புனித பீட்டர் மற்றும் புனித பவுல் சிரிய மரபுவழித் திருச்சபை தேவாலயம், கோலன்சேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனித பீட்டர் மற்றும் புனித பவுல் சிரிய மரபுவழித் திருச்சபை தேவாலயம்
St. Peter's and St. Paul's Orthodox Syrian Church
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்இந்தியாஇந்தியா, கேரளம், கோலன்சேரி
சமயம்மலபார் சிரியன் மரபுவழித் திருச்சபை தேவாலயம்
மாகாணம்கேரளம்
மாவட்டம்எர்ணாகுளம்

புனித பீட்டர் மற்றும் புனித பவுல் சிரிய மரபுவழித் திருச்சபை தேவாலயம் (St. Peter and St. Paul's Church, Kolenchery) என்பது இந்தியாவின், கேரளத்தின், எர்ணாகுளத்தில் உள்ள கோலன்சேரியில் அமைந்துள்ள ஒரு கிருத்துவ தேவாலயம் ஆகும். இது ஏழாம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. [1] பின்னர் அண்மையில் 1963 இல் இந்த தேவாலயம் மீண்டும் கட்டபட்டது. இதில் பல அழகிய ஓவியங்கள் உள்ளன.

மலங்கரா சிரிய மரபுவழி திருச்சபை தேவாலயத்திற்கும் யாக்கோபிய சிரியன் கிறிஸ்தவ தேவாலயத்திற்கும் இடையிலான பிரச்சினைகள் காரணமாக தேவாலயம் பல ஆண்டுகளாக மூடப்பட்டிருந்தது. நீதிமன்ற உத்தரவையும் வாக்குறுதிகளையும் அமல்படுத்தாமல் இருந்த அரசாங்கத்தின் நிலையை பல ஆண்டுகளாக தேவாலய உறுப்பினர்கள் எதிர்த்து வந்தனர். உச்சநீதிமன்றத்தின் கூற்றுப்படி, 2016 பிப்ரவரி 16, அன்று, மலங்கரா சிரிய மரபுவழி திருச்சபை தேவாலயம் மற்றும் யாக்கோபிய சிரிய கிறிஸ்தவ தேவாலயம் ஆகியவற்றிற்கு இணையாக தேவாலயம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்திய உச்ச நீதிமன்ற உத்தரவுபடி 2017 ஜூலை 3 முதல் தேவாலயம் முற்றிலும் மலங்கரா சிரிய மரபுவழி திருச்சபை தேவாலயத்திற்கு சொந்தமானது என்று ஆனது.

ஏழாம் மார் தோமாவின் கல்லறை[தொகு]

திருச்சபைகளுக்குச் சென்றபோது, ஏழாம் மார் தோமா கண்டநாடு தேவாலயத்தில் இறந்தார்; அவரது உடல் கடமட்டம் தேவாலயத்திற்கு கொண்டு செல்வதற்காக கொண்டு சென்றனர், வழியில் உடலை கோலஞ்சேரி தேவாலயத்தில் மரியாதை செலுத்துவதற்காக கொண்டு சென்றனர். அவர் சிலகாலம் கோலஞ்சேரி தேவாலயத்தின் [2] குடியிருப்பில் தங்கி இருந்ததால், சடலத்தை அங்கேயே அடக்கம் செய்யுமாறு பாரிஷனர்கள் கோரினர். இந்தக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு, மார் தோமா VII 1809 ஆம் ஆண்டு 22 ஆம் தேதி மிதுனம் (ஜூலை 5) அன்று கோலஞ்சேரி தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார். [3]

குறிப்புகள்[தொகு]

  1. "Fractured Faith: Two church factions clash over a disputed shrine in Kerala". இந்தியா டுடே. 24 September 2011. http://indiatoday.intoday.in/story/kerala-two-church-factions-clash-over-a-disputed-shrine/1/152422.html. 
  2. "Kolenchery Church Updates".
  3. "Spiritual forefathers". pakalomattamfamily.org. Archived from the original on 8 November 2014.

வெளி இணைப்புகள்[தொகு]