புனி பண்பாடு
புனி பண்பாடு Buni culture | |
---|---|
![]() புனி பண்பாட்டுப் பகுதிகள் | |
புவியியல் பகுதி | ஜகார்த்தா, மேற்கு ஜாவா |
காலம் | அண். 400 கிமு–100 கிபி |
இந்தோனேசிய வரலாறு |
---|
![]() |
காலவரிசை |
புனி பண்பாடு (ஆங்கிலம்: Buni Culture இந்தோனேசிய மொழி: Kebudayaan Buni) என்பது வரலாற்றுக்கு முந்தைய ஒரு களிமண் மட்பாண்ட பண்பாடாகும்.
இந்தப் பண்பாடு, வடக்கு மேற்கு ஜாவா கடற்கரையோரங்கள், ஜகார்த்தா மற்றும் பான்டென் ஆகியவற்றில் கிமு 400 முதல் கிபி 100 வரை வளர்ச்சிப் பெற்று இருந்தது.[1] கிபி 500 வரை நீடித்திருக்கலாம் என அறியப்படுகிறது.[2]
ஜகார்த்தாவின் கிழக்கே பெகாசி, பாபெலான், புனி கிராமத்தின் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருள் தளத்தின் பெயரால் இந்தப் பண்பாட்டிற்கும் பெயரிடப்பட்டது.
பொது
[தொகு]புனி கலாச்சாரம், வெட்டப்பட்ட வடிவியல் அலங்காரங்களுடன், வினோதமான மட்பாண்டங்களுக்குப் பெயர் பெற்றது.[3] தென்கிழக்கு ஆசியாவில், இந்தியாவின் தொல்லியல் சிறுசில்லி (Roulettes) பொருட்கள் இங்குதான் முதன்முதலில் கிடைத்தன. அதுவே ஒரு வரலாற்றுப் புள்ளியாகவும் பதிவாகி உள்ளது.
பிற்காலத்தில் களிமண் மட்பாண்டங்கள், மேற்கு ஜாவாவின் அன்யர் கிராமம் (Anyer); மற்றும் சிரபொன் (Cirebon) நகரத்திலும் கண்டுபிடிக்கப்பட்டன.[4]
கி.மு. 400 முதல் கி.பி. 100 வரையிலான உணவு மற்றும் பானக் கலன்கள் சார்ந்த கலைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும் அடக்கம் செய்யப் பட்டவர்களுக்கான பரிசுப் பொருட்களாக இருந்தன.[1]
சிறப்பியல்புகள்
[தொகு]புனி பண்பாட்டை புரோட்டோ-படாவி பண்பாடு (Proto-Batawi Culture) என்று வல்லுநர்கள் சிலர் விவரிக்கின்றனர்.[5] படாவி பண்பாடு என்பது ஜகார்த்தா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் படாவி மக்களுடன் தொடர்புடையது.
புனி பண்பாடு வரலாற்றுக்கு முந்தைய ஒரு சமூகமாகத் தொடங்கியது என்றும் கூறப்படுகிறது. ஆனால் கி.பி நான்காம் மற்றும் ஐந்தாம் நூற்றாண்டுகளில், அந்தப் பண்பாடு இந்து சமயத்துடன் ஒருங்கிணைந்ததால் மற்றொரு பண்பாடாக வளர்ச்சி கண்டது.[6]
இந்த இரண்டு பண்பாடுகளும் 100 முதல் 200 ஆண்டுகள் வரை இடைப்பட்டுள்ளன. இந்தப் பண்பாடுகள் ஜகார்த்தா, பத்துஜெயாவில் (Batujaya Archaeological Site) கட்டப்பட்ட கோயில் வளாகத்திலும்; பின்னர், வேறு இடங்களில் கட்டப்பட்ட இந்து கோயில் வளாகங்களிலும் சித்தரிக்கப்பட்டுள்ளன.[7]
காட்சியகம்
[தொகு]- புனி பண்பாட்டுக் காட்சிப் படங்கள் (400 கிமு–100 கிபி)
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Zahorka, Herwig (2007). The Sunda Kingdoms of West Java, From Tarumanagara to Pakuan Pajajaran with Royal Center of Bogor, Over 1000 Years of Propsperity and Glory. Yayasan cipta Loka Caraka.
- ↑ "Batujaya Temple complex listed as national cultural heritage". The Jakarta Post (in ஆங்கிலம்). 8 April 2019. Retrieved 2020-10-26.
- ↑ Manguin, Pierre-Yves and Agustijanto Indrajaya (2006). The Archaeology of Batujaya (West Java, Indonesia):an Interim Report, in Uncovering Southeast Asia's past. NUS Press. ISBN 9789971693510.
- ↑ Manguin, Pierre-Yves; Mani, A.; Wade, Geoff (2011). Early Interactions Between South and Southeast Asia: Reflections on Cross-cultural Exchange (in ஆங்கிலம்). Institute of Southeast Asian Studies. ISBN 9789814345101.
- ↑ Ooi, Keat Gin (2004). Southeast Asia: A Historical Encyclopedia, from Angkor Wat to East Timor. Santa Barbara, CA: ABC-CLIO. p. 878. ISBN 1576077705.
- ↑ Festschrift, R.P. Soejono (2006). Archaeology: Indonesian Perspective. Yayasan Obor Indonesia. p. 134. ISBN 9792624996.
- ↑ Glover, Ian; Bellwood, Peter; Bellwood, Peter S. (2004). Southeast Asia: From Prehistory to History. Oxfordshire: RoutledgeCurzon. pp. 237. ISBN 041529777X.
வெளி இணைப்புகள்
[தொகு]- Pierre-Yves Manguin and Agustijanto Indrajaya, "The Archaeology of Batujaya (West Java, Indonesia):an Interim Report", in Uncovering Southeast Asia's past: selected papers from the 10th International Conference of the European Association of Southeast Asian Archaeologists (Elisabeth A. Bacus, Ian Glover, Vincent C. Pigott eds.), 2006, NUS Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9971-69-351-8
- Miksic, John N., The Buni Culture, In: Southeast Asia, from prehistory tons history (Ian Glover dan Peter Bellwood eds.), London 2004, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-29777-X