 June 2012.
  4. 4.0 4.1 4.2 "Puneri Pagadi gets GI tag; latest to join protected goods club". Zee News. 21 September 2009. http://zeenews.india.com/news/etc/puneri-pagadi-gets-gi-tag-latest-to-join-protected-goods-club_565357.html. 
  5. 5.0 5.1 "Puneri Pagdi obtains geographical indication status". OneIndia News. 3 January 2010. http://news.oneindia.in/2010/01/03/puneripagdi-obtains-geographical-indicationstatus.html. 
  6. 6.0 6.1 Chandran Iyer (22 September 2009). "Puneri Pagadi gets pride of place". Mid Day. http://www.mid-day.com/news/2009/sep/220909-Puneri-Pagadi-Geographical-Indication-Pune2.htm. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=புனேரி_பகாதி&oldid=3654786" இருந்து மீள்விக்கப்பட்டது