புனித லூசியா பேராலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனித லூசியா பேராலயம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்கொட்டாஞ்சேனை, கொழும்பு, இலங்கை
சமயம்ரோமன் கத்தோலிக்கம்
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு1881
செயற்பாட்டு நிலைபயன்பாட்டில் உள்ளது

கொழும்பில் உள்ள புனித லூசியா பேராலயம் இலங்கையின் ரோமன் கத்தோலிக்கப் பேராயத்தின் பேராயரின் இருப்பிடம் ஆகும். இலங்கையின் தலை நகரமான கொழும்பு நகரின் வடகிழக்குப் பகுதியில் உள்ள கொட்டாஞ்சேனை என்னும் இடத்தில் இது அமைந்துள்ளது. 18,240 சதுர அடி பரப்பளவு கொண்ட இடத்தில் அமைந்துள்ள இப் பேராலயம், புனித லூசிக்கு அர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. ஒல்லாந்தர் காலத்தில் கத்தோலிக்கரின் வணக்கத்தலமாக இருந்த ஒரு சிறிய கட்டிடத்தில் இருந்தே இது தோற்றம் பெற்றதாகச் சொல்லப்படுகிறது.

குறிப்புகள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புனித_லூசியா_பேராலயம்&oldid=3765987" இலிருந்து மீள்விக்கப்பட்டது