புனித வாரம்
புனித வாரம் | |
---|---|
![]() குருத்து ஞாயிறு அன்று இயேசு வெற்றி ஆர்ப்பரிப்போடு எருசலேமில் நுழைதலில் புனித வாரம் தொடங்குகின்றது. தவக் காலத்தின் இறுதிவாரமான இது குருத்து ஞாயிறு முதல் பெரிய வியாழன் அதிகாலை வரை நீள்கின்றது. | |
வகை | கிறித்தவம் |
அனுசரிப்புகள் | குருத்து ஞாயிறு, புனித திங்கள், புனித செவ்வாய், புனித புதன், பெரிய வியாழன், புனித வெள்ளி, புனித சனி, உயிர்ப்பு ஞாயிறு |
நாள் | தவக்காலத்தின் கடைசிக் கிழமை |
நிகழ்வு | ஆண்டுதோறும் |
தொடர்புடையன | பாஸ்கா காலம் |
புனித வாரம் (Holy Week) என்பது கிறிஸ்தவ சமயத்தில் உயிர்ப்பு ஞாயிறுக்கு முன் உள்ள வாரத்தைக் குறிக்கும். இது குறுத்தோலை ஞாயிறன்று வெற்றி ஆர்ப்பரிப்போடு இயேசு எருசலேமில் நுழைதலின் நினைவோடு தொடங்குகின்றது. புனித புதன் அன்று இயேசுவை காட்டிக்கொடுப்பதற்கான சூழ்ச்சியும், புனித வியாழன் அன்று கடைசி இரவு உணவின் நினைவும், புனித வெள்ளி அன்று இயேசுவின் பாடுகளும், புனித சனிக்கிழமையில் கிறிஸ்துவின் மரணம் மற்றும் பாதாளத்தில் இறங்குவதும் நினைவு கூரப்படுகின்றது.[1][2][3] அனைத்து கிறிஸ்தவ மரபுகளிலும் ஆண்டு தோறும் இந்த நிகழ்வு வெவ்வேறு நாட்களில் அமையும் (நகரக்கூடிய நாள்). கிழக்கு கிறிஸ்தவத்தில் இதனை பெரிய வாரம் என்றும் அழைப்பர். இது இலாசர் சனிக்கிழமையினைத் தொடர்ந்து வரும் வாரமாகும், இது குறுத்தோலை ஞாயிறு மாலை தொடங்கி பெரிய சனிக்கிழமை மாலை முடிவடைகிறது. மேற்கத்திய கிறிஸ்தவத்தில், [upper-alpha 1] புனித வாரம் என்பது தவக்காலத்தின் ஆறாவதும், கடைசி வாரமுமாகும், இது குருத்து ஞாயிற்றுக்கிழமையில் தொடங்கி புனித சனிக்கிழமை முடிவடைகிறது.[5][3][1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ புனித வாரத்தைக் கடைப்பிடிக்கும் மேற்கத்திய கிறிஸ்தவப் பிரிவுகளில் கத்தோலிக்க திருச்சபை, லூதரனியம், மேற்கத்திய மரபு வழி, மொராவியன், ஆங்கிலிக்கம், இர்விங்கியன் மற்றும் யுனைடெட் புராட்டஸ்டன்ட் பிரிவுகளும், பல மெதடிச மற்றும் சீர்திருத்த பிரிவுகளும் அடங்கும்.[4]
- ↑ 1.0 1.1 Cooper, J.HB. (23 அக்டோபர் 2013). Dictionary of Christianity. Routledge. p. 124. ISBN 9781134265466. Retrieved 25 ஏப்ரல் 2014.
Holy Week. The last week in LENT. It begins on PALM SUNDAY; the fourth day is called SPY WEDNESDAY; the fifth is MAUNDY THURSDAY or HOLY THURSDAY; the sixth is GOOD FRIDAY; and the last 'Holy Saturday', or the 'Great Sabbath'.
- ↑ 2.0 2.1 Brewer, Ebenezer Cobham (1896). The Historic Notebook: With an Appendix of Battles. J. B. Lippincott. p. 669. Retrieved 25 ஏப்ரல் 2014.
The last seven days of this period constitute Holy Week. The first day of Holy Week is Palm Sunday, the fourth day is Spy Wednesday, the fifth Maundy Thursday or Holy Thursday, the sixth Good Friday or Holy Friday, and the last Holy Saturday or the Great Sabbath in Eastern Rite traditions.
- ↑ 3.0 3.1 Melton, J. Gordon (13 செப்டெம்பர் 2011). Religious Celebrations: An Encyclopedia of Holidays, Festivals, Solemn Observances, and Spiritual Commemorations [2 volumes] (in ஆங்கிலம்). ABC-CLIO. p. 527. ISBN 978-1-59884-206-7.
Lent (Ash Wednesday through Holy Saturday): The season of Lent begins with Ash Wednesday and lasts until the final Saturday before Easter, Holy Saturday. It includes "Holy Week," the week before Easter. For six weeks preceding Easter, it is a time of penitential prayer, fasting, and almsgiving to prepare for the celebration of the resurrection of Jesus on Easter Sunday. This season of Lent originally was also a time of preparation for baptismal candidates and those separated from the Church who were rejoining the community. Holy Week, the last week of Lent, commemorates the last week of the earthly life of Jesus Christ. It covers the events of his triumphal entry into Jerusalem, the last supper, the arrest, and his death by crucifixion. Beginning with the sixth Sunday of Lent, Holy Week includes Palm Sunday, Spy Wednesday, Maundy Thursday, Good Friday, and Holy Saturday.
- ↑ Crump, William D. (22 பெப்ரவரி 2021). Encyclopedia of Easter Celebrations Worldwide (in ஆங்கிலம்). McFarland. p. 128. ISBN 978-1-4766-4196-6.
- ↑ Blackwell, Amy Hackney (2009). Lent, Yom Kippur, and Other Atonement Days (in ஆங்கிலம்). Infobase Publishing. pp. 15–16. ISBN 978-1-4381-2796-5.
The last week of Lent is called Holy Week in the Western Churches, and Great and Holy Week in the Eastern. During this week, believers remember the events in the last week of Jesus Christ's life. These include Christ's entrance into Jerusalem and his suffering on the way to crucifixion, which are sometimes called the "Passion of Jesus Christ," or "Passion of Christ."
வெளி இணைப்புகள்
[தொகு]- "The historical places of the Holy Week" (in ஸ்பானிஷ்). igeo.tv.