உள்ளடக்கத்துக்குச் செல்

புனித புதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனித புதன்
ஸ்பேயினில் புனித வார பவனி (2015)
பிற பெயர்(கள்)உளவு புதன்
பெரிய புதன்
புனித புதன்
கடைப்பிடிப்போர்கிறித்தவர்கள்
வகைகிறித்தவம்
முக்கியத்துவம்யூதாஸின் பேரம் மற்றும் இரண்டு கடன்காரர் உவமையினை நினைவுகூர்கிறது
நாள்உயிர்ப்பு ஞாயிறுக்கு முன் வரும் புதன்
நிகழ்வுஆண்டுதோறும்
தொடர்புடையனபுனித வாரம்
காடிஸ், ஸ்பெயினில் புனித புதன் (மியர்கோல்ஸ் சாண்டோ).

கிறிஸ்தவத்தில், புனித புதன் என்பது சீடர்களிடையே ஒரு ரகசிய உளவாளியாக இருக்க யூதாஸ் பேரம் பேசியதை நினைவுகூறும் நாள் ஆகும்.[1] இது உளவு புதன்கிழமை,[2] அல்லது நல்ல புதன்கிழமை (மேற்கத்திய கிறிஸ்தவத்தில்), [3] மற்றும் பெரிய மற்றும் புனித புதன்கிழமை (கிழக்கு கிறிஸ்தவத்தில்) என்றும் அழைக்கப்படுகிறது.

விவிலியத்தில்

[தொகு]

புதிய ஏற்பாட்டின் புனித வார விவரிப்பில், குருத்தோலை ஞாயிறுக்குப் பிறகு, யூத தலைமைச் சங்கம் ஒன்று கூடி, பஸ்கா விழாவுக்கு முன்பு இயேசுவைக் கொல்ல சதி செய்தது.[4] இயேசு இறப்பதற்கு முந்தைய புதன்கிழமை, பெத்தானியாவில், தொழுநோயாளியான சீமோனின் வீட்டில் இருந்தார். அங்கே பந்தியில் அமர்ந்திருந்தபோது இலாமிச்சை நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழுடன் மரியா பெண் ஒருவர் வந்தார். அவர் அப்படிகச் சிமிழை உடைத்து இயேசுவின் தலையிலும் கால்களிலும் பூசினார்.[5] ஆனால், அங்கிருந்த இயேசுவின் சீடர்கள் கோபமடைந்து, எண்ணெயை ஏன் விற்று ஏழைகளுக்குக் கொடுக்கவில்லை என்று கேட்டார்கள்.[6] யூதாஸ் இஸ்காரியோத்து அந்தப் பணத்தைத் தனக்காக வைத்துக் கொள்ள விரும்பினான்.[7][8] இந்நிகழ்வுக்குப் பின்னர் யூதாசு தலைமைச் சங்கத்திடம் சென்று, பணத்திற்கு ஈடாக இயேசுவை அவர்களிடம் ஒப்படைக்க பேரம் பேசினான். அதுமுதல் யூதாசு இயேசுவைக் காட்டிக்கொடுக்க ஒரு வாய்ப்பைத் தேடினான்.[9]

புனித புதன்கிழமை அன்று இயேசுவைக் காட்டிக் கொடுக்க யூதாசு முடிவெடுத்ததால் அந்த நாள் உளவு புதன்கிழமை என்றும் அழைக்கப்படுகிறது. [10] [11][12]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Sacred Space: The Prayer Book 2020 (in ஆங்கிலம்). Loyola Press. 2019. ISBN 978-0-8294-4897-9.
  2. McKim, Donald K. (1996). Westminster Dictionary of Theological Terms. Westminster John Knox Press. p. 269. ISBN 9780664255114. Spy Wednesday: The Wednesday of Holy Week, so named from its being the day on which Judas Iscariot betrayed Jesus Christ (Matt. 26:14–16).
  3. Halsey, William Darrach (1981). Collier's Encyclopedia with Bibliography and Index (in ஆங்கிலம்). Macmillan Educational Corporation. Among English-speaking peoples the Wednesday of Holy Week is called variously Good Wednesday, Holy Wednesday, Spy Wednesday (referring to the activities of Judas Iscariot), and Wednesday before Easter.
  4. Matthew 26:3–5; Mark 14:1–2; Luke 22:1–2
  5. Matthew 26:6–7; Mark 14:3; John 12:3–4
  6. Matthew 26:8–9; Mark 14:4–5; John 12:5
  7. John 12:6
  8. Oppenheimer, Mike. "The Betrayer Judas Iscariot". Let Us Reason Ministries. Retrieved 27 March 2013.
  9. Matthew 26:14–16; Mark 14:10–12; Luke 22:3–6
  10. "spy, n.", OED Online, Oxford University Press, December 2013, retrieved 15 Dec 2013, Spy Wednesday n. in Irish use, the Wednesday before Easter.
  11. Packer, George Nichols (1893), Our Calendar: The Julian Calendar and Its Errors, how Corrected by the Gregorian, Corning, NY: [The author], p. 112, retrieved 15 Dec 2013, Spy Wednesday, so called in allusion to the betrayal of Christ by Judas, or the day on which he made the bargain to deliver Him into the hands of His enemies for thirty pieces of silver.
  12. McNichol, Hugh (2014). "Spy Wednesday conversion to Holy Wednesday". Catholic Online. Retrieved 10 May 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புனித_புதன்&oldid=4275537" இலிருந்து மீள்விக்கப்பட்டது