புனித வனம்

ஆள்கூறுகள்: 23°13′3″N 72°40′1″E / 23.21750°N 72.66694°E / 23.21750; 72.66694
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனித வனம் (புனித் வன்)
வகைதாவரவியல்
அமைவிடம்காந்திநகர், குசராத்
ஆள்கூறு23°13′3″N 72°40′1″E / 23.21750°N 72.66694°E / 23.21750; 72.66694
திறக்கப்பட்டது2005
Owned byகுசராத் மாநில அரசாங்கம்

புனித வனம் (Punit Van) இந்தியாவின் குசராத் மாநிலத்தின் தலைநகரான காந்திநகரின் 19 ஆவது பிரிவில் அமைந்துள்ள தாவரவியல் பூங்கா ஆகும். 2005 ஆம் ஆண்டு குசராத் மாநில வனத்துறையால் விரிவுபடுத்தப்பட்டது. வனத்துறை பல ஏக்கர் பரப்பில் விண்மீன்கள், கோள்கள் மற்றும் சோதிடக் குறியீடுகள் அடிப்படையில் மரங்களை வளர்த்துள்ளது. 'புனித்' என்பதற்கு புனிதம் என்றும், 'வன்' என்பதற்கு வனம் என்றும் பொருள். இப்பூங்கா புனித வனம் என வழங்கப்படுகிறது. இது நிறுவப்படும்போது 3500 மரங்கள் இந்து புராணங்கள் கூறும் சோதிட குறியீடுகள் அடிப்படையில் நடப்பட்டன.[1]

அமைப்பு[தொகு]

இப்பூங்கா முக்கிய சுற்றுலா மையமாக அமையும் வகையில், நட்சத்திரா வனம், இராசி வனம், நவக்கிரக வனம், பஞ்சவதி வனம் எனப் பிரிக்கப்பட்டுள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. PTI (17 June 2005). "Gujarat banks on astrology to save trees". Business Standard. http://www.business-standard.com/india/news/gujarat-banksastrology-to-save-trees/214372/. பார்த்த நாள்: 28 April 2012. 
  2. TNN (22 March 2009). "Gandhinagar becomes capital perch". Times of India இம் மூலத்தில் இருந்து 6 ஜூலை 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120706235541/http://articles.timesofindia.indiatimes.com/2009-03-22/ahmedabad/28005064_1_migratory-birds-bird-lovers-long-tailed-shrike. பார்த்த நாள்: 28 April 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=புனித_வனம்&oldid=3221871" இலிருந்து மீள்விக்கப்பட்டது