புனித மேரி தேவாலயம், நிரணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிரணம் வல்லிய பள்ளி அல்லது புனித மேரி ஆர்த்தடக்ஸ் சிரிய தேவாலயம், நிரணம் என பிரபலமாக அறியப்படும் நிரணம் பள்ளி, என்பது கி.பி 54 இல் இயேசு கிறிஸ்துவின் பன்னிரண்டு திருத்தூதர்களில் ஒருவரான திருத்தூதர் தோமாவால் நிறுவப்பட்ட ஒரு தேவாலயம் ஆகும். இது நிரணம் மறைமாவட்டத்தின் கீழ் உள்ள தேவாலயம் ஆகும்.

வரலாறு[தொகு]

நிரணம் பள்ளி இந்தியாவின் பழமையான தேவாலயங்களில் ஒன்றாகும். இந்த தேவாலயம் கி.பி 54 இல் இயேசு கிறிஸ்துவின் பன்னிரண்டு அப்போஸ்தலர்களில் ஒருவரான புனித தோமாவால் நிறுவப்பட்டது என்று நம்பப்படுகிறது. அதன் பின்னர் தேவாலயம் பல முறை புனரமைக்கப்பட்டது. தேவாலயத்தில் உள்ள கற்கள் கி.பி 1259 இல் புனரமைத்ததைக் காட்டுகின்றன. இயேசு கிறிஸ்துவின் பன்னிரண்டு புனிதத் தூதர்களில் ஒருவரான புனித தோமா கி.பி. 52 ஐ ஒட்டி கொடுங்ஙல்லூர் அருகே மலங்கராவில் வந்து இறங்கினார். அவர் ஏழரை தேவாலயங்களை நிறுவினார். அவை கொடுங்ஙல்லூர், பலையூர், கோட்டகாவே, கொக்கமங்கலம், நிரணம், சாயல், கொல்லம் மற்றும் திருவிதாங்கோடில் உள்ள அரை தேவாலயம் போன்றவை ஆகும். வடகிழக்கு திசையில் கொல்லமில் இருந்து செல்லும் வழியில் அவர் கடல் வழியாக நிரணம் "திரிக்பலேஸ்வரம்" வந்தடைந்தார். அவர் பட்டமுக்கில், மற்றும் தயில் என்ற இரண்டு இந்து பிராமண குடும்பங்களையும், மங்கி மற்றும் மடதிலன் என்ற இரண்டு நாயர் குடும்பங்களையும் கிறிஸ்தவ சமயத்திற்கு மாற்றினார். புனித தோமாவால் கிறிஸ்தவ சமயத்துக்கு மாற்றப்பட்ட முதல் நான்கு குடும்பங்கள் இவை. பட்டமுக்கிலின் குடும்ப உறுப்பினர்களுக்கும் அவர் ஆசாரிய அதிகாரங்களை வழங்குகிறார். பட்டமுக்கில் குடும்பத்தைச் சேர்ந்த பாதிரியார்கள் அங்கேயே தங்கி ஆசாரியத்துவத்தை செய்து பழங்காலத்தில் நிரணம் தேவாலயத்தையும் அதன் சொத்துக்களையும் நிர்வகித்துவந்தனர்.

படவரிசை[தொகு]

திருத்தூதர் தோமா தோமத்து கடவு வழியாக நிரணத்தை அடைந்தார்